திருநெல்வேலியில் பேராசிரியர் சுப்பிரமணியன் மீது, சினிமா பாணியில், மிகக்
கொடூரமாக, மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த மன உளைச்சல் மற்றும்
அவமானத்தில், பேராசிரியர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குற்றம்சாட்டப்பட்டுள்ள
மாணவர்கள் 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என மதுரை ஐகோர்ட்
கிளை உத்தரவிட்டது. திருநெல்வேலி எப்.எக்ஸ்.,பாலிடெக் கல்லூரியில்,
ஏப்.,16 ல் தேர்வு நடந்தது. மாணவன் மெர்வின்பிரபு,20, தாமதமாக வந்தார்.
பேராசிரியர் இளங்கோ,"ஏன் தாமதமாக வந்தாய்?' என்றார். இதனால் அவருக்கும்,
மாணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இளங்கோவிற்கு ஆதரவாக மற்றொரு
பேராசிரியர் சுப்பிரமணியன்,24, மற்றும் கல்லூரி பஸ் டிரைவர்
சுதாகர்பேச்சுவார்த்தை நடத்தினர். மெர்வின் பிரபுவிற்கு ஆதரவாக, மற்றொரு
மாணவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு,ஆபாசமாக பேசினர்.அன்று இரவு,
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில், தனிமையில் இருந்த
சுப்பிரமணியம் மீது, மெர்வின் பிரபு உட்பட 6 மாணவர்கள் தாக்குதல்
நடத்தினர். சுதாகர் வீட்டிற்குள் புகுந்து அவரையும்,அவரது மனைவியையும்
தாக்கினர். காயமடைந்த சுப்பிரமணியம், அவமானத்தில் தூக்குப்போட்டு தற்கொலை
செய்து கொண்டார். இவ்வழக்கில், 6 பேரை போலீசார் கைது செய்தனர்.மாணவர்கள்
செல்வம், பிரிகன் ஜாமின் கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல்
செய்தனர்.
நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவு: இந்திய கலாசாரத்தில், ஆசிரியர்களுக்கு மிக முக்கிய இடம் உண்டு.ஆசிரியர்கள், மாணவர்கள் உறவு பற்றி அவ்வையார், திருமூலர் கூறிய முதுமொழியை, மனுதாரர்கள்மீறியுள்ளனர். தனிமையில் இருந்த பேராசிரியர் சுப்பிரமணியன் மீது, அவரது வயதைக்கூடபொருட்படுத்தாமல், சினிமா பாணியில், மிகக் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் ஏற்பட்டமன உளைச்சல் மற்றும் அவமானத்தில், பேராசிரியர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.சுதாகர் மற்றும் அவரது மனைவியையும் தாக்கியுள்ளனர். இதுபோன்ற கிரிமினல் மனநிலையில் உள்ளவர்களை, ஜாமினில் அனுமதித்தால், பின்விளைவுகளைப் பற்றிக்கூட கவலைப்படாமல், சாட்சிகளை கலைப்பர்.

இவர்களுக்காக இரக்கப்பட்டால், அது தவறான சமிஞ்ஞை (சிக்னல்) காட்டுவதற்குச் சமம்.
ஆசிரியர்கள், தொழில் ரீதியான மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மனுதாரர்களுக்கு ஜாமின்அனுமதித்தால், ஆசிரியர் சமுதாயத்தின் மனவேதனை
அதிகரிக்கும். தங்களை, கோர்ட் கைவிட்டுவிட்டதாக,ஆசிரியர் சமுதாயம் கருதும்.
மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.
thankyou sir,it is very small satishfaction of th tr
ReplyDelete