மார்ச் 2014-ல் நடைபெற்று முடிந்த மேல்நிலைத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் 09.05.2014 அன்று காலை 10.00 மணிக்கு வெளியிடப்படுகிறது.
பள்ளி மாணவர்கள் இணையதள வழியாகவும், ளுஆளு மூலமாகவும், அவர்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்தல்
தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் 09.05.2014 அன்றே மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்றே தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் அவர்களின் தேர்வுமுடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. எனவே, தனித்தேர்வர்கள் அனைவரும் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 09.05.2014 முதல் 14.05.2014 வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 09.05.2014 முதல் 14.05.2014 வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டு, அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.
எனவே, விடைத்தாள் நகல் அல்லது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க 5 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் எவ்வித அவசரமுமின்றி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேல்நிலை சிறப்பு துணைத்தேர்வு, ஜூன் 2014 மார்ச் 2014-ல் நடைபெற்ற மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கு நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் 12.05.2014 முதல் 16.05.2014 வரை தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், தாங்கள் தேர்வெழுத விரும்பும் பாடங்களுக்கு உரிய தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கென தனி விண்ணப்பம் எதுவும் கிடையாது.
மார்ச் 2014 மேல்நிலைத் தேர்வுகளை சிறப்பாக நடத்தி, உரிய நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்த பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அனைத்து அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கு தேர்வுத்துறை நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...