Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை

 
             தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு முடிந்ததும் கோடை விடுமுறை விடப்படுகிறது. தற்போது கோடை விடுமுறை விடுப்பில் மாணவர்கள் உள்ளனர். கோடை விடுமுறை விடப்பட்டாலும் சில பள்ளிகள் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக கடந்த ஆண்டு புகார்கள் வந்தன.

          இதையடுத்து கோடை விடுமுறை விடப்படாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டது. இருப்பினும் தற்போது தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

                    நெல்லை மாநகரிலும் தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சிறப்பு வகுப்புகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் தங்களது பள்ளி சீருடையிலேயே சென்று வருகின்றனர்.

                   9–ம் வகுப்பு தேர்வான மாணவர்களுக்கு 10–ம்வகுப்பு பாடமும், 11–ம்வகுப்பு தேர்வான மாணவர்களுக்கு 12–ம் வகுப்பு பாடமும் சிறப்பு வகுப்புகளில் நடத்தப்பட்டு வருகிறது. அரசு விதிமுறையை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது மாணவர்களின் பெற்றோர் களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பெற்றோர் தரப்பில் கூறியதாவது:–

                      பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அரசு உத்தரவை மீறி பல்வேறு பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றன. ஒவ்வொரு பள்ளியும் அரசு தேர்வில் முதலிடம் பிடிப்பதற்காகவும், 100 சதவீத தேர்ச்சிக்காகவும் இந்த சிறப்பு வகுப்புகளை நடத்துகின்றனர். இது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

                மேலும் நெல்லை மாநகரின் பல்வேறு பள்ளிகளில் 9 மற்றும் 11–ம்வகுப்பு படிக்கும் மாணவர்கள் பலர் பெயிலாக்கப்பட்டுள்ளனர். இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டால், பெயிலான மாணவர்கள் சரியாக படிக்கவில்லை. அவர்கள் 10, 12–ம்வகுப்புக்கு சென்றால் தேர்ச்சி பெறமாட்டார்கள். இதனால் எங்கள் பள்ளியில் தேர்ச்சி சதவீதம் குறைந்து விடும் என்கின்றனர்.

                      மேலும் தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் தந்து விடுகிறோம். ஆனால் அந்த மாணவர்களை எங்கள் பள்ளியில் சேர்த்து கொள்ளமாட்டோம். வேறு ஏதாவது பள்ளியில் சேர்த்து படிக்க வையுங்கள் என்கின்றனர். இது போல் பல்வேறு பள்ளிகளில் 150–க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு டி.சி.யை கொடுத்து அனுப்பியுள்ளனர்.

                   இதனால் அந்த மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே இது குறித்து கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகளை கண்காணித்து அந்த பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                   இவ்வாறு அவர்கள் கூறினர். நெல்லை மாநகர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில் கோடை சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.




8 Comments:

  1. good. take action against the hm. the school concerned hm is to be punished.

    ReplyDelete
  2. the 11th std class admission is beyond 125 students in a group. the hm gets bribe for admission. this should be avoided. what the officers are doing.? what the bribe department is doing?

    ReplyDelete
  3. தனியார் பள்ளிகளில்10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடைவிடுமுறையில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகள் பற்றி மாவட்ட அதிகாரிகளுக்கு தெரியாமலா இருக்கிறது.அவர்களின் ஆசீர்வாதத்தோடுதான் நடைபெறுகிறது.அவர்கள் எப்படி அப்பள்ளிகள் மீது நடவடிக்கையெடுப்பார்கள்.

    ReplyDelete
  4. Even Govt. Schools in Krishnagiri Dist take Spl. class (As per the instructions of HM and Guidence of C.E.O). Who Will Take action ?

    ReplyDelete
  5. கோடைவிடுமுறையில் பள்ளிமாணவர்களுக்கு சிறப்புவகுப்பு நடத்தக்கூடாது என்று இயக்குனரின் உத்தரவு இம்மாவட்ட கல்வி அதிகாரியை கட்டுப்படுத்தாதுபோலும்.தன் கீழ் ப்ணியாற்றும் அதிகாரிகள் தன் உத்தரவுக்கு கட்டுப்படாத போது இயக்குனர் ஏன் இந்த உத்தரவை இடவேண்டும்.இந்த இயக்குனர் எப்படி தனியார்பள்ளிகளை கட்டுப்படுத்தப்போகிறார்.நிர்வாக திறமையில்லாத இயக்குனரை முதலில் இடமாற்றம் செய்யவேண்டும்.பின் அரசு உத்தரவை அமல்படுத்தாத மாவட்ட முதன்மைகல்வி அதிகாரியை மாற்றம் செய்ய வேண்டும்.இல்லையேல் அரசு உத்தரவை வாபஸ் பெறவேண்டும்.

    ReplyDelete
  6. கோடைவிடுமுறையில் பள்ளிமாணவர்களுக்கு சிறப்புவகுப்பு நடத்தக்கூடாது என்று இயக்குனரின் உத்தரவு இம்மாவட்ட கல்வி அதிகாரியை கட்டுப்படுத்தாதுபோலும்.தன் கீழ் ப்ணியாற்றும் அதிகாரிகள் தன் உத்தரவுக்கு கட்டுப்படாத போது இயக்குனர் ஏன் இந்த உத்தரவை இடவேண்டும்.இந்த இயக்குனர் எப்படி தனியார்பள்ளிகளை கட்டுப்படுத்தப்போகிறார்.நிர்வாக திறமையில்லாத இயக்குனரை முதலில் இடமாற்றம் செய்யவேண்டும்

    ReplyDelete
  7. Ithu yellaam vilambaram boss...Tamil nadula 100% private school. Even Sunday kuda leave vidatathu illa...yentha Holly dayum illa include may moth...I know well some of the govt school also take special class...ithellaam...yaarukum theriyatha...ithukellaam case podalamae..!ithalaam oru news by pottu comedy pandathinga..boss...

    ReplyDelete
  8. It has to be canceled the system of admitting the candidates for BE and MBBS based on +2 marks. that is why this kind of habit is spreading throughout the state. Bring the entrance test. then only true education will be carried out.If somebody feels the village people will be affected by conducting the entrance test, some concession marks may be provided for first graduate , poor pupil and village students.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive