ஓவியம், இசை, தையல், அச்சுக்கலை, விவசாயம், நடனம், கைத்தறி நெசவு உள்ளிட்ட
பாடங்களுக்கான தொழில்நுட்ப தேர்வுகள், நேற்று துவங்கி, ஜூன், 20 வரை
நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 27 மையங்களில், 14,373 பேர்,
தேர்வை எழுதுகின்றனர். இந்த தேர்வுகள், கீழ்நிலை (லோயர்),மேல்நிலை (ஹையர்)
என, இரு கட்டங்களாக நடக்கிறது. கீழ்நிலை தேர்வில், எட்டாம் வகுப்பு
முடித்தவர்களும், மேல்நிலை தேர்வில், பத்தாம் வகுப்பு முடித்தவர்களும்
பங்கேற்கின்றனர். பெரும்பாலான தேர்வுகள், செய்முறை அடிப்படையில்
நடக்கின்றன. நடனம் எனில், குறிப்பிட்ட தேர்வு மையத்தில், தேர்வர், நடன
ஆசிரியர் முன்னிலையில், ஆட வேண்டும். அவரது நடனத்திற்கு ஏற்ப, நடன ஆசிரியர்
குழு, மதிப்பெண் (மொத்தம், 100 மதிப்பெண்) வழங்கும். தேர்வில், தேர்ச்சி
பெறுபவர், பின், பள்ளி கல்வித்துறை அளிக்கும் பயிற்சியில் பங்கேற்று,
சான்றிதழ்பெற வேண்டும். இதன்பின், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு
செய்தால், பதிவுமூப்பு அடிப்படையில், அரசு பள்ளிகளில், சிறப்பு
ஆசிரியர்களாக பணியில் சேரலாம்.
Public Exam 2025
Latest Updates
Home »
» தொழில்நுட்ப தேர்வு: 14 ஆயிரம் பேர் பங்கேற்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...