Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பங்கள் அதிகரிப்பு! 'கட்ஆப்' அதிகரிக்க கை கொடுக்குமா இயற்பியல்

 
            மதுரை மாவட்டத்தில், பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது. 'எளிதாக வினாக்கள் அமைந்த இயற்பியல் பாடத்தில், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை,' என்ற ஆதங்கம் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
 
             மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வில், இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் பயாலஜி பாடங்களை கொண்ட அறிவியல் குரூப்பில், 22 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதியதில், 21 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், எளிதாக வினாக்கள் அமைந்த இயற்பியல் பாடத்தில், 98 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று, 78 பேர் 'சென்டம்' பெற்றனர். கணிதம் பாடத்தில், 142 பேர் 'சென்டம்' பெற்றாலும், 96 சதவீதமே தேர்ச்சி உள்ளது.குறிப்பாக, "இயற்பியல் மற்றும் கணிதம் பாடங்களில் 'சென்டம்' அதிகரித்தாலும், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை," என மாணவர்கள் ஆதங்கப்படுகின்றனர். இதனால், பொறியியல் படிப்புக்கான 'கட்ஆப்' குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால், மறுமதிப்பீட்டிலாவது ஒன்று, இரண்டு மதிப்பெண் அதிகரித்தால், 'கட்ஆப்' அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் தான் இந்தாண்டு விடைத்தாள் நகல் கேட்டு மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிக்கின்றனர். குறிப்பாக, இயற்பியல் பாட விடைத்தாள் நகல் தான் அதிகம் கேட்கின்றனர் என, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
 
             கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தாண்டு விடைத்தாள் நகல் பெற மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே கட்டணம் செலுத்தி, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு இயற்பியல் விடைத்தாள் நகல்கள் கேட்டு தான் மாணவர்கள் அதிகம் விண்ணப்பிக்கின்றனர். மே 14 கடைசி நாள் என்பதால் அன்றுதான் எத்தனை பேர் விண்ணப்பித்தனர் என்ற விவரம் தெரியவரும்.பிளஸ்2 முடிவு மே 9ல் வெளியானாலும், அன்றே விடைத்தாள் நகல் பெற விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்ய தாமதம் ஏற்பட்டது. நேற்று விடுமுறை என்பதால், மே 10ல் பதிவிறக்கம் செய்ய மாணவர்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டது. எனவே, விடைத்தாள் நகல் பெற்று, குறுகியகாலத்திற்குள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டிய சூழ்நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர், என்றார்.




3 Comments:

  1. It is welcome to entertain retotalling or reevaluation of aggrieved candidates.But it should not be a backdoor for malpractices and corruption to enhance. Hence, the retotalling and re-valuation should be done by a panel of nominated teachers and results of such evaluation should be tabulated in the form of Minutes with clear explanation of difference if any. The Director of Examinations may kindly take this vigilance point of view in deciding as it has a say on the other already high secured candidates. To speed up the process, four or five such Committees may be formed to quicker reviews.

    ReplyDelete
  2. It is welcome to entertain retotalling or reevaluation of aggrieved candidates.But it should not be a backdoor for malpractices and corruption to enhance. Hence, the retotalling and re-valuation should be done by a panel of nominated teachers and results of such evaluation should be tabulated in the form of Minutes with clear explanation of difference if any. The Director of Examinations may kindly take this vigilance point of view in deciding as it has a say on the other already high secured candidates. To speed up the process, four or five such Committees may be formed to quicker reviews.

    ReplyDelete
  3. மறு கூட்டல்/மறு மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கும் போது கல்வித்துறை சரியாக சி,டி யில் மறுகூட்டலில் மாற்றம் இருந்தாலும், மாற்றமில்லையானாலும் அதிக மதிப்பெண் பெற்றதை உறுதி செய்து தனியாக சி.டி தனிக்குழுவால் தயாரிக்கபட்டு உடனடியாக தேர்வர்களுக்கு வெளியிடவேண்டும். அதே மாதிரி மறுமதிப்பீடு செய்பவருக்கு மதிப்பெண் குறைந்தாலோ அல்லது அதிகம் ஆனாலோ அநத மதிப்பெண்னைத் தனியாக சி.டியில் அதற்கென ஒரு குழு நியமித்து அந்த பணியை சரியாக செய்ய வேண்டும். கல்வித்துறையில் இன்னும் தெளிவான சரியான அதிகாரிகள் தேவராஜைப் போல வரவில்லை. தனித்தனி மறுகூட்டல் சி.டிக்கள் மற்றும் தனித்தனி மறுமதிப்பீடு சி,டிக்கள் என தனித்த்னியாக கல்வித்துறை நிர்வாகித்தால் குழப்பம் ஏற்படாது. கவனத்தில் கொள்ளவும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive