ஆபாச வெப்சைட்களை முடக்கக் கோரியும், ஆபாச
படம் பார்ப்பவர்களை தண்டிக்க கோரியும் மத்தியப் பிரதேசம் இந்தூரை சேர்ந்த
வழக்கறிஞர் கமலேஷ் வஸ்வானி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘இந்தியாவில் ஆபாச படம் பார்ப்பது குற்றம் அல்ல. பெண்களுக்கு
எதிரான பாலியியல் குற்றங்களுக்கு ஆபாச வெப்சைட்கள்தான் முக்கிய காரணமாக
இருக்கின்றன. இன்டர்நெட்டை ஒழுங்குப்படுத்த சட்டங்கள் இல்லை. இதனால் இன்டர்நெட்டில்
20 கோடி ஆபாச வீடியோக்கள் இலவசமாக கிடைக்கின்றன. இன்டர்நெட்டில் ஆபாச
படங்களை சிறுவர்களும் பார்க்கும் நிலை இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த
சமுதாயமும் சீர்கெடும் அபாயம் உள்ளது. ஆபாச படங்களை பார்ப்பதால் ஏற்படும்
தூண்டுதலால்தான் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் குற்றங்கள்
நடக்கின்றன‘ என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி
பி.எஸ்.சவுகான் தலைமையிலான பெஞ்ச் மத்திய தொலை தொடர்பு துறை பதில் அளிக்க
உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர்
ஜெனரல் கே.வி.விஸ்வநாதன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘ஆபாச
இணையதளம் என்று அனைத்தையும் முடக்கினால், மருத்துவம் தொடர்பான பல்வேறு
தகவல்களும் முடக்கப்பட்டு விடும். இதனால், இவற்றை மக்கள் படித்து தெரிந்து
கொள்ள முடியாத வகையில் பெரும் தீங்கு ஏற்படும்‘ என மத்திய அரசு
தெரிவித்துள்ளது. மேலும், ஆபாச வெப்சைட்களை முடக்கும் சாப்ட்வேரை
கம்ப்யூட்டரில் நிறுவிய பின்னரே விற்பனைக்கு அனுப்ப வேண்டுமென கம்ப்யூட்டர்
தயாரிப்பு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிடலாம் எனவும் பரிந்துரை
செய்துள்ளது.
நல்ல பரிந்துரை
ReplyDelete