காலை வர்த்தக தொடக்கத்தில் பாஜகவின் வெற்றி முகத்தை அடுத்து இந்திய
பங்குச்சந்தை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை
சென்செக்ஸ் 25,000ம் தொட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்
சென்செக்ஸ் 1450 புள்ளிகள் அதிகரித்து 25,353.16 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 394 புள்ளிகள் உயர்ந்து 7,517
புள்ளிகளாக அதிகரித்துள்ளது.
வங்கி பங்குகள் விலை அதிகரித்துள்ளது, வங்கியின் நிஃப்டி 7.8% உயர்ந்து 15,347 புள்ளிகளாக உள்ளது. பஞ்சாப் நேஷ்னல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, கோடக் மகேந்திரா வங்கி மற்றும் இன்டஸ் இன்ட் வங்கிகள் ஒவ்வொன்றும் 7% வரை உயர்ந்துள்ளது. பஜகாவின் மோடி பிரதமர் வேட்பாளரில் வெற்றி பெறுவார் என உறுதி செய்யப்பட்டது முதல் கடந்த ஒன்பது மாதங்களில், பங்கு சந்தை சென்செக்ஸ் 21% வரை உயர்ந்துள்ளது. நேற்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 90 புள்ளிகள் அதிகரித்து 23,906 புள்ளிகள் உயர்ந்து முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...