ஃபேஸ்புக்கில்,
இந்தியாவில் உள்ள 13 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளில் 73% பேர் கணக்கு
வைத்துள்ளதாக அசோசம் சர்வே தெரிவித்துள்ளது.
இவர்கள் சமூக வலைதளங்களில்
கணக்கு வைத்திருப்பது அவர்களது பெற்றோர்களில் 75% பேருக்கு தெரியும்
என்றும், 82% பெற்றோர்கள் அவர்கள் கணக்கு தொடங்க உதவி புரிகின்றனர் என்ற
அதிர்ச்சி தகவலையும்
இந்த சர்வே வெளியிட்டுள்ளது.மேலும் 8-13 வயதில் உள்ளவர்கள் இதுபோன்ற சமூக
வலைதளங்களை பயன்படுத்துவதன் மூலம் தவறான வழிநடத்தலுக்கு
உட்படுத்தபடுவதாகவும் கூறப்படுகிறது. சரியான வலைதள கண்காணிப்பு இல்லாததே
இதற்கு காரணம் என்கின்றனர்.
ஃபேஸ்புக்
மட்டுமில்லாமல் சமுக வலைதளங்களான ட்விட்டர்,ஃபிளிக்கர்,ஆர்குட் போன்ற சமூக
வலைதளங்களிலும் கணக்கு வைத்துள்ளனர் என்பதும், இவர்கள் கணக்கு
வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த
வயதினர்கள் கணக்கு தொடங்க சமூக வலைதளங்கள் அனுமதிக்காததால் இவர்கள் தவறான
வயதை குறிப்பிட்டு கணக்கு தொடங்குகின்றனர் எனபது குறிப்பிடத்தக்கது.
Nice Information sir.........
ReplyDelete