இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள்மே 12-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலைய முதல்வர் கே.ஏ.துரைசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ், 2014-15-ஆம் ஆண்டு அளிக்கப்படும் கால்நடை மருத்துவம், உணவுத் தொழில்நுட்பம்,கோழியின உற்பத்தித் தொழில்நுட்பப் படிப்புகளுக்கான இளநிலைப்பிரிவில் சேர விண்ணப்பப் படிவங்கள் நாமக்கல்லில் திருச்சி சாலையிலுள்ள
கால்நடை மருத்துவமனை வளாகத்தில் வருகிற 12-ஆம் தேதி
முதல்விநியோகிக்கப்படும். விண்ணப்பப் படிவத்துக்கான கட்டணம் ரூ.600. தலித்,
பழங்குடியினமாணவர்கள் ரூ.300 மட்டும் செலுத்தினால் போதும்.
இந்தக்கட்டணத்தை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிளையில்செலுத்தி ரசீது
பெற்று, அதனுடன் விண்ணப்பக்கடித்தை இணைத்து அளித்து விண்ணப்பப் படிவத்தைப்
பெற்றுக் கொள்ளலாம். மே 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தைப் பெற்று, ஜூன்
2-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை
மருத்துவ அறிவியல்பல்கலைகழகத்தில் அளிக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்கள்
குறித்த வழிமுறைகள், இதர விவரங்களையும்www.tanuvas.ac.inugadmission என்ற
இணையதளத்தில்தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04286- 266491,
220650 என்றதொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...