மதிப்பெண் சான்றிதழையோ அல்லது பள்ளி இறுதி
வகுப்பு மாற்றுச் சான்றிதழையோ தொலைத்த மாணவர், டூப்ளிகேட் சான்றிதழுக்கு
விண்ணப்பித்து அது கிடைக்கும்வரை, சி.சி.எம். எனப்படும் சான்றிட்ட
மதிப்பெண் நகலை (சர்ட்டிபைடு காப்பி ஆஃப் மார்க்ஷீட்) அரசுத் தேர்வுகள்
இயக்ககத்திலிருந்து பெற்று உபயோகிக்கலாம்.
சான்றிட்ட மதிப்பெண் நகலைப் பெற, அதற்கென
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் கிடைக்கும் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி
செய்து கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும். அத்துடன் கடைசியாகப் படித்த
பள்ளியின் தலைமை ஆசிரியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, கட்டணத் தொகையாக
ரூ.305-ஐ அரசுக் கருவூலத்தில் செலுத்தியதற்கான ரசீதை இணைத்து
அனுப்பவேண்டும். இத்துடன், சுயமுகவரியுடன் கூடிய உறையில் ரூ.30 மதிப்புள்ள
தபால் தலையை ஒட்டி அனுப்பவேண்டும்.
சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் சென்னை ஆயிரம்
விளக்குப் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலக் கிளையில் பணம்
செலுத்த வேண்டும். மற்ற ஊரைச் சேர்ந்தவர்கள், அந்தந்த ஊரிலுள்ள ஸ்டேட்
வங்கியின் கரூவூலக் கிளையில் பணம் செலுத்தி ரசீது பெற வேண்டும். சான்றிட்ட
மதிப்பெண் சான்றிதழ், ஓரிரு நாட்களில் விண்ணப்பதாரரின் வீட்டு முகவரிக்கு
அனுப்பப்படும்.
ஓர் ஆண்டு வரை இந்தச் சான்றிதழைப்
பயன்படுத்தலாம். அதற்குள் டூப்ளிகேட் சான்றிதழுக்கு விண்ணப்பித்து புதிய
சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...