Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்ச்சி சதவீதம் குறைந்த மாவட்டங்கள் குறித்து இயக்குநர் தேவராஜன் ஆய்வு


             பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், தேர்ச்சி சதவீதம் குறைந்த மாவட்டங்களின், முதன்மை கல்வி அதிகாரிகள் (சி.இ.ஓ.,) மீது நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.சமீபத்தில் வெளியான, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக, அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள் கூட்டம், நாளை (மே 27 ல்), பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையில், சென்னையில் நடக்க இருக்கிறது. இதில், ஐந்து ஆண்டுகளில், மாவட்ட வாரியாக, தேர்ச்சி சதவீதத்தை ஆய்வு செய்ய உள்ளனர். கடந்த ஆண்டுகளில், நல்ல தேர்ச்சி விகிதம் இருந்தது, இக்கல்வி ஆண்டில், தேர்ச்சி குறைவாக காட்டிய, சி.இ.ஓ.,க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.

           மேலும், அரசு பள்ளிகளில், தேர்ச்சியை அதிகரிக்க, தேவையான பயிற்சி திட்டங்கள் குறித்தும், மாணவர்களுக்கு அரசு வழங்கும், பாட புத்தகங்கள், சீருடை போன்ற இலவச திட்டங்கள் எந்தளவிற்கு சென்றடைந்துள்ளது என்பது குறித்தும், ஆய்வு செய்ய உள்ளனர்.இதனால், தேர்ச்சி சதவீதம் குறைந்த மாவட்டங்களின், சி.இ.ஓ.,க்கள் மத்தியில், அச்சம் நிலவுகிறது. இக்கூட்டத்திற்கு பின், சி.இ.ஓ.,க்கள் பலர், பணியிட மாற்றம் செய்யப்படலாம் என, கல்வித் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.




6 Comments:

  1. The only problem in govt school is not to able to control the students...RTE act dominates teachers but gives full freedom to students...bcos of this..many students do not obey even the teachers those are very dedicative for students and govt as well

    ReplyDelete
  2. Ya 100 % correct now a days teachers are obey the students. Then how can be increasing the result..
    Very bad act for the educational system.

    ReplyDelete
  3. if one join in private school, their parents take care a lot like preparing food...making bath...sending to school van....ect...after some time they find dificult to pay fees...and join in govt school in , their parents take care nothing...even they dont attend the parents meeting...

    ReplyDelete
  4. எனக்கு தெரிந்த தமிழ் ஆசிரியர் ஒரு மாணவனுக்கு100மார்க் அளித்துள்ளார். ஆனால்மேற்பார்வையாளர் பல மணி நேரம் செலவிட்டு அதில் ஒரு சிறிய தவறு கண்டுபிடுத்து அதை 99ஆக மாற்றிவிட்டாராம். கல்வி உயர் அதகாரிகளே அரசுபள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் வாங்குவதை வரும்புவதில்லைபோல.

    ReplyDelete
  5. அரசு பள்ளிகளுக்கு விளம் பரம் தேவையில்லை. எப்பொழுதும ்காலி பணியிடம் இல்லாமல் பாரத்துக்கொண்டாலே போதும். பணியட மாறறம் மே 30ககுள் முடிக்க வேணடும்.இது இரண்டையும் சரியாக செய்தால் மாணவர்களின் கல்வி தரம் தானாக உயரு்ம்

    ReplyDelete
  6. Full freedom to students to do anything in school. Our only goal is good result in exam only. Teachers are cooking food in broken pots.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive