தமிழக
'நோட்ஸ்' தயாரிப்பு நிறுவனங்கள், மூலப்பொருட்களின் விலை உ-யர்வை காரணம்
காட்டி, நோட்ஸ்களின் விலையில், கடந்த மாதம், 25 சதவீதம் அதிகரித்த
நிலையில், நோட்ஸ்களுடன் 'சிடி'யும் வழங்குவதாக கூறி, மேலும், 15 சதவீத
விலையை உயர்த்தி உள்ளன.
தமிழகத்தில், கோனார், வெற்றி,
மாஸ்டர், சுறா, சூர்யா, ஹீரோ, டால்பீன், டான், சேவியர், பாரதி உட்பட,
30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சார்பில், மூன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2
வரையிலான வகுப்புக்களுக்கு, நோட்ஸ்கள் வெளியிடப்படுகிறது.ஜூன், 2ம் தேதி
பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தற்போது, அனைத்து வகுப்புகளுக்கான
நோட்ஸ்களும் கடைகளில் விற்பனைக்கு வந்து விட்டது. நோட்ஸ்களின் விலையை
பொறுத்த வரை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 25 சதவீதம் வரை அதிகரிப்பு
செய்யப்பட்டுள்ளது.
நோட்ஸ்களின் விலை உயர்வுக்கு,
பேப்பர், அட்டை, கலிங்கம், நூல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையில்
ஏற்பட்டுள்ள உயர்வே காரணம், என நோட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்தன.
இந்த விலை உயர்வு, பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியது.இந்நிலையில், நோட்ஸ்களுக்கு ஸ்டிக்கர் புக், பாடங்களின்
தொகுப்புக்கள் அடங்கிய 'சிடி'க்கள் இலவசமாக வழங்குவதாகவும், அதற்கான
கூப்பன்கள் நோட்ஸில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டிக்கர் புக், 'சிடி'க்களை இலவசமாக வழங்குவதாக தெரிவிக்கும் நிறுவனங்கள்
அவற்றுக்கான செலவு, லாபத்தை நோட்ஸ்களின் விலையில், மறைமுகமாக திணித்து
வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.நோட்ஸில் உள்ள கூப்பனை பூர்த்தி
செய்து, அந்நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும். அதன் பின், கூப்பனில் உள்ள
முகவரிக்கு 'சிடி' அனுப்பப்படும் எனத் தெரிவித்துள்ளனர். பள்ளிகள்
திறக்கும் ஜூன் மாதத்தில் தான் 'சிடி'க்கள் வழங்கப்படும், என
தெரிவிக்கப்பட்டுள்ளது. நோட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் தகவலின்படி,
'சிடி'க்கள் வழங்கப்படும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...