Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வீட்டுக்கடன் பெறுவதில் உள்ள பிரச்னைகளை களைவது எப்படி.?

            வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் செய்து பார்' என்பது அனைவரும் ஒருமுறையாவது உச்சரிக்கும் கிராமத்து பழமொழி. வீடு கட்டுவதற்கு அனைவருக்கும் வசதி இருப்பதில்லை.  
 
           இதற்காக கடன்களை பெற நினைக்கும் போது முதலில் மனதில் தோன்றுபவை வங்கியின்வீட்டுக்கடன்களே . அவற்றைப் பெறுவதில் வரும் சிக்கல்களைப் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

                 வீட்டுக் கடன்களைப் பெறுவது          விளம்பரங்களில் காண்பது போல் மிகவும் எளிதானதாக இருந்தாலும், அது மிகவும் கடினமான மற்றும் நீளமான செயல்பாடாகவே உள்ளது. வட்டி விகிதங்கள் நிலையற்றதாக இருப்பதால் இந்தியாவில் வீட்டுக் கடன் பெற்றவர்கள் பெரும்பாலோர் பாதிக்கப்படுகிறார்கள். பணத்தின் மதிப்பை பொறுத்த வரை மிகவும் பெரிய கடன்களாக இருக்கும் வீட்டுக் கடன்களால், கடன் பெறுபவர்கள் அடையும் பாதிப்புகள் எண்ணிலடங்காது. அது போன்று வீட்டுக் கடன் பெற்றவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றி உங்களுக்கு கொடுத்துள்ளோம். இவற்றைப் படித்து பயன் பெறுவீர்கள் என்று நம்புகிறோம்..


ஆரம்ப கட்டத்தில் நிராகரிக்கப்படுதல்

            இது சோகமான செய்தி தான் ஆனாலும் உண்மை. பெரும்பாலானவர்களின் கடன்களை பெற முன்நிற்கும் ஆரம்ப கட்டங்களிலேயே நிராகரிக்கப் படுகிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், கடன் தரும் நிறுவனத்தின் தேவைகளுக்கும், கடன் பெறுபவரின் தகுதிக்கும் உள்ள முரண்பாடுகள் தான் காரணமாக உள்ளன. வயது, கள ஆய்வுகளில் தேர்ச்சியடையாமல் இருத்தல், முறையான ஆவணங்கள் தராமல் இருத்தல், வங்கிகள் முறையாக ஆவணங்களை பார்வையிடாமல் இருத்தல், வருமான வரம்பு மற்றும் பல்வேறு காரணங்களும் இந்த நிராகரிப்புகளின் பின் உள்ளன.

தீர்வு:

           ஆரம்ப கட்டத்தில் நிராகரிக்கப்படாமல் இருக்க விரும்பினால், வங்கிகளைப் பொறுத்து அவர்கள் விரும்பும் தகுதிகளை பரிசோதித்துப் பார்க்கவும். உங்களுடைய தகுதிக்கேற்ற வங்கிகளை தேர்ந்தெடுத்து விண்ணப்பம் கொடுங்கள். முறையான ஆவணங்களையும், பரிசோதிக்கத்தக்க விபரங்களையும் கொடுப்பது தான் ஆரம்ப கட்டத்தில உங்களுடைய வீட்டுக் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படாமல் இருக்க உதவும் வழிமுறைகளாகும்.

திரும்ப பெற இயலாத செயல்பாட்டு கட்டணம்

            திரும்ப பெற இயலாத செயல்பாட்டு கட்டணம் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம். நீங்கள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது உங்களுடைய வங்கி, 0.25 சதவிகிதம் முதல் 1 சதவிகிதம் வரையில் இந்த திரும்ப பெற இயலாத செயல்பாட்டு கட்டணம் கட்டணத்தை செலுத்தும் படி வங்கி உத்தரவிடம். வழக்கமாகவே இந்த செயல்பாட்டுக் கட்டணத்தை திரும்பப் பெற இயலாது. உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் கூடு இந்த செயல்பாட்டுக் கட்டணத்தை திரும்பப் பெற இயலாது. நீங்கள் தரக் கூடிய கட்டணங்கள், வீட்டுக் கடனுக்காக விண்ணப்பம் செலுத்துவதற்கான கட்டணமாக கருதப்படும்.

விரும்பிய அளவு கடன் அனுமதிக்கப்படுவதில்லை

       வீட்டுக் கடன் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. வங்கிகளைப் பொறுத்த வரையில், கடன் வாங்குபவர் அதை திரும்ப செலுத்தும் வல்லமை உள்ளவராக இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான தகுதியாகும். மேலும், வங்கிகள் கடனுக்கான அதிகபட்ச தொகையை நிர்ணயிக்கும் வேளகைளில், வேறு சில தகுதிகளும் இடம் பெறுகின்றன.

           செலுத்தப்படாமல் இருக்கும் கடன்கள், நிதி வரலாறு, விண்ணப்பதாரரின் மாதாந்திர வருமானம், பழைய கடனை திரும்ப செலுத்திய விதம், கிரெடிட் கார்டின் பயன்பாடு, பவுன்ஸ் ஆன காசோலைகள், வங்கிகளில் அவரின் சராசரி இருப்பு, தற்போதைய வேலையில் இருக்கும் கால அள, மொத்தமாக வேலை செய்த கால அளவு மற்றும் செய்யும் வேலையின் தன்மை ஆகிய விஷயங்களும் இந்த தொகையின் அளவை நிர்ணயம் செய்வதில் பங்கு பெறுகின்றன.

இந்த தகவல்களை எல்லாம் ஒன்றாக திரட்டி, தன்னால் பணத்தை திரும்ப பெற முடியும் தொகை எவ்வளவு என்று வங்கி தீர்மானித்து அதனையே கடனாக வழங்கும்.

வட்டி விகிதங்கள் தொடர்பான பிரச்னைகள்

வீட்டுக் கடன்களைப் பொறுத்த வரையில் நிலையான வட்டி விகிதம் (Fixed Rate) சிறந்ததா அல்லது காலத்திற்கேற்ப மாறும் ப்ளோட்டிங் வட்டி விகிதம் (Floating Rate) சிறந்ததா? வீட்டுக் கடன் பெறும் ஒவ்வொரு நபரும் எதிர்கொள்ளும் குழப்பம் இதுவாகும்.

 குறிப்பிட்ட வகை கடன் பெறுவது என்று பெருமளவு முடிவு செய்து விட்டாலும், சில நேரங்களில் வீட்டுக் கடன்களின் விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் உங்களுடைய வட்டி விகிதங்களில் விளையாடி விடுகின்றன. எடுத்துக்காட்டாக, நீங்கள் நிலையான வட்டி விகிதம் வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தாலும், உங்களுக்கு தரப்படும் அச்சு ஆவணங்களில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நிலையான வட்டி விகிதம் மாறும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால், உங்களுடைய நிலைமை மிகவும் மோசமாகி விடும். அதேபோல, ஃப்ளோட்டிங் வட்டி விகிதங்களின் போது, வட்டி குறையும் நேரங்களுக்கான பலன்களை வங்கிகள் நிராகரித்தாலும், உங்களுக்கு சிறிதளவே பலன் கிடைக்கும். இது போன்ற சூழல்களை தவிர்க்க, வீட்டுக் கடன்களுக்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மிகவும் கவனமாக நீங்கள் படித்துப பார்த்து, உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

சொத்து மதிப்பில் மாறுபாடுகள்

நீங்கள் ஒரு சொத்தை வாங்க திட்டமிடுகிறீர்களா? ஆமாம் என்றால், இந்த கருத்தை படிப்பது மிகவும் அவசியம். நீங்கள் ஒரு சொத்தை வாங்கும் போது அதன் மதிப்பாக குறிப்பிடும் அளவையே, உங்களுடைய வங்கியும் எடுத்துக் கொள்ளும் என்று கருத வேண்டாம். வங்கிகள் அவற்றிற்கான வழிமுறைகளில் சொத்துக்களை மதிப்பீடு செய்கின்றன. இதற்காக சட்டப்படியான, தொழில்நுட்பம் தெரிந்த மற்றும் நிதி மதிப்பீடு செய்பவர்கள் பயன்படுத்தப்படுவார்கள்.

டவுன் பேமண்ட் (Down Payment)

நீங்கள் டவுண் பேமண்ட் கட்டாமல், உங்களுக்கான வீட்டுக் கடன் விநியோகிக்கப்பட மாட்டாது. டவுன் பேமண்ட் என்பது, உங்களுடைய வீட்டுக் கடனில் 10 முதல் 20 சதவிகிதத்தில் ஒரு சிறு தொகையை செலுத்துவது தான். இது ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும்.

இந்த பணத்தை செலுத்துவது வீட்டுக் கடனை பெறுவதற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, நீங்கள் 10 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெறும் போது, அதில் 1 அல்லது 2 இலட்சம் ரூபாய் டவுன் பேமண்ட் ஆக இருக்கும். இந்த பணத்தை கடன் பெறுபவர் கடன் பெறும் போது வைத்திருக்க வேண்டும்.

