தமிழக அரசு ஊழியர்களுக்கு,பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், கடந்த 2003 ஏப்ரல் மாதம்
முதல் அமலில் உள்ளது. இந்த ஆண்டிற்கு பிறகு, பணியில் சேர்ந்துள்ள அரசு ஊழியர்கள்,
மற்றும் பணி வரன் முறை பெறாத அரசு ஊழியர்கள், சென்னையில் உள்ள தகவல்
தொகுப்பு மையத்தில், ஊழியர் பெயரில், பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண், பெற்றிருக்க
வேண்டும். இந்த எண் பெறவில்லை என்றால், புதிய பென்ஷன் திட்டத்திற்காக,
அடிப்படை சம்பளத்தில் இருந்து, பணம் பிடித்தம் செய்ய முடியாது.
எனவே,
இந்த எண் பெறாத அரசு ஊழியர்களுக்கு, ஜூன் மாதம் முதல் சம்பளம், நிறுத்தி
வைக்க வேண்டும், என
நிதித் துறை பென்ஷன் பிரிவில் இருந்து, அனைத்து கருவூல அலுவலகங்களுக்கு
அனுப்பியுள்ள,சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் கருணை
அடிப்படையில், பணிக்கு சேர்ந்தவர்கள்குறித்து, எந்த விதக் குறிப்புகளும்
இல்லை. எனவே, பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண் பெறாத,அரசு ஊழியர்களுக்கு ஜூன்
மாதம் முதல் சம்பளம் கிடைக்காது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...