Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கோடை விடுமுறையில் வகுப்புகள் நடத்திய 15 பள்ளிகளுக்கு நோட்டீசு

            திருச்சி மாவட்டத்தில் 96 அரசு மேல்நிலை பள்ளிகள் உள்பட 304 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இம்மாவட்டத்தில் வருடந்தோறும் சுமார் 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதுகிறார்கள்.



               ஒவ்வொரு ஆண்டும் திருச்சி மாவட்டம் பிளஸ்–2 தேர்ச்சி விகிதத்தில் கூடுதல் சதவீதத்தை பெற்று வருகிறது. இந்த ஆண்டு (2014) கடந்த 2013–ம் ஆண்டை விட கூடுதலாக 0.58 சதவீதம்தேர்ச்சியை அதிகரித்து 93.78 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாநில அளவில் திருச்சி மாவட்டம் 9 வது இடத்தை பெற்றுள்ளது.



64 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன. வருகிற 29–ந்தேதி 10–ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. பிளஸ்–2 தேர்வில் சாதனை படைத்து விட்ட மகிழ்ச்சியில் மாணவ, மாணவிகள் அடுத்த கட்டத்துக்கு தயாராக, 10–ம் வகுப்பு தேர்வு எழுதி முடிவுக்காக மாணவிகள் பதற்றத்துடன் காத்திருக்கின்றனர். இவர்கள் நிலைமை இப்படி இருக்க 9 மற்றும் 11–ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளும் கோடை விடு முறையை கொண்டாட முடியாமல் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

ஏனென்றால் 9 மற்றும் 11–ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பல தனியார் பள்ளிகள் கோடை விடுமுறையை கொண்டாட விடாமல் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல தேர்ச்சி பெற வேண் டும் என நினைத்து சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றன.

ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் உச்சத்தை தொடும் என்பதால் தான் தேர்வு காலங்கள் அதற்கேற்ப வகுக்கப்பட்டு முழு ஆண்டு தேர்வு மார்ச் மாதம் நடத்தப்படுகிறது. ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்கள் மாணவ, மாணவிகள் விடுமுறையை கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளது.

10 மாதங்கள் தொடர்ந்து பள்ளிகளுக்கு சென்று படித்த மாணவ, மாணவிகளுக்கு இந்த 2 மாதங்கள் தான் ஓய்வாக இருக்கும் மாதங்கள் ஆகும். சுற்றுலா, உறவினர் வீடு, விளையாட்டு, என கழிப்பதன் மூலம் வாழ்க்கையின் மற்றொரு அனுபவத்தை அவர்கள் பெறுவார்கள். அதோடு மீண்டும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் போது புத்துணர்ச்சியோடு அவர்கள் பாடங்களை படிக்க இந்த 2 மாத கோடை கால விடுமுறை பயனுள்ளதாக இருக்கும்.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் மாணவ, மாணவிகளை கோடை விடு முறை கொண்டாட விடாமல் சில தனியார் பள்ளி கள் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றன. திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாட்டிலேயே அதிக பட்சமாக தினமும் 105 டிகிரி வரை வெயில் கொளுத்துகிறது.

இதை பொருட் படுத்தாமல் மாணவ, மாணவிகளை வெயிலுக்குள் வரவழைத்து பல தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியின் 100 சதவீத தேர்ச்சிக்காகவும், மாநில அளவில் 2015ம் கல்வி ஆண்டில் சாதனை படைக்கவும் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

இதனால் கோடை வெயில் ஒரு புறம் வாட்டிவதைக்க, பள்ளி நிர்வாகம் மறுபுறம் வாட்டி வதைக்க மாணவ, மாணவிகள் ஒருவித மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இது குறித்து பெற்றோர்களும் பரிதவித்து உள்ளனர். இதற்கிடையே திருச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் கல்வித்துறை உத்தரவுகளை மீறி வகுப்புகள் நடத்தி வருவது குறித்து சமூக ஆர்வலர்கள் மூலம் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வக்குமாருக்கு புகார்கள் சென்றுள்ளது.

இது குறித்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் கேட்ட போது, இந்த புகார்கள் குறித்து திருச்சியிலுள்ள சம்பந்தப்பட்ட 15 பள்ளி களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விதி மீறு பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதற்கிடையே திருச்சி உள்பட பல மாவட் டங்களில் கோடை வெயில் கொளுத்துவ தால் ஜூன் 2–ந்தேதி திறப்பதாக இருந்த பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி துறை வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.




3 Comments:

  1. இதனால் கோடை வெயில் ஒரு புறம் வாட்டிவதைக்க, பள்ளி நிர்வாகம் மறுபுறம் வாட்டி வதைக்க மாணவ, மாணவிகள் ஒருவித மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இது குறித்து பெற்றோர்களும் பரிதவித்து உள்ளனர். இதற்கிடையே திருச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் கல்வித்துறை உத்தரவுகளை மீறி வகுப்புகள் நடத்தி வருவது குறித்து சமூக ஆர்வலர்கள் மூலம் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வக்குமாருக்கு புகார்கள் சென்றுள்ளது.
    தனியார் பள்ளிநடத்தினால் நோட்டீஸ், ஆனால் அரசு பள்ளிகளும் விடுமுறை விடாது கிருஷ்னகிரி,வேலூர் மாவட்டத்தில் கல்விஅலுவலர்கள் சொல்லி பள்ளி நடைபெறுகிறது இதுக்கு ஒரு நியாயமா?

    ReplyDelete
  2. In a district ceo and district collector are insisting to conduct class in summer. To whom we complain about it?

    ReplyDelete
  3. THIS SHOULD BE BROUGHT TO THE NOTICE OF 'AMMA' THOUGH NEWS SINCE AMMA KNOWS ABOUT CHILDREN'S MENTALITY AND WELFARE

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive