அலகு விட்டு அலகு மாறுதல் குறித்து செயலாளருடன் பேசி விரைவில் முடிவெடுக்கப்படும் என இயக்குநர் பதில்; செ.முத்துசாமி பிரத்யேக பேட்டி.
இன்று மதியம் பள்ளிக்கல்வி இயக்குநருடன் தமிழ்நாடு ஆசிரியர்
கூட்டணியின்பொதுச் செயலாளர் திரு. செ.முத்துசாமி தலைமையில் சந்திப்பு
நடைபெற்றது.
அப்பொழுது தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள நடுநிலைப் பள்ளிகளை
உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் பொழுது தற்பொழுது நடைமுறையில் உள்ள
விதிகளை மாற்றி (அதே பள்ளியில் பணிப்புரிபவர்கள் மட்டும் மாறுதலுக்கு
அனுமதித்தல்) அதே பள்ளியில்பணிப்புரிபவர்கள் விருப்பின்மை தெரிவித்தால்
ஒன்றியத்தில் உள்ள மற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மாறுதல்
வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அலகு விட்டு அலகு மாறுதல் வழங்க
இந்தாண்டு நடவ்டிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இச்சந்திப்பின்
பொழுது மாநில தலைவர் மணி, தலைமை நிலைய செயலாளர் சாந்தகுமார், மாநில துணைத்
தலைவர் ரக்ஷித் ஆகியோர் உடனிருந்தனர்.
Heartful thanks for unit transfer sankar
ReplyDeleteஅலகு விட்டு அலகு மாறுதல் வழங்குவதால் அரசுக்கு எந்த வழியிலும் நிதி இழப்பு ஏற்படாது மேலும் ஆசிரியர்களின் முன்னுரிமையிழந்து விருப்பத்தின் பேரின் செல்வதால் இம்மாறுதலுக்கு அரசு அனுமதிக்கலாமே.
ReplyDeleteஅலகு விட்டு அலகு மாறுதல் வழங்குவதால் அரசுக்கு எந்த வழியிலும் நிதியிழப்பு ஏற்படாது.மேலும் ஆசிரியர்கள் முன்னுரிமையை இழந்துதான் விருப்பத்தின் பேரில் செல்வதால் இம்மாறுதலுக்கு அனுமதி அளிக்கலாமே.
ReplyDelete