தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ரெயில்வே டிக்கெட் கவுண்டர்கள், இணையதளம் மற்றும் தட்கல் முறையில் டிக்கெட்
முன்பதிவு செய்த பயணிகள் இரண்டாம் வகுப்பு, குளிர்சாதன வகுப்பு உள்ளிட்ட
அனைத்து வகுப்புகளிலும் பயணம் செய்வதற்கு ரெயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட
அடையாள அட்டை தங்களுடைய பயணத்தின்போது எடுத்து செல்லவேண்டும் என்பது
கட்டாயம் ஆகும்.
‘பான்’ கார்டு, டிரைவிங் லைசென்சு, மத்திய அல்லது மாநில அரசு பிரத்தியேக
எண்ணுடன் கொடுத்த புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, புகைப்படம்
ஒட்டப்பட்டுள்ள கிரெடிட் கார்டு, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள
அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் புகைப்படம் ஒட்டப்பட்ட புத்தகம்,
அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது கல்லூரியால் கொடுக்கப்பட்ட அடையாள அட்டை,
ஆதார் கார்டு, மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களின் கீழ் செயல்படும்
மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்துறை சார்பில்
வழங்கப்பட்ட பிரத்தியேக எண் கொடுக்கப்பட்ட அடையாள அட்டை உள்ளிட்டவைகளை
பயணத்தின்போது காண்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...