பிளஸ் 2 தேர்வில், தோல்வி அடைந்த, 77 ஆயிரம் மாணவர்களுக்கு, அவர்கள் படித்த
பள்ளிகளிலேயே, ஒரு மாதம் சிறப்பு வகுப்புகள் எடுக்க, பள்ளி கல்வித்துறை
உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 9ம் தேதி வெளியான
பிளஸ் 2 தேர்வு முடிவில், 76,973 மாணவர்கள் தோல்வி அடைந்தனர். 8.21 லட்சம்
பேர் தேர்வெழுதியதில், 7.44 லட்சம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றனர்.
இதையடுத்து, தோல்வி அடைந்த மாணவர்கள், விரைவில், உடனடித் தேர்வை எழுத
உள்ளனர். இவர்கள், உடனடி தேர்வில், தேர்ச்சி பெற்று, நடப்பு கல்வி
ஆண்டிலேயே, உயர்கல்வியை தொடர்வதற்காக, பள்ளி கல்வித்துறை, புதிய உத்தரவு
ஒன்றை பிறப்பித்து உள்ளது. அதன்படி, '77 ஆயிரம் பேருக்கும், அவரவர் படித்த
பள்ளிகளிலேயே, ஒரு மாதம் சிறப்பு வகுப்புகள் எடுக்க வேண்டும்' என, பள்ளி
தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. ஆனால்,
பெரும்பாலான ஆசிரியர்கள், கோடை விடுமுறையை ஒட்டி, வெளியூர்களுக்கு
சென்றுவிட்டனர். இதனால், எந்த அளவிற்கு, சிறப்பு வகுப்புகள் பயன் தரும் என,
தெரியவில்லை.Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த 77 ஆயிரம் பேருக்கு சிறப்பு வகுப்பு
நல்ல யோசனை. தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு உடனடியாக தேர்வு நடத்துவதோடு, அதற்கு உரிய பயிற்சியாக சிறப்பு வகுப்புகளையும் நடத்துவது நல்ல பலனைத் தரும். ஆனால், ஆசிரியர்களின் உழைப்பை மாணவர்களும் உணர்ந்து அவர்களின் முயற்சிகளுக்கு ஒத்துழைத்தால் தான் நல்ல முடிவு வரும்.
ReplyDeleteoru varusham solra pechai kekathavanthan oru maadhathil keka porana? poya neengalum unga ideavum
ReplyDelete