Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் குறைந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்.

பிளஸ் 2 தேர்வில், 60 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்ப, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில், மாநில அளவில் கோவை மாவட்டம் 13வது இடத்தில் உள்ளது. கோவை மாவட்டத்தை மாநில அளவில் முதலிடத்துக்கு கொண்டு வரும் நோக்கத்துடன், கடந்த ஆண்டு அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு, குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்றிருந்த பள்ளி ஆசிரியர்களுக்கு நான்கு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலையும், மாலையும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன.

முந்தைய ஆண்டு குறைந்த சதவீத தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு, முதன்மை கல்வி அலுவலகம் மூலம் நோட்டீஸ் தரப்பட்டது. இந்த ஆண்டு உறுதியாக 90 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி காண்பிப்பதாக,நோட்டீஸ் பெற்ற ஆசிரியர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்திருந்தனர்.இத்தகைய நடவடிக்கையின் விளைவாக இந்த ஆண்டு, கடந்த ஆண்டை விட 2 சதவீதம்அதிக தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 11வது இடத்துக்கு கோவை மாவட்டம் முன்னேறியுள்ளது. ஆனாலும், 60 சதவீதத்துக்கு கீழ் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி கூறியதாவது:கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் தேர்ச்சி சதவீதம் பெற உதவிய அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள்; ஆனாலும் இது போதாது. கோவை மாவட்டத்தை முதலிடத்துக்கு கொண்டு வரும் வரையில் ஓயக்கூடாது.

கணித பாடத் தேர்வு இந்த ஆண்டு கடினமாக இருந்ததும் தேர்ச்சி சதவீதம் குறைய ஒருகாரணம்.பிற பாடங்களில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக தேர்ச்சி கிடைத்துள்ளது. ஆசிரியர்களின் கடின முயற்சியால் 60 சதவீதத்துக்கு கீழ் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. பள்ளிக் கல்வித் துறை உத்தரவின்படி, இந்த ஆண்டு 60 சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சி பெற்ற மீதமுள்ள பள்ளிகளுக்கு, தனித்தனியாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும். இந்த ஆண்டு உறுதியாக, மாநிலத்தில் முதலிடத்தை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்கென சிறப்பு பயிற்சித் திட்டங்கள் வகுக்கப்படும்.இவ்வாறு ஆனந்தி கூறினார்.கடந்த ஆண்டு திருப்பூர் கல்வி மாவட்டம் கோவை மாவட்டத்துடன் இணைந்திருந்ததால், மொத்தம் 39 ஆயிரத்து 354 பேர் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு திருப்பூர் தனி மாவட்டமாக பிரிந்துவிட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் குறைவாக எழுதியுள்ளனர்.

பொள்ளாச்சி, கோவை கல்வி மாவட்டங்கள் இணைந்த கோவைவருவாய் மாவட்டத்தில் 10 பள்ளிகள் மட்டுமே 60 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 60 சதவீதத்துக்கு கீழ் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் குறைவு தான். பாட வாரியாக குறைந்த சதவீத தேர்ச்சி பெற காரணமாக இருந்த ஆசிரியர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட உள்ளது.




1 Comments:

  1. vettriarasan5/21/2014 8:44 am

    இன்னும் ஸ்கூல திறக்கல, பைய ஸ்கூல் பக்கமே திரும்பி பார்க்கல,அந்த பக்கம் போனா,வாத்தியாருங்க கூப்பிட்டு பள்ளிக்கு வரசொல்லறாங்க என்று ப்ள்ளியை சுத்திக்கிட்டு வேற வழியில போறா. ஆனா என்ன அரசு பள்ளி த.ஆ செய்து கொண்டுள்ளார் தெரியுமா? அந்த பாழா போற பசங்களுக்கு இலவச பஸ் பாஸ் ரெடி பண்ணியும், இலவசமா யூனிபார்ம் 2 செட்,இல்வச புத்தகம், இலவச் நோட்டு, ஜாம்ன்றி பெட்டி, இல்வச புத்தகபை களை வெயில்ல அலைச்சு வாங்கி ரெடியா ஸ்கூல் வெச்சிருக்காங்க, இந்த பாழா போற தேர்ச்சி அடைய தகுதியில்லா பையன் வந்து இந்த இலவசங்களை எல்லாம் வாங்கிகினு வேலைக்கு போயிடுவா. சிலர் வித்துட்டும் போவா. ஆன வாத்தியார் அவபின்னால சுத்திசுத்தி வாடா கண்ணு என் கூப்பிடுவா. இப்படி இருந்தா எப்படி ரிசல்ட் வரும்? அதிக்காரிக்கு தெரியாதா.? பாவம வாத்தியாரும் , த.ஆ
    கணிதப்பாடம் உள்ள தொழிற்கல்வி இ.எம்.ஆர். பாடப்பிரிவில் 3 அல்லது 4 அட்டைகள் பெற்ற மாணவர்களைச் சேர்த்து இயக்குனரே பாடம் நடத்தினால் கூட 90% வாங்கமுடியாது.கேள்வித்தாளை கொடுத்து எழுத சொன்னாலும் கூட முடியாது. இது எல்லாம் கிராமபுறமாணவர்களுக்குத் தான் பொருந்தும். அரசியல் வாதி இந்த மாதிரி பையனை எனஜியர் ஆக்குற என்று பணம் பெற்றுக்கொண்டு பள்ளியில் அவர் கெளரத்திற்காக நிர்பந்தப்படுத்தி சேர்த்து ஆசிரியர்களையும் த.ஆ ரையும் தேர்ச்சி விழுக்காடு குறைய செய்து கல்வித்துறையால் மானபங்கப்படுத்துகிறார்கள்.இது 100 க்கு 100 உண்மை. இது தவறு என எந்த அதிகாரியும் சொன்னா அந்த அதிகாரிக்கு களத்தில் என்ன நடக்கிறது என தெரியல என அர்த்தம். பாவம் ஆசிரியர்கல் நிலமை.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive