Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

5% மார்க் தளர்வு அடிப்படையில் சான்று சரிபார்ப்பில் மீண்டும் வெயிட்டேஜ் - Dinakaran


          டிஇடி தேர்வில் அரசு அறிவித்த 5 சதவீத மதிப்பெண் தளர்வு அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நேற்று தொடங்கியது. 

             டிஇடி தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கும் சதவீத அடிப்படை போட்டதால் பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.டிஇடி தேர்வில் 150 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் வெயிட்டேஜ் மதிப்பெண் முறை கொண்டு வரப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததைஅடுத்து வெயிட்டேஜ் மதிப்பெண்களை நீதிமன்றம் ரத்து செய்தது.இதையடுத்து 5 சதவீத மதிப்பெண் தளர்வு அடிப்படையில் டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேருக்கு நேற்று சான்று சரிபார்ப்பு தொடங்கியது. மொத்தம் 29 மையங்களில் சான்று சரிபார்ப்பு தொடங்கி 12ம் தேதி வரை நடக்கிறது. நேற்று மாவட்ட வாரியாக மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரிகள் ஒவ்வொரு மையத்துக்கும் வரவழைக்கப்பட்டனர்.

            சான்று சரிபார்ப்பு மையத்தில் அனைத்து பட்டதாரிகளுக்கும் ஒரு படிவம் வழங்கப்பட்டது. அதில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட் ஆகிய படிப்புகளில் பெற்ற மொத்த மதிப்பெண்களை தனித் தனியாக அந்த படிவத்தில் பூர்த்தி செய்து, அவற்றுக்கு தனித்தனியே சதவீதம் குறிப்பிட்டு வாங்கினர்.மேலும், வெயிட்டேஜ் மதிப்பெண்கள் போடக்கூடாது என்று நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், டிஇடி தேர்வில் பட்டதாரிகள் பெற்ற மதிப்பெண் ணுக்கு சதவீத அடிப்படை யில் மதிப்பெண் வழங்கியுள் ளனர். அதாவது 88 மதிப்பெண் பெற்ற ஒருவருக்கு 59 மதிப்பெண் போட்டுள்ளனர். வெயிட்டேஜ் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அனைத்து மதிப்பெண்களுக்கும் சதவீதம் போட்டு வாங்கியதுடன், டிஇடி தேர்வு மதிப்பெண்ணுக்கும் சதவீதம் போட்டு மொத்தம் 100 பெற வேண்டும் என்று மீண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் குழப்பியதால் பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து கேள்வி எழுப்பியவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியுள்ளனர். இதனால் பலர் கலக்கம் அடைந்துள்ளனர்.




8 Comments:

  1. enatha nadakthu oh god

    ReplyDelete
  2. 88 markuku 59 potrukangana i think % kandupidicirkanga.

    ReplyDelete
  3. what about experience and employment seniority .When they will announce marks.

    ReplyDelete
  4. Only 10th 12th degree over al percentage mattum 2digit la kurichchana that al. Engaluku weightage podala in trichy

    ReplyDelete
  5. those who went for verification pls tell clearly..........hw they divide

    ReplyDelete
  6. Tet pass seithavargalai Employment seniorityil posting podungappa

    ReplyDelete
  7. Ipdiye wait panni retired agapora agela than elarum work poga poroma?govinda

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive