தமிழகத்தில் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு
தேர்வு முடிவுகளில், மொத்தம் 19 பேர் 499 பெற்று, மாநில முதலிடம்
பெற்றுள்ளர். இது ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
இவர்களில், 18 பேர் பெண்கள்
மற்றும் ஒருவர் ஆண். இரண்டாமிடத்தை, 498 மதிப்பெண்களுடன், 125 பேர்
பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்களில் 101 பேர் பெண்கள் மற்றும் 24 பேர்
ஆண்கள். மேலும், மூன்றாமிடத்தை 497 மதிப்பெண்களுடன் 321 பேர் பகிர்ந்து
கொண்டுள்ளனர். அவர்களில் 246 பேர் பெண்கள் மற்றும் 75 பேர் ஆண்கள்.
அதேசமயம், தமிழை முதல் பாடமாக எடுத்துப் படிக்காத மாணவர்களில், மொத்தம் 3
பேர் 500க்கு 500 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...