வங்கி கணக்குகளை 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களும் இயக்கலாம் என
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில்
ரிசர்வ் வங்கி திருத்தங்களை மேற்கொண்டு அறிவித்துள்ளது. அதன்படி சிறுவர்கள்
(மைனர்) அனைவரும் தங்களது பெற்றோர் அல்லது காப்பாளர் மூலம் வங்கி கணக்கு
தொடங்கலாம். இவர்களில் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் பிக்சட், ரெக்கரிங்
அல்லது சேமிப்பு கணக்குகளை தாங்களே தொடங்கவும் இயக்கவும் செய்யலாம் என
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் சிறுவர்கள் கணக்குகளை இயக்குவதால் அதை கருத்தில் கொண்டு
டெபாசிட் தொகை உச்சவரம்பை வங்கிகள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் கணக்கு
தொடங்குவதற்கான ஆவணங்கள் குறித்து வரையறை செய்து கொள்ளலாம் எனவும் ரிசர்வ்
வங்கி தெரிவித்துள்ளது. மேலும் வங்கிகளுக்கு உரிய சேவையான ஏடிஎம்/டெபிட்
கார்டு, செக் வசதிகளையும் அவர்களுக்கு அளிக்கவேண்டும் என ரிசர்வ் வங்கி
கேட்டுக்கொண்டுள்ளது. அபராதம் கூடாது: வங்கி கணக்குகளில் நிர்ணயிக்கப்பட்ட
குறைந்தபட்ச தொகை இல்லாவிட்டால், வங்கிகளுக்கேற்ப அபராதம்
விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், நீண்ட காலம் செயல்படாத நிலையில் உள்ள வங்கி கணக்குகளில்
நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச இருப்பு தொகைக்கு கீழ் குறையும்போது அதற்கு
அபராதம் விதிக்க கூடாது என ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த மாதம்
நிதிக்கொள்கை மறுசீராய்வு அறிக்கை சமர்ப்பித்த ரிசர்வ் வங்கி,
வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்காமல்
இருந்தாலோ அல்லது தொடர்ந்து கணக்கை இயக்காமல் இருந்தாலோ அபராதம்
விதிக்கக்கூடாது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...