Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவ-மாணவிகளுக்கு அனைத்து சான்றிதழ்களும் பள்ளியில் கிடைக்க நடவடிக்கை

              மாணவ - மாணவிகளுக்கு அனைத்து சான்றிதழ்களும் பள்ளியிலேயே கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.வருவாய்த்துறை செயல்பாடுகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. 
 
             கூட்டத்தில் வருவாய் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஸ்ரீதர், நில நிர்வாக ஆணையர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.அப்போது அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:அரசின் முதுகெலும்பாக விளங்குகின்ற துறை வருவாய்த்துறை. மிகவும் குறுகிய காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அம்மா திட்டம், பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 
              விரைவு பட்டா மாறுதல், இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்குவது, உழவர் பாதுகாப்பு திட்டம், வங்கிகள் மூலம் முதியோர் ஓய்வுதியம் வழங்குதல் மற்றும் மாணவ - மாணவிகளுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பள்ளியிலேயே பெற்றுக் கொள்ளுதல் போன்ற திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் உரிய நேரத்தில் சென்றடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.




1 Comments:

  1. Every thing is done by school means what about the teaching . How will produce result. so consider the teaching line. we spend so much time for collect the details verify so..... much. pls consider teachers then how will take class . All are done only by computer teacher but no computer teacher appointment.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive