அரசு
உதவி பெறும் தனியார் பள்ளிக ளில், வேலைவாய்ப்பு அலுவலகப் பரிந் துரை
மட்டுமன்றி, பள்ளியில் உள்ள விளம்பரப் பலகை, பத்திரிகைகளில் அறிவிப்பு
வெளியிட்டும் ஆசிரியர் களை நியமனம் செய்யலாம் என்று உயர் நீதிமன்றக் கிளை
உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி
மாவட்டம், ஆவரைக்குளத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில்
பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் உதயகுமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை வேலைவாய்ப்பு
அலுவலகம் மூலமே நிரப்ப வேண்டும் என்று 1995-ல் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த
உத்தர வுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித் துள்ளது. இந்தத் தடை அமலில்
இருந்த போது கடந்த 1997-ல் நான் பட்டதாரி ஆசிரியராக நியமனம் செய்யப்பட்
டேன். பின்னர், உயர் நீதிமன்றம் விதித்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டு அரசு
உத்தரவுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் எனது பணி
நியமனம் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நடைபெறவில்லை என்பதால், என்னை பணி
நீக்கம் செய்ய பள்ளி நிர்வாகத்துக்கு சேரன்மாதேவி கல்வி மாவட்ட அதிகாரி
உத்தரவிட்டார்.
பின்னர், எனது ஊதியத்தை நிறுத்திவைத்தும் உத்தரவிடப்பட்டது.
அந்த இரு உத்தரவுகளையும் ரத்து செய்து எனது நியமனத்தை அங்கீகரிக்க
உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதேபோன்று, இடைநிலை
ஆசிரியர் பாலமுருகனும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த இரு மனுக்களையும்
விசாரித்து நீதிபதி ஆர். மகாதேவன் பிறப்பித்த உத்தரவு: அரசு உதவி பெறும்
தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்
நிரப்ப வேண்டும் என்று 1995-ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதை விடுத்து,
பள்ளி நிர்வாகமே நேரடி யாக ஆசிரியர்களை தேர்வு செய்திருந் தால், அரசிடம்
விண்ணப்பித்து அரசா ணையிலிருந்து விலக்கு பெறலாம் என்று 1998-ல் தணிக்கைத்
துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அந்த உத்தரவுபடி மனுதாரர்கள் இருவரின்
நியமனத்துக்கு அரசாணையிலிருந்து விலக்கு கோரி பள்ளி நிர்வாகம் மனு
அனுப்பியுள்ளது. அதை கல்வி அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர்.
வேலைவாய்ப்பு
அலுவலகம் மூலம் மட்டுமன்றி, பள்ளியின் விளம்பரப் பலகை, பத்திரிகைகளில்
அறிவிப்பு வெளியிட்டும் ஆசிரியர்களை நியமிக் கலாம். அந்த அடிப்படையில்தான்
மனு தாரர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள னர். மனுதாரர்களை பணி நீக்கம் செய்
தும், ஊதியத்தை நிறுத்திவைத்தும் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்
படுகிறது. மனுதாரர்கள் நியமனத்துக்கு அரசாணையிலிருந்து விலக்கு அளிக்க
வேண்டும். அவர்கள் தொடர்ந்து பணி யாற்ற அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதி
உத்தரவிட்டுள்ளார்.
nallathukku kallamae illa. ippa vadi kattuna kaliyugam.
ReplyDelete