பத்தாம் வகுப்பு மாணவர்கள், மறுகூட்டல்
கோரி, 26ம் தேதி முதல், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்,'' என,
தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பு: பத்தாம் வகுப்பு தேர்வு
முடிவு, 23ம் தேதி காலை (நாளை), 10:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த
தேர்வை, தனிதேர்வாக எழுதிய மாணவர்களுக்கு, 23ம் தேதியே, சம்பந்தபட்ட
மையங்களில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
மாணவர்கள்,
எந்த பாடத்திலும், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கலாம். இதற்கு, வரும், 26ம்
தேதி முதல், 31ம் தேதி மாலை, 5:00 மணி வரை, பள்ளி மாணவர்கள், அந்தந்த
பள்ளிகள் மூலமாகவும், தனிதேர்வு மாணவர்கள், அவர்கள் தேர்வெழுதிய மையங்கள்
மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
மறுகூட்டல்
கட்டணமாக, மொழிப்பாடங்களுக்கு, தலா, 305 ரூபாயும், இதர பாடங்களுக்கு, தலா,
205 ரூபாயும் செலுத்த வேண்டும். இந்த தொகையை, பள்ளியிலும், தனிதேர்வு
மையங்களிலும், பணமாக செலுத்த வேண்டும்.
தேர்வில்,
தோல்வி அடையும் மாணவர்களுக்கு, ஜூன் இறுதியில், உடனடி தேர்வு
நடத்தப்படும். இதற்கு, வரும், 26ம் தேதி முதல், 30ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம்.
தேர்வு
கட்டணமாக, 125 ரூபாயும், பதிவு கட்டணமாக, 50 ரூபாயும் செலுத்த வேண்டும்.
இந்த தொகையை, பள்ளியிலும், தனி தேர்வு மையங்களிலும் செலுத்தி, பெயரை பதிவு
செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, தேவராஜன் தெரிவித்து உள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...