Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மதிப்பெண் என்பது வாழ்க்கையல்ல... வாழ்வும் அதோடு நிற்பதல்ல...தோல்விக்கு விலை உயிரல்ல...

 
             மதிப்பெண் என்பது வாழ்க்கையல்ல... வாழ்வும் அதோடு நிற்பதல்ல...தோல்விக்கு விலை உயிரல்ல...

                     நாளை (மே 9) பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவருகின்றன. எல்லோருமே முதலிடம் பெற்றால்,அதில் என்ன பெருமை? எல்லோருமே டாக்டர், இன்ஜினியர்களானால், மற்ற வேலைகளை யார் செய்வது? படிப்புக்கேற்ப கல்லூரி, எதிர்காலம் எங்கேயும், எல்லோருக்கும் உண்டு. மதிப்பெண்குறைந்தாலோ, ஒரு முறை தோற்றாலோ தவறில்லை. அந்தத் தோல்வி தரும் வலியை, வெற்றியாக்கும்வெறி வேண்டும்.
விலை மதிப்பில்லாதது... மீண்டும் வராதது உயிர் என்ற நினைப்பு... பெற்றோருக்கும், பிள்ளைக்கும்எப்போதும், நினைவில் வேண்டும் என்கின்றனர், மனநல டாக்டர்கள்.

                     டாக்டர் விக்ரம் ராமசுப்ரமணியன்: பெரும்பாலான வீடுகளில், பிள்ளைகளின் மனஅழுத்தத்திற்கு பெற்றோர்கள்தான் காரணம். உங்களது ஆசை, எதிர்பார்ப்பு நடக்காவிட்டால், பிள்ளைகளை குத்தி காட்டாதீர்கள்.பெற்றோருக்கு பயந்து தான், பிள்ளைகள் தவறான முடிவைத் தேடுகின்றனர். நல்ல மதிப்பெண் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும், உங்கள் பிள்ளை என்பதே பெருமையான விஷயம். அடுத்தவீடு, எதிர்வீடு, உறவினர் வீட்டுப்பிள்ளைகளின் மதிப்பெண்ணுடன், ஒப்பிடாதீர்கள். தோல்வியடைந்தால் கூட, மீண்டும் தேர்வெழுதவாய்ப்பு இருக்கிறது, என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்துங்கள். மறந்தும் கூட அவமரியாதையாக, அலட்சியமாக நடத்தாதீர்கள். மதிப்பெண் குறைந்தால், உங்கள் பிள்ளை தான், மனதளவில்சோர்ந்து போயிருப்பார். "உனக்கு... நாங்கள் இருக்கிறோம்' என்ற நம்பிக்கை தரவேண்டியது மட்டுமே,பெற்றோரின் கடமை. இப்போதே அரவணைத்து ஆறுதல் சொல்லுங்கள்.மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையல்ல

                          டாக்டர் தீப்: படிப்பும், மதிப்பெண்ணும் வாழ்க்கையின் ஓர் அங்கம் தான். அதுவே வாழ்க்கையல்ல. நீங்கள் அந்தநேரத்தில் என்ன எழுதியிருக்கிறீர்களோ... அதற்கு தான் மதிப்பெண்ணே ஒழிய, உங்கள், திறமை,அறிவை எடைபோடுவதல்ல. வெறும் மதிப்பெண் மட்டுமே, திறமையை முடிவு செய்யாது. தோல்வியடைந்தால்,அடுத்த நிலையை யோசிக்க வேண்டும். மதிப்பெண் குறைந்தால், வேறு என்ன படிக்கலாம் என்று தான் சிந்திக்க
வேண்டும். ஒருவேளை பெற்றோர் வருத்தப்பட்டால் கூட, "உங்கள் நன்மைக்காக தான்... அதில் கோபம் இல்லை'என்பதை, புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இல்லாத உலகத்தை, பெற்றோரால் நினைத்துப் பார்க்க முடியுமா? கேவலம்... மதிப்பெண்ணுக்காக, பெற்றோரை ஆயுள் முழுவதும் அழவைக்கலாமா? மனஅழுத்தம், மனக்குழப்பம்இருக்கிறதா... அம்மா, அப்பா, நண்பரைத் தேடிச் செல்லுங்கள். அவர்களுடன் சேர்ந்து பேசினால், மனம்
தெளிவாகும்.

உங்களுக்கு வழிகாட்ட, 24 மணி நேரமும் நாங்கள் தயாராக இருக்கிறோம், மாணவர்களே...
9842178739க்கு அழையுங்கள்.




2 Comments:

  1. This is the best advice and counselling for correct time. Thanks
    Prevention is better than cure

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive