ஓய்வூதியர்கள், புதிய மருத்துவ
திட்டத்திற்கு, ஜூன் 30க்குள், விபரங்களை படிவத்தில் தெரிவித்து, அடையாள
அட்டை (ஐ.டி., கார்டு) பெறலாம்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியருக்கான புதிய மருத்துவ திட்டம்
வரும் ஜூலை முதல் அமலாகவுள்ளது. இதுவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக
சேரும் ஓய்வூதியர்கள், செலவு செய்தபின், பில்களை, ஓய்வூதிய இயக்குனருக்கு
அனுப்பி, சிகிச்சை செலவை பெறுகின்றனர். இனி அவர்கள் சிகிச்சைக்கு
சேரும்போதே, அதற்கான அடையாளஅட்டையை
காட்டி பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறலாம். இதற்காக அவர்கள் புதிய அடையாள
அட்டையை பெற வேண்டும். இதைப் பெற, ஒரு படிவத்தை பூர்த்தி செய்து,
கருவூலத்தில் வழங்க வேண்டும். இப்படிவத்தில், ஓய்வூதிய கொடுப்பாணை எண்,
ஓய்வூதியரின் கணவர் அல்லது மனைவி பெயர் விபரம் தரவேண்டும். அவர் ஏற்கனவே
அரசு ஊழியராக இருப்பின், அவரது மருத்துவ கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும்.
கணவரோ அல்லது மனைவியோ ஓய்வூதியராக இருப்பின், அதன் விபரங்களை குறிப்பிட
வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான பிரிமியத் தொகையை, கணவர்
அல்லது மனைவியில், யாரிடம் பிடித்தம் செய்வது என குறிப்பிட வேண்டும்.
ஓய்வூதியர் குடும்ப ஓய்வூதியராக இருந்தால், அதை எந்த வங்கியில் பெறுகிறார்
என தெரிவிக்க வேண்டும். ஒருவர் 2 குடும்ப ஓய்வூதியம் பெற்றால், எந்த
ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என தெரிவிக்க வேண்டும்.
இவ்விபரங்களை ஜூன் 30க்குள் படிவத்தில் பூர்த்தி செய்து வழங்க வேண்டும், என
உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...