Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க நாளை (மே 14) கடைசி நாள்

              பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் பெறுவதற்கும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க நாளை (புதன்கிழமை) கடைசி நாளாகும். இது குறித்து மேல்நிலைப் பள்ளிகளுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்.

                    விடைத்தாள் நகல், மறுகூட்டல் செய்வதற்கான கால அவகாசம் மே 14ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. இவற்றை மேற்கொள்ள விரும்புவோர் தாங்கள் பயிலும் பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழதிய தேர்வு மையங்கள் மூலம் ஆன் லைன் முறையில் விண்ணப்பங்ளை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் இதற்கென தனியாக யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு வழங்கப்பட்டுள்ளது.
   
            விடைத்தாள் நகல் அல்லது மதிப்பெண் மறுகூட்டல் கேட்டு வரும் மாணவர்கள் எந்தெந்த பாடங்களுக்கு விடைத்தாள் நகல் தேவை அல்லது எந்தெந்த பாடங்களுக்கு மறுகூட்டல் தேவை என்பதை வழங்கப்படும் படிவத்தின் மூலம் பூர்த்தி செய்து இதற்கானத் தொகையை அந்தந்த பள்ளிகளிலேயே ரொக்கமாக செலுத்த வேண்டும்.
 
                    விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிப்போர் தற்போது மறு கூட்டலுக்கோ அல்லது மறு மதிப்பீட்டிற்கோ உடனடியாக விண்ணப்பிக்க முடியாது. விடைத்தாள் நகல் பெற்ற பின்னரே மதிப்பெண் மறு கூட்டலுக்கோ, மறு மதிப்பீட்டிற்கோ விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் தேவையில்லை எனில், மாணவர் விரும்பினால் மறு கூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல் அல்லது மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த பின்னர் பள்ளி நிர்வாகம் மூலம் விண்ணப்ப எண், பதிவு எண், விண்ணப்பித்த பாடங்கள், செலுத்திய தொகை ஆகியவை குறித்து வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஒப்புகைச் சீட்டில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வுத் துறையால் பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் விடைத் தாள்களின் நகல்களை இணையதளம் மூலம் பதவிறக்கம் செய்து கொள்ள முடியும். மறுகூட்டல் முடிவகளைப் பற்றி இதில் அறிந்து கொள்ள முடியாது.
 
                   வரும் புதன்கிழமை மாலை 5 மணி வரை மட்டுமே விடைத்தாள் நகலுக்கோ அல்லது மறுகூட்டலுக்கோ விண்ணப்பிக்க முடியும் என அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




1 Comments:

  1. vettriarasan5/19/2014 5:47 pm

    கிட்டதட்ட 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இதில் 200க்கு 200 மதிப்பெண் வாங்கியவர்கள் நகலை பெற்று பைண்ட் செய்து அழகு பார்கிறார்கள். கல்வித்துறை 200க்கு 200 வாங்கியவருக்கான நக்லை காலதாமதமாக வழங்க் வேண்டும். 199 வரை வாங்கியவருக்கு மட்டும் உடனே நகலை எடுத்து இணையதளத்தில் வெளியிட்டால் உண்மையிலே விண்ணப்பிக்கிறவருக்கு காலந்தாழ்தாமல் பொறியியலுக்கோ அன்றி மருத்துவத்திற்கோ விண்ணப்பிக்க ஏதுவாக இருக்கும் இதனை கல்வித்துறை கவனித்து சிந்தித்து செய்யவேண்டிய வேலையாகும். கவனிக்குமா?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive