பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை, நாளை காலை, 10:00 மணிக்கு, தேர்வுத் துறை வெளியிடுகிறது. 10.38 லட்சம் மாணவர்கள், தேர்வு முடிவை, ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகம், புதுச்சேரியில், கடந்த மார்ச், 26
முதல், ஏப்ரல், 9 வரை, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. மொத்தம்,
11,552 பள்ளிகளில் இருந்து, 10.38 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வை எழுதினர்.
தேர்வு முடிந்ததும், 66 மையங்களில், விடைத்தாள் திருத்தப்பட்டு, முடிவுகள்
தயாரிக்கப்பட்டன.
நாளை காலை, 10:00 மணிக்கு, தேர்வுத் துறையின், நான்கு இணையதளங்களில்,
தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவை மாணவ, மாணவியர், ஆவலுடன்
எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மாணவர்கள், மதிப்பெண்களுடன் கூடிய முடிவை அறிய, பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும்.
தேர்வு முடிவு வெளியாகும் இணையதள முகவரிகள்:
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...