Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கு: மாணவனுக்கு 2 ஆண்டு சிறை


         சென்னையில் பள்ளி வகுப்பறையிலேயே ஆசிரியரை கொலை செய்த வழக்கில் மாணவனுக்கு 2 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

         கடந்த 2012-ம் ஆண்டு சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்த மாணவர் ஒருவர் தனது ஆசிரியை உமா மகேஸ்வரியை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

             ஆசிரியரை சக மாணவர்கள் முன்னால் கொலை செய்த அந்த மாணவனை போலீஸார் கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பின்னர் மாணவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.
                   போலீஸ் விசாரணையின் போது மாணவன் அளித்த வாக்குமூலத்தில், படிப்பில் கவனம் செலுத்துமாறு ஆசிரியை உமா மகேஸ்வரி அடிக்கடி தன்னிடம் கூறியதும். தனது படிப்பு தொடர்பாக பெற்றோரிடம் தெரிவிப்பேன் என கூறியதும் கோபத்தை ஏற்படுதியதாகவும். அதனாலேயே அவரை கொலை செய்ததாகவும் கூறினார்.
              இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு சிறார் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவனை இரண்டு ஆண்டுகள் சிறுவர் இல்லத்தில் அடைக்குமாறு உத்தரவிட்டது.




15 Comments:

  1. comments pandrathu tet or tnpsc thavira samuka nalan visayangalukum pannalame?

    ReplyDelete
  2. comments pandrathu tet or tnpsc thavira samuka nalan visayangalukum pannalame?

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Inthamathiri students kkallam udanatiyaga dhukkala poda sattam valimaiyana sattam kondu varanam

    ReplyDelete
  5. Adukku avana release pannidalam. Thandanai adigamanal than kutram kuraiyum.

    ReplyDelete
  6. Oru thittamitta kolaiku 2 varuda siraya? Appo minor a irukum pothu thamil nadu la teacher a kollalaam, Delhi poi bus la ------ pannalaam. Yenna than sattamo?
    Sattathula ottai kelvi padurom, but intha judgement la SATTAMEA OTTAI.
    velangidum.

    ReplyDelete
  7. Adhigamana thandanai illai endralum nyayamana thandanai koduthirukka vendum. Ithu manavargal manathil thappana ennathai yerpaduthu. Oru asiriyarai kolai seithal 2 varuda thandanai mattumey kidaikum athanal ethu vendumanalum seiyalam endra ennam thondrum. Intha theerpu melum thappana ennathaiye undakkum.

    ReplyDelete
  8. ithu sattatheerkum theerpu sonna neethipathikku
    mattum avamanamilla ottu motha indiavukke Avamanam.ingu thane gundu vaitha theeveera vathikku biriyani kodutha namma sattam our teacher i konna andha paiyanukku kudutha antha dhandani ondrum perusilla.India vil neethi thurai eppavo setthu pochi

    ReplyDelete
  9. Pre planing murder ku ithu thaan thandanaiya...?
    Students adichalae tr' ku jail.,.
    Bt teacher a kola panna kooda 2 yr thaan..
    Vaazhga india..

    ReplyDelete
  10. I think the parent of the student are the sole responsibility of such a tragedy.
    When a minor is arrested for a criminal act (who lives with parent), then when he/she is convicted, the parents should also be included in the notorious act.
    When some incident happens to a student the parents argue for him/her, so why don't they take the blame for something done by their wards and share their punishment.

    ReplyDelete
  11. theerppu kodutha judge veetla ithea mathiri oru kolai nadanthu irunthal appaum ithea thirppu thana? pongada neeingalum unga therpum

    ReplyDelete
  12. very worst judgement. enimel entha teacherum student welfare pathi, result pathi kavalai padavendam pola.

    ReplyDelete
  13. Sir,
    Judgement are given so that the crime like that should not reoccur at future. But this judgement ???

    ReplyDelete
  14. அந்த மாணவன் வீட்டில் பெற்றோரிடம் சண்டையிடும் போது ஒருமுறையாவது கத்தியை காட்டி சண்டையோ அல்லது ஏதேனும் கணமான பொருள் கொண்டோ தாக்கி இருப்பான் பெற்றவர்கள் அதை பொருட்படுத்தமாட்டார்கள் காரணம் தம் குழந்தைகள் என்பதுதான்.அப்படிபட்ட மாணவர்கள் அடையாளம் கண்டு மருத்துவரிடம் அழைத்துச்சென்று நல்வழி படுத்வேண்டும் அப்படி செய்து இருந்தால் அந்த மாணவன் வாழ்க்கை வீனாகி இருக்குமா? பெற்றவர்களே இது மீடியா உலகம் உஷார் உஷார்.....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive