அரசின்
பல்வேறு துறைகளைச் சார்ந்த டிரைவர்களின் சம்பளம் ரூ.4000 லிருந்து ரூ.6000 க்குள் மட்டுமே
இருக்கும் என தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. முன்னதாக சில துறைகளில் டிரைவர்களின் சம்பளம்
ரூ.5000 முதல் ரூ.9000 ஆக இருந்தது.
இந்த சம்பள வேறுபாடு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும்,
சுப்ரீம் கோர்ட்டிலும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழக
நிதித்துறை செயலாளர் சண்முகம் ஒரே மாதிரியான சம்பள அளவை நிர்ணயம் செய்துள்ளார். டிரைவர்களின்
சம்பளத்தை உயர்த்த வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை 2013ம் ஆண்டு நவம்பர்
மாதம் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. மேலும் நிதி செயலாளரின் உத்தரவின்படி சம்பளம் வழங்க
வேண்டும் எனவும் கோர்ட் தீர்ப்பளித்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...