மேனிலைப் பள்ளித் தேர்வு முடிவுகளில்
வழக்கம்போல மாணவியர் அதிகளவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதும்,
சென்ற ஆண்டைக் காட்டிலும் 2.5% தேர்ச்சி அதிகரித்து இருப்பதும்
வெளிப்படையாகத் தெரிபவை. இருப்பினும் இந்த தேர்வு முடிவுகள் சொல்லாமல்
சொல்லும் தகவல்கள் மிகவும் கவலைக்கு இடமளிப்பவை.
முதலாவதாக, தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ள 133 மாணவர்களில் (94 மாணவிகள், 39 மாணவர்கள்) ஒருவர்கூட அரசுப் பள்ளியைச் சேர்ந்தவர் அல்ல. இரண்டாவதாக, தேர்ச்சி விகிதம் அதிகரித்துவிட்டதாக கூறிக்கொண்டாலும், கூட்டுமதிப்பெண் 60 விழுக்காடு (அதாவது 720 மதிப்பெண்களுக்கும் அதிகமாக) எடுத்துள்ள மாணவர்கள் 56 விழுக்காடு மட்டுமே
ஆக, அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் மிகவும்
குறைந்துகொண்டே போகிறது என்பதைக் காணுறும் அதேவேளையில், தேர்ச்சி பெற்றுள்ள
மாணவர்களில் 54% பேர் 720 மதிப்பெண்களுக்கும் குறைவாக, விடைத்தாள்
மதிப்பீட்டாளர்களால் கருணை மதிப்பெண் தரப்பட்டு, ஜஸ்ட் பாஸ் ஆனவர்களே
அதிகம் என்பதைக் காட்டுகிறது.
சென்ற ஆண்டு அதிகளவில் மாணவர்கள் 100%
மதிப்பெண் பெறமுடியாதபடி வினாத்தாள் கடினமாக இருந்தது என்று பலரும் புகார்
கூறியதால் இந்த ஆண்டு வினாத்தாள் எளிமையாக இருந்தது. அதனால்தான் சென்ற
ஆண்டு 36 பேர் மட்டும் 100% எடுத்த இயற்பியல் தேர்வில் இந்த ஆண்டு 2,710
பேர் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதம் தவிர அனைத்து பாடங்களிலும் இந்த
ஆண்டு 100% மதிப்பெண் பெற்றோர் அதிகம். இந்த அளவுக்கு வினாத்தாள் எளிமையாக
இருந்தபோதிலும், 720 மதிப்பெண்களுக்கு குறைவாக பாதி பேர் தேர்ச்சி
பெற்றிருப்பார்கள் என்றால், அவர்களின் கதி என்ன?
ஆசிரியர் நியமனங்களில் தகுதி
மதிப்பெண்களுக்கு எதிராக போராட்டங்கள், வழக்குகள் தொடுத்து, அரசை
நிர்பந்தப்படுத்தி, மதிப்பெண்களில் தளர்வு பெற்றிருக்கும் இந்த வேளையில்,
அரசுப் பள்ளியில் ஒரு மாணவர்கூட இந்த 133 பேரில் காணப்படவில்லை
என்கின்றபோது, தகுதி மதிப்பெண் மிகவும் தளர்த்தப்பட்டு நியமனம்
செய்யப்படும் ஆசிரியர்களால் அரசுப் பள்ளிகளில் எத்தகைய கல்வித்தரம்
இருக்கப்போகிறது என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
இந்த தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம்
பெற்றுள்ள மாணவி சுஷாந்தியின் தந்தை ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் என்றாலும்,
அவரும்கூட ஒரு தனியார் பள்ளி மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார்.
அப்படியானால் சாதாரண மக்களின் நிலைமை என்னவாக இருக்கும்? அவர்களின் தேர்வு
எதுவாக இருக்கும்? தன் மகள் முதலிடம் பெற்றதற்காக அந்தத் தந்தை
பெருமைப்படக்கூடாது. தனியார் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்ததற்கு
வெட்கப்பட வேண்டும். அவர் மட்டுமல்ல, தங்கள் குழந்தைகளைத் தனியார்
பள்ளிகளில் சேர்க்கும் அத்தனை அரசுப் பள்ளி ஆசிரியர்களும்!
அரசுப் பள்ளிகளில் நன்றாகப் படிக்கும்
மாணவர்களை சலுகைகள் அளித்தும் இலவச உணவு உறைவிடம் அளித்தும் தனியார்
பள்ளிகள் கொண்டுபோய் தங்கள் நிறுவனத்தின் மூலம் அவர்களை அதிக மதிப்பெண்
பெறச்செய்து, தங்கள் வணிகத்தை பெருக்கிக்கொள்கிறார்கள் என்பது அரசுப் பள்ளி
ஆசிரியர்களின் வாதம். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன்
கற்பித்தலில் ஈடுபடுவதில்லை என்பதைக் கண்ணெதிரே காண்பதால்தான் பெற்றோர்கள்
அதற்கு இணங்குகிறார்கள் என்பதும் நிஜம்தானே?
தனியார் பள்ளிகள் பிளஸ் 1 ஆண்டிலேயே பிளஸ் 2
பாடத்தை நடத்தி, மாணவர்கள் மனதில் பாடங்களை உருவேற்றி விடுகிறார்கள்.
இதையே அரசுப் பள்ளிகளும் செய்வது இயலாது. இதற்கு ஒரே மாற்று, பிளஸ் 2
படிப்பை, நான்கு பருவத் தேர்வுகளாக மாற்றி, நான்கு பருவத் தேர்வுகளின்
மொத்த மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் படுத்தினால், அரசுப் பள்ளிகளும்
தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டியிட வாய்ப்பாக அமையும். மாணவர்களும்,
அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளை எழுதும் திறன் பெறுவார்கள்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் ஒரு
சிறப்பு உறைவிடப் பள்ளியை உருவாக்கி, மாவட்ட அரசுப் பள்ளிகளில் 10ஆம்
வகுப்பில் 90% மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அனைவரையும் அதில் சேர்த்து,
திறமையான ஆசிரியர்களைக்கொண்டு இந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
கொடுத்தால், தனியார் பள்ளிகளுக்கு இணையான இலக்கு சார்ந்த போட்டியை
சந்திக்கவியலும்.
வெளியாகி இருப்பது தேர்வு முடிவு மட்டுமல்ல,
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பாடம். மக்கள் நம்பிக்கை இழக்கும் முன்பாக
களத்தில் இறங்கியாக வேண்டிய கட்டாயம் அரசுப் பள்ளிகளுக்கும் கல்வித்
துறைக்கும் உள்ளது. இறங்கினால் மேன்மை; இல்லையேல் எய்துவர் எய்தாப் பழி.
அரசு பள்ளி ஆசிரியர்கள் நன்றாகவே பணி புரிகிறார்கள்
ReplyDeleteஓவ்வொரு தடவையும் பொதுத் தேர்வு முடிவுகள் வந்தவுடன் அரசு பள்ளி ஆசிரியர்கள் விமர்சிக்கப் படுகிறார்கள். ஆனால் உண்மையில் அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சிக் குறைவிற்கு காரணங்களை யாரும் அலசி ஆராய்வதில்லை.
ஒரு பள்ளியின் தேர்ச்சி விகிதம் என்பது ஆசிரியர் எடுக்கும் முயற்சியால் மட்டுமே வருவதில்லை. மாணவர்கள் உழைப்பு, பெற்றோர்களின் அக்கறை , ஆசிரியர்களின் வழிகாட்டுதல் போன்ற அம்சங்களே தேர்ச்சி விகிதத்தை கொடுக்கும்.
குறைந்த காரணங்கள்.
1. அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதில் வடிகட்டும் முறையை கடைபிடிக்க முடியாது.
வருகின்ற மாணவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சேர்த்துக் கொள்ளவேண்டும்.
2. மாணவர்களை 9 ஆம் வகுப்பு வரை fail பண்ண முடியாது. மேலும் இதுவரை பொதுத்தேர்வு
என்று ஒன்று இல்லாததால் பலவகை பட்ட மாணவர்களையும் பத்தாம் வகுப்பில் தான்
ஆசிரியர்கள் கையாள வேண்டியுள்ளது.
3. இது அரசு பள்ளிகளுக்கு மட்டுமே உள்ள பிரச்சனை. மாணவர்களை அடிக்கக் கூடாது. திட்டக்
கூடாது. எதாவது பிரச்சனை என்றால் பெற்றோர்களை அழைத்தால் அவர்களும் மாணவர்கள்
நலன் கருதி ஒரு சிலர் மட்டுமே வருவார்கள்.
4. பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் அரசியல் அடிப்படையில் போய் விட்டதால் அதனாலும் ஒரு
பலனும் இல்லை
5. மேலதிகாரிகள் பெரும்பாலும் நேரடியாக மாவட்ட கல்வி அதிகாரியாக தேர்வு
செய்யபடுவதால் வெறும் புள்ளி விபரங்களை வைத்து ஆய்வு செய்பவர்களாக இருக்கிறார்களே
தவிர உருப்படியான ஆலோசனைகளை தரமுடியாத நிலையில் தான் உள்ளார்கள்.
6 தலைமை ஆசிரியர்கள் தனது பள்ளி சூழ்நிலைக்கு ஏற்ப நிருவகிக்க எந்த சுதந்திரமும் இல்லை.
7. வேண்டுமானால் பிரச்சனைக்கு உரிய சில பள்ளிகளை தரம் உயர்த்தி மாவட்ட கல்வி
அதிகாரிகளை தலைமை ஆசிரியர்களாக நியமித்து தேர்ச்சி விகிதத்தை ஒரு சவாலாக ஏற்று
உயர்த்த முயலலாம்.
எல்லாவற்றிக்கும் மேலாக ஆசிரியர் நியமனமத்தில் அரசியல் தலையீடு , ஆசிரியர்களை
வேறு பணிகளுக்கு அனுப்புவது, தேவை இல்லாத நடைமுறைக்கு ஒவ்வாத ஆய்வுகள் இவை எல்லாம் உயர்ந்த தேர்ச்சி விகிதம் அரசு பள்ளிகள் அடைய முடியாததற்கு காரணங்கள்.
இதையும் தாண்டி சில பள்ளிகள் உயர்ந்த தேர்ச்சி விகிதங்கள் காட்டியுள்ளன.
மொத்தத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பெருமபான்மையானவர்கள் நன்றாகவே பணி புரிகிறார்கள். குறையை எங்கோ வைத்துக் கொண்டு ஆசிரியர்களை குறை சொல்வது சரியல்ல
Super sir this is real fact
DeleteNethi adi, dear padasalai please forward this to dinamani and all media
Deleteஆசிரியர் பற்றாகுறை முக்கிய. காரணம் ஆசிரியர் நியமனம் தாமதம் இல்லாமல் உடனடி நியமனம் ஆவசியம்
ReplyDelete+2 வகுப்புத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்தவர்களில் 99 சதவீதத்தினர் தனியார் பள்ளியில் பயின்றவர்கள். அவர்களின் பெரும்பாலானோரின் பெற்றோர், அரசு பள்ளி ஆசிரியர்கள் . அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இன்று நேற்றல்ல, காலம் காலமாய் நிகழ்ந்து வருவது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர் என்பதே மக்களின் பொதுவான குற்றச்சாட்டு.
ReplyDeleteஅரசாங்க மருத்துவர்கள் தங்கள் குழந்தைகளை மேலான சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் அனுமதிப்பதில்லையா? அதனால் அவர்களுக்கு அரசு மருத்துவர்களின் மீதும், அவர்களின் திறமையின் மீதும் நம்பிக்கையில்லை என்று அர்த்தமா? அரசாங்க மருத்துவமனைகளில் தகுந்த வசதிகள் இல்லாதபோது தனியார் மருத்துவமனையை நாடுவதில் தவறென்ன இருக்க முடியும்?
ஒரு நாளில் குறைந்தபட்சம் அரைமணி நேரம் பயணிக்கக் கூடிய பேருந்துகளில்கூட வீடியோ , ஆடியோ குளிர்சாதன வசதி என்று ஆயிரம் வசதிகளை எதிர்ப்பார்க்கும் மக்கள், அரசு பேருந்துகள் காலியாகவே இருந்தாலும் அதை தவிர்த்து தனியார் பேருந்துகளில் முண்டியடித்து பயணிப்பதில்லையா? அதற்காக, நாம் மக்களை குறை கூறுகிறோமா? அரைமணி நேர பயணத்திற்கே ஆயிரம் வசதிகள் எதிர்ப்பார்க்கும் நாம், தங்கள் குழந்தைகள் ஆண்டுமுழுவதும் பயிலக்கூடிய பள்ளிகள் அடிப்படை கட்டமைப்புகளுடனும் மேலான வசதிகளுடனும் இருக்கவேண்டும் என்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை மட்டும் ஏன் குறை கூற முற்படுகிறோம்?
சுத்தமான குடிநீரும் கழிப்பறை வசதிகளும் கொண்ட தூய்மையான ஆரோக்கியமான சூழலில் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்பது எல்லா விதமான பெற்றோரின் எதிர்ப்பார்ப்பும் தானே? இதில் அரசுப் பள்ளி ஆசிரியர், மற்ற பெற்றோர் என்ற பாகுபாடு ஏன்?
அரசுப் பள்ளிகளில் தரமான கற்பித்தல் நடைபெறுவதில்லை என்பதும், தனியார் பள்ளிகளில் நல்ல தேர்ச்சி வருகின்றது என்பதும் ஒரு மாயை. ஒரு வீட்டில் இருக்கும் இரு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்றாக உணவு உட்கொள்பவனாகவும், அடுத்த குழந்தை சாப்பிடவே மறுப்பவனாகவும் இருக்கின்றனர். இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி உணவுதான்; ஒரே மாதிரி சுவைதான்; ஆனால், ஒரு குழந்தை மட்டும் சாப்பிட மறுக்கும்போது, அதற்காக நாம் அந்தத் தாயின் சமையலை குறை கூறவியலுமா? தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் அந்த முதல் குழந்தையை போல. அவர்களை யார் வேண்டுமானாலும் பயிற்றுவிக்க முடியும்? ஆனால், அரசு பள்ளிகளில் பயிலும்
குழந்தைகள் இரண்டாவது குழந்தையைப் போல. இவர்களை பயிற்றுவிப்பவர்கள்தான் திறமைசாலிகள்.
தேர்வு முடிவுகள் வந்த சில நாட்களுக்கு மட்டுமே அரசு பள்ளிகள் மீது தங்கள் பார்வையை வீசும் ஊடகமும், கருத்தாளர்களும் சாதாரண நாட்களில் பள்ளியை எட்டிப் பார்ப்பது உண்டா? பிள்ளைகளை கடிந்து ஒரு வார்த்தை பேசக்கூடாது, தண்டிக்கக் கூடாது, மீறினால் சிறைவாசம் என்று ஆசிரியர்களுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு மாணவர்களுக்கு அளித்திருக்கும் கட்டுப்பாடில்லா சுதந்திரம் அவர்களை தறிக்கெட்டு அலையவிட்டு இருப்பதையாவது அறிவார்களா?
அரசு கொடுக்கும் இலவசங்களை பெற மட்டும் பள்ளிகளுக்கு அவசரமாய் வருகைத் தரும் பெற்றோர்கள் இவற்றை கட்டுப்படுத்த ஏன் முயல்வதில்லை? பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்திற்கு எத்தனை பெற்றோர் தவறாமல் வருகைபுரிகின்றனர்? இப்படிக் கட்டமைப்பு வசதியிலும் ஒழுக்கத்திலும் மோசமாகவே பெரும்பாலான அரசுப் பள்ளிகள் இருக்கும் சூழலில், எந்த அரசுப் பள்ளி ஆசிரியப் பெற்றோர் மனமுவந்து அரசுப் பள்ளிகளை நாடுவர்?
பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்களின் மனனம் செய்யும் திறன் மட்டுமே வளர்க்கப்படுகிறது. மாணவர்கள் அறிவுச்சிறை க்குள் தள்ளப்படுகின்றனர். அரசுப் பள்ளிகளில் மட்டுமே மாணவர்களின் இயல்பான முழு ஆளுமைத்திறன் வளர்ச்சி சாத்தியப்படுகிறது. பகல் கொள்ளையர்களாய் தனியார் பள்ளிகளின் கல்வித் தந்தையர் செயல்படுகின்றனர் என்பதை எல்லாம் அறிந்தும், வேறு வழியின்றியே தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
. ஆகவே, அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை என்று இனியும் பொதுவாய் கூறுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்குத் தன்னால் ஆன பங்களிப்பை அளிக்க முயற்சிக்க வேண்டும்.
எந்த ஒரு தனியார் பள்ளியிலாவது average and below average students க்கு பாடம் நடத்தி (ஒரேயொரு கல்வியாண்டு மட்டும்) மாநில அளவில் மதிப்பெண் பெற செய்யுங்கள்.....
ReplyDeleteபிறகு தெரியும் தனியார் பள்ளியின் லட்சணம் அரசு பள்ளியின் சிறப்புகளும்
according to RTI Act , The students are not knowing alphabets even though they are passed up to VIII sanded. How the government teacher give good result?
ReplyDeleteGovernment first give important to primary education, frame some rules and regulation of student promotion. from L.K.G on wards that is better to achieve our goal.
அரசு பள்ளி ஆசிரியர்கள் பெருமபான்மையானவர்கள் நன்றாகவே பணி புரிகிறார்கள். குறையை எங்கோ வைத்துக் கொண்டு ஆசிரியர்களை குறை சொல்வது சரியல்ல
ReplyDeleteஒரு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பில் எத்தனை மதிப்பெண் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்பெண் அட்டைகள் வைத்திருந்தாலும் அம் மாணவர் கேட்க்கும் பிரிவு 11ம் வகுப்பில் கொடுக்க வேண்டும்.ஆனால் தனியார் பள்ளியில் பிரிவை நாம் தேர்ந்தெடுக்க முடியாது.மதிப்பெண்தான் அதை முடிவு செய்யும்.அவர்களிடம் படித்த்து குறைந்த மதிப்பெண் பெற்றால் வெளியேற்றி விடுவர் அல்லது வேறு பிரிவு கொடுப்பர்.அரசு ஊழியர்கள் தனியார் பள்ளியில் தங்கள் வாரிசுகளை சேர்ப்பது கல்வி தவிர்த்த பிற காரணங்களுக்காகத்தானே தவிர வெறும் கல்விக்காக அல்ல.......அரசு பள்ளியில் கூடுதல் நேரங்கள் கல்வி பயில வாய்ப்பில்லை.......பிற செயல்பாடுகள் ஒரு சில பள்ளிகளில் மட்டுமே .....மாணவர்கள் தேர்வு.......பல கட்டுப்பாடுகளுடன் ஆசிரியர்கள் செயல்பாடு.....ஆசிரியர் , மாணவர்,பெற்றோர் உறவு இவைதான் தேர்ச்சி தீர்மானிக்கின்றன......
ReplyDeleteஅரசு பள்ளி ஆசிரியர்கள் நன்றாகவே பணி புரிகிறார்கள்
ReplyDeleteஓவ்வொரு தடவையும் பொதுத் தேர்வு முடிவுகள் வந்தவுடன் அரசு பள்ளி ஆசிரியர்கள் விமர்சிக்கப் படுகிறார்கள். ஆனால் உண்மையில் அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சிக் குறைவிற்கு காரணங்களை யாரும் அலசி ஆராய்வதில்லை.
ஒரு பள்ளியின் தேர்ச்சி விகிதம் என்பது ஆசிரியர் எடுக்கும் முயற்சியால் மட்டுமே வருவதில்லை. மாணவர்கள் உழைப்பு, பெற்றோர்களின் அக்கறை , ஆசிரியர்களின் வழிகாட்டுதல் போன்ற அம்சங்களே தேர்ச்சி விகிதத்தை கொடுக்கும்.
குறைந்த காரணங்கள்.
1. அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதில் வடிகட்டும் முறையை கடைபிடிக்க முடியாது.
வருகின்ற மாணவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சேர்த்துக் கொள்ளவேண்டும்.
2. மாணவர்களை 9 ஆம் வகுப்பு வரை fail பண்ண முடியாது. மேலும் இதுவரை பொதுத்தேர்வு
என்று ஒன்று இல்லாததால் பலவகை பட்ட மாணவர்களையும் பத்தாம் வகுப்பில் தான்
ஆசிரியர்கள் கையாள வேண்டியுள்ளது.
3. இது அரசு பள்ளிகளுக்கு மட்டுமே உள்ள பிரச்சனை. மாணவர்களை அடிக்கக் கூடாது. திட்டக்
கூடாது. எதாவது பிரச்சனை என்றால் பெற்றோர்களை அழைத்தால் அவர்களும் மாணவர்கள்
நலன் கருதி ஒரு சிலர் மட்டுமே வருவார்கள்.
4. பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் அரசியல் அடிப்படையில் போய் விட்டதால் அதனாலும் ஒரு
பலனும் இல்லை
5. மேலதிகாரிகள் பெரும்பாலும் நேரடியாக மாவட்ட கல்வி அதிகாரியாக தேர்வு
செய்யபடுவதால் வெறும் புள்ளி விபரங்களை வைத்து ஆய்வு செய்பவர்களாக இருக்கிறார்களே
தவிர உருப்படியான ஆலோசனைகளை தரமுடியாத நிலையில் தான் உள்ளார்கள்.
6 தலைமை ஆசிரியர்கள் தனது பள்ளி சூழ்நிலைக்கு ஏற்ப நிருவகிக்க எந்த சுதந்திரமும் இல்லை.
7. வேண்டுமானால் பிரச்சனைக்கு உரிய சில பள்ளிகளை தரம் உயர்த்தி மாவட்ட கல்வி
அதிகாரிகளை தலைமை ஆசிரியர்களாக நியமித்து தேர்ச்சி விகிதத்தை ஒரு சவாலாக ஏற்று
உயர்த்த முயலலாம்.
எல்லாவற்றிக்கும் மேலாக ஆசிரியர் நியமனமத்தில் அரசியல் தலையீடு , ஆசிரியர்களை
வேறு பணிகளுக்கு அனுப்புவது, தேவை இல்லாத நடைமுறைக்கு ஒவ்வாத ஆய்வுகள் இவை எல்லாம் உயர்ந்த தேர்ச்சி விகிதம் அரசு பள்ளிகள் அடைய முடியாததற்கு காரணங்கள்.
இதையும் தாண்டி சில பள்ளிகள் உயர்ந்த தேர்ச்சி விகிதங்கள் காட்டியுள்ளன.
மொத்தத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பெருமபான்மையானவர்கள் நன்றாகவே பணி புரிகிறார்கள். குறையை எங்கோ வைத்துக் கொண்டு ஆசிரியர்களை குறை சொல்வது சரியல்ல
முதல் கம்மென்ட் மிக அருமையான விளக்கமாக இருக்கிறது.
ReplyDeleteஇதை விட வேறென்ன உண்மை இருக்க முடியும்?
தரம் தரம் என்று சிலர் கூறிக்கொண்டு திரிவது எதை என்று தெரியவில்லை. உண்மையான கல்வி என்பது அரசு பள்ளிகளில் தான் வழங்கப்படுகிறது என்பது உண்மையான கல்வியாளர்களுக்கு தான் தெரியும்.புள்ளி விவரங்களை மட்டும் நினைவில் வைத்து கொள்வதற்கு மனிதர்கள் தேவையில்லை, சில கணிப்பொறிகளே போதும்.சுய சிந்தனையும் படைப்பாற்றலும் மனித நேயமும் உள்ள நல்ல மனிதர்களை உருவாக்குவதே உண்மையிலே தரமான கல்வி.
ReplyDeleteVunmai உண்மை
ReplyDeletePlease Govt. School Teachers at first you admit your children at government schools. It make the puplic as a confider about the govt schools
ReplyDeletenotwithstanding the compulsion of management. private school teachers are working very hard but getting low salary. we can't deny that
ReplyDeletekarpoorathai eriyavaipathu periavisayamalla(private school)
ReplyDeletechirapunji valaimarathai eriyavaipathuthan periyathu (govt school)
செந்தில் குமார் எருமைப்பட்டி
ReplyDeleteஇந்த சமூகம் அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் குறைகூறுவதை எப்போது நிறுத்திக் கொள்ளும் என தெரியவில்லை. ஒரு அரசு பேருந்து ஒட்டுநரின் குடும்பம் அரசுப் பேருந்தில் மட்டும் பயணம் செய்வதில்லை அரசு மருத்துவமனை மருத்துவர் குடும்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை ஏன் இந்தியாவின் எந்த ஒரு உயர் அதிகாரியின் குழந்தையோ, பேரன் ,பேத்திகளோ அரசுப் பள்ளியோ கல்லூரியோ, பேருந்தோ, விடுதிக்கோ மறந்தும் செல்வது கிடையாது .அப்படி இருக்க ஆசிரியர்களை குறைகூறுவது நியாமில்லை வீதிக்வீதியும் முட்டுச்சந்துகளிலும் சிறார் பள்ளிகளைத் திறந்து சமூகத்திற்கு கேடு விளைவித்தது யார்? படிப்பவனுக்கும் படிக்காதவனுக்கும் பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் தேர்ச்சி பெற செய்தது யார் குற்றம் ஆசிரியர் குற்றமா? ஒழுக்கத்தையும் நல்ல பண்புகளையும்
கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியரின் கைகள் கட்டப்பட்டு நிராயுத பாணிகளாக அம்போவென்று நிற்கிறார்களே இது யார் தவறு கடிவாளம் இல்லாமல் தறிகெட்டு ஓடும் மாணவர் சமூகத்தைத் திருத்தும் பொறுப்பு சமூக அக்கறை கை நழுவி போய் விட்டதே ஆசிரியர்கள் என்ன செய்வார்கள் ததுதியானவர்களுக்கு மட்டுமே தேர்ச்சி , தவறு செய்யும் மாணவனைத் தண்டிக்கும் உரிமை இல்லாவிட்டாலும் கண்டிக்கும் உரிமையை அரசு செய்தால் இந்நிலை மாறும் பூனைக்கு யார் மணி கட்டுவது .
arasu palliyil 100% result ethirparppathal , slow learner-i pass panna vaikirom.anal good student-i best aga matra mudivathillai. Ungalukku devai overall result thane.
ReplyDeleteஅரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும்தான் அரசு மருத்துவ கல்லூரியிலோ அல்லது அரசு பொறியியல் கல்லூரியிலோ சேர்க்படுவார்கள் தனியார் .பள்ளியில் படித்த மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர
ReplyDeleteமுடியாது என அரசு ஓரு G O போட்டால் தெரியும் தனியார் பள்ளிகள் நிலைமை அரசு கல்லூரியில் உள்ள medical, engineer இடங்களை கைப்பற்றி சேர தானே தனியார் பள்ளியில் படிக்க வைக்கின்றனர் பெற்றவர்கள் பத்தாவது தோல்வி அடைந்த பின்னர் தேர்வான மாணவர்கள் கொண்டு கற்பிக்கும் அரசு பள்ளியில் இப்படித்தான் தேர்ச்சி இருக்கும .தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் 90% அரசுபள்ளியில் அரசு கல்லூரியில் படித்தவர்கள்தான்.அரசுப்பள்ளியில் அனைத்து பாடத்திற்கும் ஒரே ஆசிரியர்(1to5) ஆனால் தனியார் பள்ளியில் LKG க்கே பாடத்திற்கு ஒருவர் பிறகு இப்படி அரசு பள்ளியையும் தனியார் புள்ளியையும் ஒப்பிட முடியும்ஆசிரியர்
அரசுபள்ளியில் படித்தமாணவர்கள் மட்டும்தான் அரசு கல்லூரி MBBS இடம் என்று ஒருGO போட்டால் தனியார் பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை இன்றி மூட்டை கட்டவேண்டிய நிலை வரும் அரசு சட்டங்கள் சரியாக இல்லை தனியார் பள்ளிக்கு சாதகமான முறையில் உள்ளது
ReplyDeleteDON'T COMPARE GOVT SCHLS WITH PRIVATE SCHLS:
ReplyDeleteWhether the children's of Dinamani newspaper group studying in govt schools???
Dinamani author had studied in govt schl once. But their present grand daughters would study in aristocratic private schls.
(Paper padikkara podhujanam mattum thaane ilIichavaayan).
Govt schls once produced APJ KALAM &
C.V.RAMAN too. But during APJ KALAM period 95% govt students life left in air. But at present 60% students life become meaningless & striving in hotels, roadside shops, lorry shed, vehicle shop... Only 40% harworking students life glitter after complete hardwork of them.
Among the govt tchrs, more than 60% r just working, working. But 40% unknown faces of the tchrs work hard beyond the salary & for the sake of students welfare. For them there is no single reward frm the higher official or frm their co workers. Higher official has no eagle eye to find the true hardworker. But they harshly blames among the lazy tchrs just calculating the salary throughout the month.
'No reward for true hardwork & not immediate punishment for laziness in work is the main cause of decrease in growth of any administration'.
Being a backbone of govt schls, only that nearly 40% hardworker tchrs work for the students. Others just support to fill the salary register & count of tchrs in service. They attain happiness & satisfaction only frm the results of students reflecti the hardwork as marks. Though most of the students in govt classroom didn't like the genuine teaching, that 40% tchrs teaches for the welfare of few 5-10 hardworking students in every classroom. No newspaper never written an article about hardworking govt schl tchr.
Though govt schl edn dept hav more than 60% of hard worker by recruitment of tchrs, their energy is not really used to drive. Even a tchr once worked in private schl made many centum & crowned gold coin. But the same person becoming a govt schl tchr striving to make just pass
So the harworker govt tchr with hard heart joins simply their child in private schls. Moreover the higher % of well salaried lazy govt tchr who well known abt laziness, stands first in queue of popular private schls for their children admission & questions why that (poor, little salaried) private tchr didn't taught nice to his son/daughter. He wants her child to become doctor by other private school tchr harwork. But he didn't work for making his govt schl students a doctors. Bcos they r poor & unquestionable by nobody.
All officials frm head to teacher sit in one hall & discuss what's the root cause of all.
Private schl tchr has only only teaching work. But for govt schl tchr, teaching is mere a part & adopted with many other schl related works.
95% of the students of govt schls r below poverty line. Education is third or fourth matter for them. Nobody guide them. But 95% of the private schl students r in more or less in good economic condition or parents to take care of them while they paying fee by their sweat.
Export quality brinjal goes to private schls. Bin-thrown last quality brinjal given in the hand of govt schl tchr. Then how come the food is so tasty.
Don't compare govt schls with private schls.
Private schl is a cherry fruit. It is aristocratic.
Govt schl is a Jack fruit. Though thorns around, it too has very sweet fruits within.
No private schools wil never yield APJ ABDUL KALAM or C.V.RAMAN anymore.(bcos they produce only higher scores or xerox machines)
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் திறமையானவர்கள் என நிருபிக்க எளிய வழி. இந்த கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு சிறப்பாக சொல்லிக்கொடுத்து வருகின்ற 2015 ஆண்டுத்தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களை அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வைத்து விட்டால் போதும். பின்னர் யாரும் தேவையில்லாமல் அரசு பள்ளி ஆசிரியர்களை விமர்சிக்கமாட்டார்கள்.
ReplyDeleteஅனைத்து பள்ளிகளும் அரசே ஏற்று நடத்த வேண்டும் தனியார் பள்ளிகள் அரசுடமை ஆக்கினால் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கும்.மேலே கூறிய அனைத்து குறைபாடும் நீக்கப்படும்.
ReplyDeleteதேவையான மாற்றம்
ReplyDelete1. அனைத்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளிலேயே சேர்க்க கட்டாய சட்டம் இயற்ற வேண்டும்.
(அப்போதுதான் தான் கற்பிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அரசு அலுவலர்கள் என்ற பயமும் நம் பிள்ளைகளும் அரசுப்பள்ளிகளில்தான் படிக்கின்றனர் என்ற அக்கறை உணர்வும் கல்வி தரம் உயர ஏதுவாக இருக்கும்)
2. பெற்றோர் கூட்டங்களில் கலந்துகொள்ளாத பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்துக்கு அதிகாரம் அளித்தல்.
3. அரசுப்பள்ளிகளின் இலவசங்கள் மற்றும் கல்வி விதிகள் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் 3மாத்த்திற்கு ஒரு முறை வீதிதோறும் ஏற்படுத்தல்.
4. காலந்தவறாமையை கடைபிடிக்க தவறும் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் சலுகைக் குறைப்பை அறிவித்தல்
5. பள்ளி பணி முடிந்து வெளியேறும் ஆசிரியர் மூன்றாம் முறை நேரத்தை வருகைப்பதிவேட்டில் பதிய வகை செய்தல் வேண்டும்.
6. மாணவர்கள் வகுப்பிற்கு தகுந்த அடிப்படை திறன்கள் பெற்றுள்ளாரகளா என பதிவு செய்து ஆரம்ப காலகட்டங்களிலேயே முன்னேற்ற நடவடிக்கை எடுத்தல்.
7. ஒழங்கு நடவடிக்கைகளை ஆசிரியருக்கு மட்டுமல்லாது மாணவர்கள்;பெற்றோர்களுக்கும் வரையறுத்தல்.
8. அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்;மாணவர்களுக்கு புகார் பெட்டி வைத்த்து தகுந்த நடவடிக்கைகள் எடுத்தல்.
9. அலுவலர்கள் பாராபட்சமின்றி பள்ளிகளை முறையாக ஆய்வு செய்தல்.
10. மேலே நான் கூறிய வதிகளில் தவறு இருந்தால் மாற்றிகொள்ளுதல்..
ந.ஜெகன்-இடைநிலை ஆசிரியர் ; உத்துரமேரூர்....
தேவையான மாற்றம்
ReplyDelete1. அனைத்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளிலேயே சேர்க்க கட்டாய சட்டம் இயற்ற வேண்டும்.
(அப்போதுதான் தான் கற்பிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அரசு அலுவலர்கள் என்ற பயமும் நம் பிள்ளைகளும் அரசுப்பள்ளிகளில்தான் படிக்கின்றனர் என்ற அக்கறை உணர்வும் கல்வி தரம் உயர ஏதுவாக இருக்கும்)
2. பெற்றோர் கூட்டங்களில் கலந்துகொள்ளாத பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்துக்கு அதிகாரம் அளித்தல்.
3. அரசுப்பள்ளிகளின் இலவசங்கள் மற்றும் கல்வி விதிகள் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் 3மாத்த்திற்கு ஒரு முறை வீதிதோறும் ஏற்படுத்தல்.
4. காலந்தவறாமையை கடைபிடிக்க தவறும் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் சலுகைக் குறைப்பை அறிவித்தல்
5. பள்ளி பணி முடிந்து வெளியேறும் ஆசிரியர் மூன்றாம் முறை நேரத்தை வருகைப்பதிவேட்டில் பதிய வகை செய்தல் வேண்டும்.
6. மாணவர்கள் வகுப்பிற்கு தகுந்த அடிப்படை திறன்கள் பெற்றுள்ளாரகளா என பதிவு செய்து ஆரம்ப காலகட்டங்களிலேயே முன்னேற்ற நடவடிக்கை எடுத்தல்.
7. ஒழங்கு நடவடிக்கைகளை ஆசிரியருக்கு மட்டுமல்லாது மாணவர்கள்;பெற்றோர்களுக்கும் வரையறுத்தல்.
8. அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்;மாணவர்களுக்கு புகார் பெட்டி வைத்த்து தகுந்த நடவடிக்கைகள் எடுத்தல்.
9. அலுவலர்கள் பாராபட்சமின்றி பள்ளிகளை முறையாக ஆய்வு செய்தல்.
10. மேலே நான் கூறிய வதிகளில் தவறு இருந்தால் மாற்றிகொள்ளுதல்..
ந.ஜெகன்-இடைநிலை ஆசிரியர் ; உத்துரமேரூர்....
உண்மையில் அனைவருக்கும் சேர்க்கை என்ற ஒரு முறையையும், தேர்ச்சிப் பெற்றால் போதும் மாணவர்கள் விரும்பும் பாட பிரிவினை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம் என்ற முறையையும் அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் வைக்காமல் அனைத்து பள்ளிகளுக்கும் வைத்து அப்போது யார் திறமை வாய்ந்த ஆசிரிசியர் என்று கேளுங்கள்........
ReplyDeleteமொத்தத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பெருமபான்மையானவர்கள் நன்றாகவே பணி புரிகிறார்கள். குறையை எங்கோ வைத்துக் கொண்டு ஆசிரியர்களை குறை சொல்வது சரியல்ல பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்களின் மனனம் செய்யும் திறன் மட்டுமே வளர்க்கப்படுகிறது. மாணவர்கள் அறிவுச்சிறை க்குள் தள்ளப்படுகின்றனர். அரசுப் பள்ளிகளில் மட்டுமே மாணவர்களின் இயல்பான முழு ஆளுமைத்திறன் வளர்ச்சி சாத்தியப்படுகிறது. பகல் கொள்ளையர்களாய் தனியார் பள்ளிகளின் கல்வித் தந்தையர் செயல்படுகின்றனர் என்பதை எல்லாம் அறிந்தும், வேறு வழியின்றியே தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
ReplyDelete. ஆகவே, அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை என்று இனியும் பொதுவாய் கூறுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்குத் தன்னால் ஆன பங்களிப்பை அளிக்க முயற்சிக்க வேண்டும். mattrum govt teachers vellai parpathu kadinamana work because MR child padipathellam govt school entha thaniyar pallikoodamavathu MR childa admission koduparkala? aanal govt schoola matumae admission kodupargal.govt school aasiriyargalai kurai solvathai neruthi vittu aarasu pallikoda kattataaamaipu matrum bathroom facilities irukiratha enpathai koorai solpavargal think panuvaargala?thaniyar pallikoda infrastructure pol govt school infrastructure irunthal ella pillaikalum govt schoola than seruvagal enpathai therinthukollungal. govt school infrastructure illai enpathai aarasangathiku eaduthu sollungal.aasiryargali koorai solvathai niruthividungal
பிளஸ் 2 தேர்வு முடிவை அடிப்படையாக வைத்து தினமணி வெளியிட்டிருக்கும் இந்த பதிவு அதிர்ச்சி அளிக்கிறது. அரசு பள்ளி ஆசிரியர்களின் நிலையை மக்கள் நன்குணர வேண்டும்.
ReplyDeleteஆசிரியர்களுக்கு கல்வித்துறை அல்லாத மற்ற பணிகளிலும் ஈடுபட வேண்டிய கட்டாயம் அவர்களை சங்கடப்படுத்துகிறது. இருப்பினும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக காலை, மாலை சிறப்பு வகுப்புகள், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களின் நிலையை உயர்த்த எவ்வளவோ முயற்சி செய்கிறார்கள்.
மாணவர்களின் தரத்திற்கேற்ப அவர்களை சரியாக இனங்கண்டு அவர்களை நல்ல மதிப்பெண் பெற செய்ய தேர்வுகள் நடத்துவது, அவர்களுக்கு தேவைப்படும் study materials தயாரித்து தருவதென எல்லாவித முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
தனியார் பள்ளிகள் இரண்டாண்டுகள் நடத்தும் பாடங்களை அரசு பள்ளிகளில் ஒரே ஆண்டில் நடத்தி, அதிலேயே நல்ல தேர்ச்சி விழுக்காட்டையும் பெற்று சாதிப்பது என்பது பெரிய சவால். இதை மக்கள் உணர வேண்டும்.
மாணவர்களை அவரவர் கற்றல் திறனை கொண்டு மதிப்பிட்டு அதற்கேற்ப வடிகட்டி பாடம் நடத்தி சாதனை புரிவதென்பது பாராட்டுக்குரிய விஷயமன்று.
ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி. பத்தாம் வகுப்பில் தேர்வு முறைக்கு முழுமையாக மாணவர்களை உட்படுத்தி அதற்கு பின்னான பிளஸ் 2 தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் பெற செய்வதென்பது பாராட்டுக்குரிய செயல் தான்.
குறிப்பாக தனியார் பள்ளிகள் புறந்தள்ளிய எத்தனையோ மாணவர்கள் கடைசி நேரத்தில் அரசு பள்ளிகளை நோக்கி படையெடுப்பதும் அவர்களையும் நல்ல மதிப்பெண் பெற செய்து தேர்வில் வெற்றி பெற செய்வதும் சாதனையே.
மாணவர் நலனில் அக்கறை இல்லா பெற்றோர் அவர்களில் நலனில் அக்கறை செலுத்தி அவர்களை ஊக்குவித்தால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் இவ்வகை வெற்றி சாத்தியமே.
அரசுப் பள்ளியில் மாணவா்கள் நன்றாகப் படிக்கிறார்கள். 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றால் தனியார்பள்ளிகள் அவா்களை அழைத்துக் கொண்டு போய் விடுகிறார்கள்... நன்றாகப் படிக்கும் கிராமப்புற மாணவியைஅரசே தனியார்பள்ளியில் சோ்க்கிறது இது எத்தனை பேருக்கு தெரியும்... மொத்ததில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவா்கள் உயா கல்வியையும் தனியார் கல்லூாியிலேயே படிக்க வேண்டும்....
ReplyDeleteThe stage wasn't good thats why i can't dance well. - a proverb
ReplyDeleteஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் திறமைசாலிகள், புத்திசாலிகள், அறிவாளிகள் அதனால்தான் அவர்களின் குழைந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்கவைக்கிறார்கள்.
ReplyDeletevagupparai suzhal nandraga ulladhu.
ReplyDeletePadam nandraga aarvathai thuundum vagaiyil naduthugiren.
AAnal katral nadaipera thevaiyana munnarivu manavargalidam illai.
Athanal
Basic il arambithu teaching (coaching) Muulam pass mark edukka vaippadhurkul pooddhum endru aagi vidugiradhu.
Engalukku mattum aasai irukkadha?. Engalal iyalvillai enbadhey nijam.
abcd., 123., theriyamal 10 aam vaguppu. ennal pass panna vaikka mudiyum. 60/ mathipen edukka vaikka mudiyum. state rank aasai mattum ulladhu.vetri pera mudiyavillai. Aasiriyar mattumey karanam illai. Naangal uzhaikka ready. engalukku nalla suzhal tharungal
indru state first edutha schoola 480 ku mela eduthathan +1seat enpathu ethanai perukku theriyum
ReplyDeleteWONDERFULL COMMENTS FOR FOOLISH ARTICLE GIVEN BY A FOOLISH
ReplyDeleteஅரசுஆசிரியர்க்குதானே தெரியும்
ReplyDeleteFirst give same rules and regulations for govt and private schools then compare.
ReplyDeleteFirst give same rules and regulations for govt and private schools then compare.
ReplyDeletethis is good conversation
ReplyDeleteஒரு நாளிதழ் மக்களுக்கு உண்மையான தகவல்களை சொல்ல வேணும். மாறாக தவறான தகவல்களை தந்து அதன் பெயரை கெடுத்துக கூடாது. அரசு ஆசிரியர்களை பற்றி என்னே தெரியும் அந்த நிருபருக்கு. இனி ஒரு கணமேனும் இந்த மாதிரியான முட்டாள் தனமான செய்தியை தராதீர்கள். இல்லையேல் பிறகு வருந்த வேண்டி வரும். ஏதோ பள்ளிக்கே வராத மாணவனையும் அவன் வீட்டிற்கு சென்று அழைத்து வந்து பாடம் கற்பிக்கிறோம். வேண்டுமானால் ஒரு போட்டி வைத்து கொள்வோம். (செய்தி தாள் ஆசிரியரை கேட்கிறேன்). ஏதாவது ஒரு அரசு பள்ளியை சேர்ந்த ஒரு வகுப்பு மாணவர்களை, மாநில முதலிடம் வாங்கி தந்த பள்ளியில் ஒரு வருடம் விடலாம் என்ன நடக்குது என்று பாருங்களேன். அந்த நிருபர் ஒரு வேளை தனியார் பள்ளியில் படித்தவர இருக்கும் அதனால் தான் அரசு பள்ளியின் நிலை தெரியவில்லை அவருக்கு....
ReplyDeleteஅய்யா என்னுடைய கருத்துகளை வெளிவிடுங்களேன்
ReplyDeleteஅரசு பள்ளியில் பத்தாம் வகுப்புக்கு வரும் ஒரு மாணவனுக்கு ABC தெரியவில்லையென்றால் அவனுக்கு ஒன்பதாம் வகுப்புவரை அதை கற்றுத்தராத ஆசிரியர்தானே பொறுப்பு. அவர் தனியார் பள்ளி ஆசிரியரா அல்லது அரசு பள்ளி ஆசிரியரா.
ReplyDeletethe teacher who wrote the first article tried to explain the socio-economic condition of the student. instead of that he should first analyse his teaching techniques and abilities. one should accept responsible for his failure and limitations but here he/she shifted that shortcomings to student. this is called 'fixed mindset'. growth mindset people always says that this is my limitation i will correct. if it is so in this case a good government school teacher says that i will work hard and by next year my student will be in the top rank position. that is good spirit. that is lacked in the article. this is pessimistic approach. work hard govt school teachers. show your abilities in the next academic year.
ReplyDeleteMr.Jagan your comment is ridiculous,.and don't blame teaching community.Every one should accept the ENVIRONMENT in PRIVATE AND GOVT school.(one is in EAST the other is in WEST).
ReplyDelete480 mark edutha studenta 12th la state 1st eduka vaikarathu perusu ila.250 mark edutha studentsa 900 eduka vaikanum atha hard work.
ReplyDeletegod only help me my husband scold me daily becoz of tet exam i want to die but i cant what can i do plz god give me death soon
ReplyDeleteGOOD ! most of the comments are thought provoking. Govt.teachers should win the confidence of the public rather then finding fault on fellow Govt.organistion.
ReplyDeleteTEACHERS, Most of the Govt employes spend money for temple and social causes. divert them towards the govt. school for better cause.
ReplyDeleteMudhalil velai poda solli oru article podunga
ReplyDelete