Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

போட்டித் தேர்வு: ஜூன் மாதத்தில் கவனம் தேவை.


            போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர் களுக்கு வரும் ஜூன் மாதம் மிகவும் முக்கியமானதாகும். பல தேர்வுகள் அந்த மாதத்தில் நடக்கவிருக்கின்றன.
 
          பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு ஜூன் மாதத்தில் நடக்கும் என்றுஅதற்கான அறிவிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதுவரையில்,தேர்வுத் தேதி வெளியாகவில்லை. இந்த மாத இறுதிக்குள் தேதி அறிவிக்கப்படும் என்றுஎதிர் பார்க்கப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான தேர்வு ஜூன் 8ம் தேதி நடைபெறுகிறது. 2 ஆயிரத்து 342 கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ) பணியிடங்களை நிரப்புவதற் கான தேர்வு ஜூன் 14ம் தேதி நடக்கப் போகிறது.

         தேர்தல் நடந்த காரணத்தால் தள்ளிப் போடப்பட்ட டி.என். பி.எஸ்.சி. குரூப் - 2தேர்வு 29 ஆம் தேதி நடக்கிறது. மத்திய ரிசர்வ் போலீஸ் படைகளில் 2 ஆயிரத்து892 இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகிய பணிகளை நிரப்புவதற்கான தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டதாகும்.அதன் முதல் தாள் தேர்வு ஜூன் 14 ஆம் தேதியன்று நடைபெற வுள்ளது. வன உயிரின ஆராய்ச்சிக் கல்லூரியில் ஆய்வுப் பணிக்கான தேர்வு இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.ரயில்வே தேர்வாணையம் நடத்தும் டெக்னீசியன் மற்றும் லோகோ பைலட் பணிகளுக்கான தேர்வு 15 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. பொதுத்தறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கழகத்தில் உதவி செயற்பொறியாளர் பணியிடத்திற்கான தேர்வு 22ம் தேதியன்று நடக்கிறது.

          மேலும் பல்வேறு துறைகளில், குறைவான எண்ணிக்கையில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான பல தேர்வுகள் இதே மாதத்தில் நடக்கப் போகின்றன.இவ்வாறு தேர்தல் நெருங்கிய காரணத்தால் தள்ளிப்போடப்பட்ட பல தேர்வுகள் ஒரே மாதத்தில் நடைபெறுகின்றன. சில தேர்வுகள் ஒரே நாளில் இருக்கக் கூடும். அவ்வாறு தாங்கள் விண்ணப்பித்திருந்த இரண்டு பணியிடங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்வு நடந்தால், எந்தத் தேர்வை நாம் எழுதுவது என்பதை முதலிலேயே தீர்மானித்துக்கொள்வது நல்லது.விரிவுரையாளருக்கானநெட் தேர்வுபல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகப் பணியாற்றுவதற்கு, தாங்கள் படித்த முதுநிலைப்பட்டத்தோடு, தேசிய தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

            இது பல்கலைக்கழக மானியக்குழுவால் ஒவ்வொரு ஆண்டும் இரண்டுமுறை நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் ஜூன் மாதம் 29ம் தேதி இந்தத் தேர்வு நடக்கவிருக்கிறது.ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப இயலும். விண்ணப்பிப்பதற்கான வசதியும், இந்தத் தேர்வு குறித்த மற்ற விபரங்களும் றறற.ரபஉநேவடிடேiநே.in என்ற இணையதளத்தில் தரப்பட்டிருக்கிறது. ஆன் லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் மே 5ம் தேதி யாகும்.

              யூனியன் வங்கியில்முன்னாள் ராணுவத்தினருக்கு வேலைவாய்ப்பு பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் 40 பாதுகாப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் கணினிப் படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.அதோடு, முப்படைகள் அல்லது துணை ராணுவப் படைகள் அல்லது காவல்துறை ஆகியவற்றில் ஒன் றிலாவது குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.றறற.ரniடிnயெமேடிகiனேயை.உடி.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு கடைசித்தேதி மே 5ம் தேதியாகும். இதற்கான தேர்வு ஜூன் மாதம் நடக்கப் போகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive