தஞ்சையில்,
ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் தாங்கள் படித்த பள்ளிலேயே, வரும்,
4ம் தேதி வரை, வேலைவாய்ப்பை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ள அனைத்து
ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது' என, தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்புத்துறை
அலுவலர் கலைச்செல்வன் தெரிவித்தார்.
தஞ்சை
மாவட்டத்தில், ப்ளஸ் 2 மாணவ, மாணவியருக்கு மார்க் ஷீட் வழங்கும் பணி
நேற்று முதல் துவங்கியது. தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில்,
தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் (பொ)
ஜெயராஜ் ஆகியோர், மாணவ, மாணவியருக்கு மார்க் ஷீட்களை வழங்கி, பணியை நேற்று
துவக்கி வைத்தனர்.
இதையடுத்து, ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்பு பதிவை எளிமையாக மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து,
தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலர் கலைச்செல்வன் கூறியதாவது: ப்ளஸ் 2
தேர்ச்சி பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள
விரும்பும் மாணவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வர தேவையில்லை. தாங்கள்
படித்த பள்ளிக்கு, மார்க் பட்டியல் பெற செல்லும்போது, தங்களது ரேஷன்கார்டு
ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் நகலுடன் சென்று, தங்களது வேலைவாய்ப்பு பதிவை
அந்தந்த பள்ளியிலேயே ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு
அட்டையையும் அதே பள்ளியில் மாணவ, மாணவியர் பெற்று கொள்ளலாம்.
பள்ளி
இறுதி வகுப்பு தேர்ச்சியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கனவே பதிவு
செய்து, நடப்பு கல்வியாண்டில் ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்
மார்க் பட்டியல் பெற தங்களது பள்ளிக்கு செல்லும்போது ஆன்லைனில்
வேலைவாய்ப்பை பதிந்து, அடையாள அட்டை பெற்று கொள்ளலாம்.
இத்தகைய
வசதி மார்க் ஷீட் வழங்கும் துவக்க நாளான, 21ம் தேதி முதல் ஜூன், 4ம் தேதி
வரை செய்யப்பட்டுள்ளது. இந்த தேதிகளில் எப்போது பதிவு செய்தாலும், 21ம்
தேதி தான் பதிவு மூப்பாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தமிழகத்திலுள்ள
எந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவையும் தாங்கள் படித்த பள்ளியிலேயே
மேற்கொள்ளலாம். எனவே, அருகிலுள்ள மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்களும்
தாங்கள் படித்த தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ள
முடியும். இதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதேசமயத்தில்,
மேல்நிலைக்கல்வியில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில்
பதிவுகள் மேற்கொள்ள இயலாது. இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...