மேலும், சந்தை விலையை விட குறைவாக வங்கி உங்களுடைய சொத்தை மதிப்பீடு செய்தால், கடன் பெறுபவர் மீதத் தொகையை செலுத்த வேண்டும். இதன் மூலம் உங்களுடைய டவுன் பேமண்ட் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து விடும். இந்த சிக்கலான சூழலை திறனுடன் எதிர்கொள்ள நினைத்தால், சொத்தை முன்னதாகவே மதிப்பிட்டு விடுங்கள் மற்றும் டவுன் பேமண்டை உங்களிடம் தயாராக வைத்திருங்கள்

பத்திரம் மற்றும் தடையில்லா சான்றுதல்

நீங்கள் மிகவும் எதிர்பார்க்கும் வீட்டுக் கடன் நிராகரிக்கப்பட காரணமாக இருப்பவை டைட்டில் டீட் மற்றும் தடையில்லா சான்றுகள் ஆகியவையாகும். இவற்றை வங்கி கேட்கும் வடிவங்களில் கொடுக்க வேண்டியது அவசியமாகும். இது போன்ற ஆவணங்களை, சரியான வடிவங்களில் கொடுக்காமல் இருந்தால் நீங்கள் வீட்டுக் கடன் பெறுவது கனவு தான்.

இது போன்ற சிக்கலான சூழல்களை எதிர்கொள்வதை தவிர்க்க, வங்கிகள் எதிர்பார்க்கும் எல்லாவிதமான ஆவணங்களைப் பற்றியும் விசாரியுங்கள் மற்றும் அவற்றை குறிப்பிட்ட நேரத்தில் தயாராக வைத்திருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்திடுங்கள்.

முடிவுரை

ஒரு வீட்டையோ அல்லது சொத்தையோ வாங்குவது அனைவருக்கும் கனவாக இருந்தாலும், அது வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளில் ஒன்றாகவும் உள்ளது. ஒவ்வொரு தனி மனிதருனும் சொத்துக்களை தங்களுடைய சேமிப்புகள் அல்லது வருமானத்தை கொண்டே வாங்க முடிவதில்லை.


அவர்களுக்கு வங்கிகளின் வீட்டுக் கடன்கள் தேவைப்படுகின்றன. வீட்டுக் கடன்கள் மக்கள் விரும்பும் வழிமுறைகளில் ஒன்றாக இருந்தாலும், அவற்றைப் பெறுவது அவ்வளவு எளிதும் அல்ல. இந்த செயல்பாட்டில் பெரும்பாலானவர்கள் பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள் ஆனால் மேற்கண்ட தகவல்களை கொண்டு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.




1 Comments:

  1. அன்பர்களே,
    இக்கட்டுரை மிகவும் அனுபவித்து ,நடைமுறையில் உள்ளவாறு எழுதப்பட்டுள்ளது. வங்கியில் சென்று வீட்டுக்கடன் மேனேஜரைப் பார்த்தால் சிரித்துக்கொண்டே என்ன விசயம் என்பார். வீட்டுக்கடன் என்றதும் அவர் முகம் கோணிக்கொள்ளும். அதன் பிறகு உங்களை விரட்டுவதில், அல்லது தவிர்ப்பதில் கவனமாக இருப்பார்.
    என் அனுபவம்
    1.அனைத்தையும் சரியாக வைத்துக்கொண்டு தேசிய வங்கிக்கு சென்றேன். பலமுறை இழுத்தடித்துவிட்டு முடியாது என்றார்.
    2.ரெப்கோ வங்கி மேளாவிற்கு சென்றேன். பார்ம் எழுதிக்கொடுங்கள் என்றனர். நாங்களே தொடர்பு கொள்கிறோம் என்றனர்.நாட்கள் கடந்தன. நான் தொடர்பு கொண்ட போது காலையில் பேசுங்கள், மாலையில் பேசுங்கள் என்றனர்.முடியவில்லை.
    3.தனியார் வங்கிக்குச் சென்றேன். மேனேஜர் அனைத்தையும் கேட்டுவிட்டு 15 நிமிடத்தில் அழைக்கிறேன். வெளியில் அமருங்கள் என்றார். ஒரு மணிநேரம் ஆகியும் அழைக்கவில்லை.கடைசியில் என்னை கடந்துதான் சென்றார் வீட்டுக்கு சென்றுவிட்டார். உதவியாளரிடம் கேட்டதற்கு அவரிடம் போனில் பேசுங்கள் என்றார்.ஒன்றும் ஆகவில்லை. கடைசியில் கந்து வட்டி வங்கி என அழைக்கபெறும் வங்கியின் உள்ளே சென்று கூறினேன். ஒரு மணிநேரத்தில் என் பணி முடிந்தது. ஒரு வாரத்தில் கடன் தொகை அனுமதிக் கடிதம் வந்தது. பின் கடன் பெற்று வீட்டைக்கட்டினேன். 8 வருடத்தின் முடிவில் கடனை முழுவதும் கட்டி ஒரு வாரத்தில் என் பத்திரம் அனைத்தையும் மீள பெற்றேன்.
    அதிகமான வங்கி மேனேஜர்கள் வீட்டுக்கடன் வாங்குபவர்களை புழுவைவிட கேவலமாகத்தான் பார்க்கிறார்கள்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive