தமிழகத்தில், ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள, 16 ஆயிரம் ஊழியர்கள், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதுகுறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் கூறியதாவது:
தமிழகத்தில், 39 தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், சட்டசபை தொகுதி
வாரியாக நியமிக்கப்பட்டுள்ள, 234 முதன்மை உதவி தேர்தல் அலுவலர்கள், ஓட்டு
எண்ணும் மையத்தில் பணியாற்ற உள்ள,
42 ஒருங்கிணைப்பு அலுவலர்கள் உள்ளனர். ஓட்டு எண்ணும்
மையங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்; ஓட்டுப்பதிவு இயந்திரத்தை
திறப்பது எப்படி; அதில் பதிவான ஓட்டுகளை எண்ணுவது எப்படி; அவற்றை
கணக்கிடுவது எப்படி என, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நாளை,
சென்னையிலும், 6ம் தேதி கோவை; 7ம் தேதி காலையில் திருச்சி, மாலையில்
மதுரையிலும், பயிற்சி வகுப்பு நடக்கும். இதில், நான் கலந்து கொள்கிறேன்.
ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், தபால் ஓட்டுகளை எண்ண, ஒரு மேஜை,
ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எண்ண 14 மேஜைகள் போடப்படும்.
ஒவ்வொரு மேஜையிலும், நான்கு ஊழியர் இருப்பர். தேர்தல் பணிக்கு தேர்வு
செய்யப்பட்ட ஊழியர்களில் இருந்து, 16 ஆயிரம் பேர், ஓட்டு எண்ணிக்கை
பணிக்கு, குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு எந்த தொகுதி
என்பது, ஓட்டு எண்ணிக்கைக்கு முந்தைய நாள், குலுக்கல் முறையில் முடிவு
செய்யப்படும். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும், மே 16, காலை 5:00 மணிக்கு, எந்த
மேஜையில், எந்த ஊழியர் இருப்பார் என்பதும், குலுக்கல் முறையில் முடிவு
செய்யப்படும். ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்கள், மே 16, காலை, 5:00
மணிக்கு முன், வந்து விட வேண்டும். வேட்பாளர்களின் ஏஜன்ட்கள், 8:00
மணிக்குள் வந்து விட வேண்டும். 'ஓட்டு எண்ணிக்கை ரகசியத்தை, வெளியிட
மாட்டேன்' என, அவர்கள் உறுதிமொழி எடுத்த பிறகு, ஓட்டு எண்ணிக்கை துவங்கும்.
இவ்வாறு, பிரவீன்குமார் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...