Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கணினி பயிற்றுநர்களை நியமிக்க கோரிக்கை

        அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்க  தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை கணினி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
          தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைக் கணினி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா. பரசுராமன் சென்னை பள்ளிக்கல்வி இயக்குநருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
 
         மனு விவரம்: 1,880 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, 2-வது சிறப்பு தேர்வின் மூலம் தேர்ச்சிபெற்ற 140 கணினி பயிற்றுநர்களுக்கு பணிவரன்முறை செய்திட வேண்டும். பணிமூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட 192 கணினி பயிற்றுநர்களையும் பணிவரன்முறை செய்திட வேண்டும்.
 
           புதிதாக நியமனம் செய்யப்பட உள்ள கணினி பயிற்றுநர்களுக்கு முன்பாகவே இப்போது பணியாற்றும் கணினி பயிற்றுநர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்திட வேண்டும். 1,880 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு பணி விதிகள் உருவாக்கிட வேண்டும். தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கிவரும் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகளுக்கும் புதிய கணினி பயிற்றுநர் பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது




3 Comments:

  1. Good demands, government should consider it.

    ReplyDelete
  2. சுயநலமிக்க தலைவா பரசுராமா, நீயெல்லாம் ஒரு தலைவனா? பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர்களுக்காக ஒரு வார்த்தை கூட கோரிக்கை மனுவில் பேசவில்லை.64 மதிப்பெண் பெற்றுக் கொண்டு வெளியில் உள்ளோம். ஆனால் 63 மதிப்பெண் பெற்று வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு கவுன்சிங் கேட்கிறராய் வெட்கமாக இல்லை. சுயநலமாக சிந்திக்க தெரிந்தவன் தலைவனாக இருக்க தகுதியில்லை. காலம் பதில் சொல்லும்

    ReplyDelete
  3. சுயநலமிக்க தலைவா பரசுராமா, நீயெல்லாம் ஒரு தலைவனா? பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர்களுக்காக ஒரு வார்த்தை கூட கோரிக்கை மனுவில் பேசவில்லை.64 மதிப்பெண் பெற்றுக் கொண்டு வெளியில் உள்ளோம். ஆனால் 63 மதிப்பெண் பெற்று வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு கவுன்சிங் கேட்கிறராய் வெட்கமாக இல்லை. சுயநலமாக சிந்திக்க தெரிந்தவன் தலைவனாக இருக்க தகுதியில்லை. காலம் பதில் சொல்லும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive