Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மதுரையில் பிளஸ் 2 தேர்ச்சி குறைவு ஏன்; தலைமையாசிரியர்கள் விளக்கத்தால் அதிர்ச்சி

 
           மதுரை மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் குறைந்தது தொடர்பாக அனைத்து தலைமையாசிரியர்களிடமும் கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது. மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் இந்தாண்டு 92.34 சதவீதம். இது, கடந்தாண்டை விட 1.43 சதவீதம் குறைவு.  
 
          மேலும், மாநில அளவில் 8வது இடத்தில் இருந்த மதுரை, இந்தாண்டு 16வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதுகுறித்து விளக்கம் கேட்க அனைத்து தலைமையாசிரியர்கள் கூட்டம், முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி தலைமையில் நடந்தது. பிளஸ் 2 தேர்வில், தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளியல் ஆகிய பாடங்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததும், ஒட்டுமொத்த தேர்ச்சி குறைய காரணமாக அமைந்ததாக, முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார். மேலும், கடந்தாண்டை விட 29 அரசு பள்ளிகள், 25 மெட்ரிக் பள்ளிகள், 20 உதவி பெறும் மற்றும் 7 பகுதி உதவி பெறும் பள்ளிகள், 3 கள்ளர், 3 ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் 5 மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைந்த பட்டியலையும் வெளியிட்டு, சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்களை தனித்தனியாக விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.
 
           இதில், 'அரசு பள்ளிகளில் மாணவர்கள் சரியாக வருவதில்லை. ஆசிரியர்கள் சொல்பேச்சை கேட்பதில்லை. அடிக்கக்கூடாது. திட்டக்கூடாது போன்ற காரணங்களால் கண்டிக்க முடியவில்லை. தனியார் பள்ளிகளில் இடம் கிடைக்காத குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தான் அரசு பள்ளிகளில் சேருகின்றனர்...' போன்ற காரணங்களை அடுக்கினர். இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், 'வகுப்பிற்கு மாணவர்களை வரவைப்பதும், தேர்ச்சியை அதிகரிப்பதும் உங்கள் கடமை. அதில் இருந்து தவறக்கூடாது,' என்றனர். பின் சி..., கூறுகையில், "இந்தாண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க உங்களுக்குள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு, பள்ளி துவங்கியதும் பாடத்தை ஆர்வத்துடன் நடத்த வேண்டும். அரையாண்டு தேர்வு வரை ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் விடுப்பு எடுப்பதை தியாகம் செய்து, தேர்ச்சியை அதிகரிக்க வேண்டும்," என்றார்.

              பட்டியல் தயார் : கூட்டத்தில், தேர்ச்சி குறைவான பாடங்களில், சம்பந்தப்பட்ட பள்ளிகள் வாரியாக ஆசிரியர்கள் பெயர் பட்டியலை தயாரிக்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அவர்களிடம் விளக்கம் கேட்கவும், விரைவில் இந்த ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்புக்கூட்டம் நடத்தவும் கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால், ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.




6 Comments:

  1. Teachers enna pannuvanga . . . oru maadu kuda vayalla vela seiyum pothu kuda solra pecha kekkuthu. but mannavarkal appdi ella. manavarkal support ellama eathum seiya mudiyathu. oru animals appadi erukum pothu nama ellam manitharkal co-operation ellama eathume seiya mudiyathu. govt students olungave erukarathu ella 1000 ku 10 per mattum than nalla erukanga. appadi erukum pothu teachers enna pannuvanga. thaniyar pallikalil parents support panranga but govt school la appadi ella. so problem varathan seiyum. munnadi eruntha kalvi muraikal varanum appothan ellame seiya mudiyum. atleast private school la erukara kandippula 1% kandippu seiyarathuku govt teachersku anumathi tharanum namma goverment. appo than nenga expect maathiri result kidaikum.

    ReplyDelete
  2. கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த +1 மாணவன்-மாணவரின் அத்துமீறல்.

    ReplyDelete
  3. vettriarasan5/15/2014 8:17 am

    60 சத்வீதம் குறைந்த தேர்ச்சி விழுக்காடு பெற்றுள்ள பள்ளி த.ஆ பணிநீக்கம் செய்த மு.க.அ அவர்களை முத்லில் பணிநீக்கம் செய்தும் , பள்ளி இயக்குனருக்கு மெமோ கொடுத்து விளக்கமும் அம்மா கேட்டு பின்னர்தான் த.ஆ பணிநீக்கம் செய்ய்வேண்டும். இதோடு மட்டுமின்றி வாக்காளர் பணி, டி.டி.சி, டின்.பி.எஸ்.ஸி தேர்வு நடத்திய த.ஆ ரை கல்விப்பணி பாதிக்கும் வகையில் வேலை வாங்கிய மாவட்ட ஆட்சியர் வருவாய் துறை, அரசில் 14 திட்டத்தைமட்டுமே கருத்தில் கொண்டு மன அழுத்த்தை ஏற்படுத்தி க்ல்விக்கடமை ஆற்றாமல் விடுத்த நலத்திட்ட இயக்குனர் மற்றும் சம்பந்தப்ப்ட்ட் அனைத்து துறை மேலதிகாரிகளுக்கு சேர்ந்து பணிநீக்கம் செய்தால் தான் இதற்கான் சரியான் தீர்வு கிடைக்கும். என்வே த.அ நன்றாக் பிழிந்து வேலை வாங்கிவிட்டு செருப்பு காலள்வு எடுக்கும் அளவுக்கு அவமதித்து இவ்வாறு செய்வது அரசியல் வாதிக்கு போடும் சலாம் ஆக த்ன்னலப்போக்ககாக அதிகாரிகள் நாற்காலியில் நிரந்தரமாக அமர போடும் நாடமாகிறது.

    ReplyDelete
  4. thozhar vetriarasan kooriya velaikalodu manavanai avan veetirku sendru thinamum pallikku azhaithu varum velaiyayum parka solkerara ceo. change the rules. asiriyar manavanai adika koodathu endru sattam podum govt, public exam yeludha 95% attendance avasiyam endru sattam podunga. manavargal manam pun padum padi pesa koodathu endru sollum govt, 50% marks vangubavarkaluku mattum than ella elavasangalumnu sollunga.
    ipppo theriyutha govt teachers yen avanga pillaikalai govt schoola padika vaikarathillanu, engaluku theriyum adiyatha maadu padiyathunu.

    ReplyDelete
  5. வெற்றியரசன்5/18/2014 1:14 pm

    இன்னும் ஸ்கூல திறக்கல, பைய ஸ்கூல் பக்கமே திரும்பி பார்க்கல,அந்த பக்கம் போனா,வாத்தியாருங்க கூப்பிட்டு பள்ளிக்கு வரசொல்லறாங்க என்று ப்ள்ளியை சுத்திக்கிட்டு வேற வழியில போறா. ஆனா என்ன அரசு பள்ளி த.ஆ செய்து கொண்டுள்ளார் தெரியுமா? அந்த பாழா போற பசங்களுக்கு இலவச பஸ் பாஸ் ரெடி பண்ணியும், இலவசமா யூனிபார்ம் 2 செட்,இல்வச புத்தகம், இலவச் நோட்டு, ஜாம்ன்றி பெட்டி, இல்வச புத்தகபை களை வெயில்ல அலைச்சு வாங்கி ரெடியா ஸ்கூல் வெச்சிருக்காங்க, இந்த பாழா போற தேர்ச்சி அடைய தகுதியில்லா பையன் வந்து இந்த இலவசங்களை எல்லாம் வாங்கிகினு வேலைக்கு போயிடுவா. சிலர் வித்துட்டும் போவா. ஆன வாத்தியார் அவபின்னால சுத்திசுத்தி வாடா கண்ணு என் கூப்பிடுவா. இப்படி இருந்தா எப்படி ரிசல்ட் வரும்? அதிக்காரிக்கு தெரியாதா.? பாவம வாத்தியாரும் , த.ஆ

    ReplyDelete
  6. vettriarasan5/19/2014 5:46 pm

    கிட்டதட்ட 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இதில் 200க்கு 200 மதிப்பெண் வாங்கியவர்கள் நகலை பெற்று பைண்ட் செய்து அழகு பார்கிறார்கள். கல்வித்துறை 200க்கு 200 வாங்கியவருக்கான நக்லை காலதாமதமாக வழங்க் வேண்டும். 199 வரை வாங்கியவருக்கு மட்டும் உடனே நகலை எடுத்து இணையதளத்தில் வெளியிட்டால் உண்மையிலே விண்ணப்பிக்கிறவருக்கு காலந்தாழ்தாமல் பொறியியலுக்கோ அன்றி மருத்துவத்திற்கோ விண்ணப்பிக்க ஏதுவாக இருக்கும் இதனை கல்வித்துறை கவனித்து சிந்தித்து செய்யவேண்டிய வேலையாகும். கவனிக்குமா?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive