குறைக்கப்பட்ட கட்டணத்தை வசூலிக்காமல், 22 ரூபாய் அதிகமாக வசூலித்ததால்,
'காஸ்' ஏஜன்சிக்கு, 3,000 ரூபாய், இழப்பீடு தொகை விதித்து, மாநில நுகர்வோர் கோர்ட்
உத்தரவிட்டுள்ளது. கடலுார் மாவட்டம், நெய்வேலியை சேர்ந்தவர், சின்னையா.
2009, பிப்., 12ம்தேதி, நெய்வேலி, மந்தாரகுப்பத்தில் இயங்கும்,
'ஸ்ரீவெங்கடேஸ்டவரா காஸ் ஏஜன்சி'யில்,சிலிண்டர் வாங்கினார்.
அதற்காக, 350
ரூபாய் கட்டணம் செலுத்தினார். ஆனால், அந்த நிறுவனம்,345 ரூபாய்க்கு, ரசீது
கொடுத்தது. ஐந்து ரூபாய், சிலிண்டர் டெலிவரி செய்பவருக்கு கொடுப்பதாக
தெரிவித்தது. ஆனால், முந்தைய வாரத்தில் சமையல் காஸ் சிலிண்டர்விலையை,
மத்திய அரசு குறைத்து விட்டது. அந்த உத்தரவின்படி பார்த்தால்,
சின்னையாவிடம், கூடுதலாக, 22ரூபாய், 71 பைசா, வசூலிக்கப்பட்டது. இது
குறித்து, காஸ் ஏஜன்சியிடம் கேட்டபோது, பதில் இல்லை.இதையடுத்து, கடலுார்
மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில், சின்னையா, வழக்கு தொடர்ந்தார். 10
ஆயிரம்ரூபாய், இழப்பீடாக வழங்க, காஸ் ஏஜன்சிக்கு, நுகர்வோர் கோர்ட்
உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, வெங்கடேஸ்வரா ஏஜன்சி, மாநில நுகர்வோர் கோர்ட்டில் முறையிட்டது. மனுவை விசாரித்த, மாநில நுகர்வோர் கோர்ட்டின் தலைவர், நீதிபதி
ரகுபதி, உறுப்பினர் அண்ணாமலை ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: நுகர்வோரிடம் இருந்து, 22 ரூபாய், 71பைசா கூடுதலாக வசூலிக்கப்பட்டதற்கு, 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு என்பது அதிகம். எனவே,வெங்கடேஸ்வரா ஏஜன்சி, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள், சேர்ந்தோ, தனித்தோ, சின்னையாவுக்கு,3,000 ரூபாய், இழப்பீடாக வழங்க வேண்டும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...