எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இந்த ஆண்டே உயர்கல்வியை தொடர
வசதியாக நடத்தப்பட உள்ள உடனடி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் கடந்த 23ம் தேதி வெளியானது. இதில் 91.7
சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் உடனடியாக
தேர்வு எழுதி வெற்றி பெற்றால் இந்த ஆண்டே தங்களது உயர்கல்வியை தொடர
முடியும். இதற்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் இறுதியில் நடைபெற உள்ளது.
துணைத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளிலும்,
தனித்தேர்வர்கள், அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் இன்று முதல் வரும்
30ம் தேதி வரை தேர்வுக் கட்டணமாக ரூ.125 செலுத்தி தங்கள் பெயரை பதிவு
செய்து கொள்ள வேண்டும். இது தவிர கூடுதலாக ரூ.50ஐ பதிவுக் கட்டணமாக
செலுத்த வேண்டும். இதற்கென தனியாக விண்ணப்பம் எதுவும் கிடையாது என
தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...