Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்வித்துறை அலுவலகம் முற்றுகை போராட்டம் வாலிபர் சங்கத்தினர் - போலீசார் தள்ளு முள்ளு

       கடலூரில், தடையை மீறி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வாலிபர் சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதில், ஏற்பட்ட தள்ளு முள்ளுவில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டருக்கு காயம் ஏற்பட்டது.  
 
         அனைத்து தனியார் பள்ளிகளில் நலிவுற்றோருக்கானசதவீத 25 இடங்களை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் விவரங்களை தனியார் பள்ளி நிர்வாகம் வெளியிட வேண்டும். நலிவுற்றோருக்கான 25 சதவீத இடங்களை நிரப்பாத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து, அரசே ஏற்று நடத்த வேண்டும்.
 
         அரசு பரிந்துரை கட்டணத்திற்கு மேல் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கமும் இணைந்து நேற்று மாநிலம் முழுவதும் கல்வித்துறை அலுவலகங்கள் முன் முற்றுகை போராட்டம் நடத்தியது.
 
              அதன்படி கடலூரில், இந்திய மாணவர் சங்க மாநில துணைச் செயலர் மாரியப்பன் தலைமையில் 45 பேர் நேற்று காலை 11:30 மணி அளவில், மஞ்சக்குப்பம் மணி கூண்டில் இருந்து ஊர்வலமாக சென்று, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். கடலூர் புதுநகர் போலீசார், அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். தடையை மீறி, போராட்டக் குழுவினர் அலுவலக வளாகத்தில் நுழைய முயன்றதால், போலீசார், அலுவலக நுழைவு வாயிலில் இருந்த இரும்பு கேட்டை மூட முயன்றனர்.
 
                 போராட்ட குழுவினர் தடுக்க முயன்றதால், இருதரப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதில், இரும்பு கேட், அருகில் நின்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் உதட்டில் இடித்தது. அதில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்ததால் திடீர் பரபரப்பு நிலவியது. அதனைத் தொடர்ந்து போராட்டக் குழுவினர் நுழைவு வாயில் அருகில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive