அரசுக் கொள்கைகளால் தேசத்தின்
குடிமக்களுக்கு - குறிப்பாக வருங்காலத் தலைமுறையினருக்கு - இழைக்கப்பட்ட
மிகப் பெரிய வஞ்சனைகளைப் பட்டியலிட்டால், கல்வி கடைச்சரக்காக
மாற்றப்பட்டிருப்பது நிச்சயமாக அந்தப் பட்டியலில் இடம்பெறும். இதை
எதிர்த்து நடந்துகொண்டிருக்கும் போராட்டங்களின் பலனாக, கல்வி உரிமைச்
சட்டத்தைக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது.
ஆனால்,
அந்தச் சட்டமும் கூட, பள்ளிக் கல்விப் பொறுப்பை முற்றிலுமாக அரசு ஏற்பது
என்பதற்கு
மாறாக, தனியார் ஆதிக்கம் தொடர்வதற்கு வழிவகுப்பதாகவே இருக்கிறது என்று
கல்வி உரிமை இயக்கத்தினர் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.தனியார் பள்ளிகள்
ஒவ்வொரு கல்வியாண்டி லும் மாணவர் சேர்க்கையின்போது 25 விழுக்காடுஇடங்களை,
பொருளாதாரத்திலும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய குடும்பங்களின்
குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை சேர்த்ததன் மூலம்,
அனைவருக்கும் தரமான கல்வியைஉறுதிப்படுத்திவிட்டது போன்ற தோற்றம்தான் ஏற்
படுத்தப்பட்டது.
ஆனால், இந்த விதியைச் செயல்படுத்த பெரும்பாலான நிர்வாகங்கள் தயாராக இல்லை,
சில நிர்வாகங்கள் அரை குறையாகப் பெயரளவுக்கு மட்டுமே செயல்படுத்துகின்றன;
மிகச் சில பள்ளிகளில்தான் இந்த விதி முழுமையாகப்
பின்பற்றப்படுகிறது.தமிழகத்தில் இந்த மாதம் 3ம் தேதியிலிருந்து இந்த இட
ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்பட வேண்டும்
என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே ஆணையிட்டிருந்தது. ஆனால் இந்த ஆணை
குறித்துபொதுமக்களுக்கு - குறிப்பாக எந்தப் பிரிவுகளைச்சேர்ந்த
மக்களுக்குத் தெரிய வேண்டுமோ அவர்களுக்கு - முறையாகச் சொல்லப்படவில்லை.
அதற்கான விளம்பரங்கள் எதையும் அரசு செய்யவில்லை, நிர்வாகங்களும்
செய்யவில்லை. கல்வி உரிமைச் செயல்பாட்டாளர்கள் மூலம் தகவலறிந்த
குடும்பங்கள் தங்கள் பகுதிகளில் இருக்கிற தனியார் பள்ளிகளுக்குச்
சென்றபோது, அந்தப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.பல நிர்வாகங்கள்
வேண்டுமென்றேதான் இப்படிச் செய்திருக்கின்றன என்பதை, அந்தப் பள்ளிகளில்
இந்தப் பிரிவு மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் எதுவும் தயாராக இல்லை
என்பதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.
திறந்திருந்த பள்ளிகளிலும் சிலவற்றில் மட்டும்தான் விண்ணப்பங்கள்
வைக்கப்பட்டிருந்தன. பின்தங்கிய நிலையில் உள்ள பெற்றோர் பல பள்ளிகளுக்குச்
சென்றபோது, “இங்கேயெல்லாம் வராதீர்கள், உங்கள் குழந்தைகளை நாங்கள்
எடுத்துக்கொள்ளப்போவதில்லை,” என்று வெளிப்படையாகவே
சொல்லப்பட்டிருக்கிறது.கடந்த ஆண்டுகளில் இப்படிப்பட்ட பள்ளிகள்மீது
நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாஎன்பதே யாருக்கும் தெரியாது.
அப்படிநடவடிக்கை ஏதேனும் எடுக்கப்பட்டிருக்கு மானால் அதை பள்ளிக்கல்வித்
துறையும் அரசும் பகிரங்கமாக வெளியிட வேண்டும்.
அடுத்து, தற்போதைய தேர்தல் காலதடையைக் காரணம் காட்டி, மாணவர்கள் சேர்க்கை
விபரங்களை பள்ளிக்கல்வித்துறை வெளி யிடாமல் இருக்கிறது. இதுவும் அந்த
நிர்வாகங் களுக்கு சாதகமாகிவிடுகிறது. ஆகவே, பள்ளிக் கல்வித்துறைக்கு
இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற வேண்டு கோளை
தேர்தல் ஆணையம் ஏற்று உரிய ஆணைகளைப் பிறப்பிக்க வேண்டும். அடிப்படையில்,
பொதுப்பள்ளி முறையை வலியுறுத்துவதற்கான இயக்கம் வலுப்பெற வேண்டியதன்
தேவையைத்தான் இந்த நிலைமைகள் வலியுறுத்துகின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...