Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET - கிரேடு' முறையை ரத்து செய்து அறிவியல் பூர்வமான புதியமுறையினை அரசு பரிசீலிக்க உத்தரவு


      ஆசிரியர் தேர்வில், ','கிரேடு' முறையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.அறிவியல் பூர்வமான புதியமுறையினை அரசு பரிசீலிக்க உத்தரவு !
         இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம்,  தகுதி தேர்வை நடத்துகிறது. இதில், மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 60சதவீதம்பெற வேண்டும். மீதி, 40 சதவீதம், கல்வித் தகுதிக்காக என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

            இடைநிலை ஆசிரியர் பணி என்றால், பிளஸ் 2 தேர்வுக்கு, 15 மதிப்பெண்; ஆசிரியர் பட்டய படிப்புக்கு, 25மதிப்பெண் என, 40 மதிப்பெண். பட்டதாரி ஆசிரியர் பணி என்றால், பிளஸ் 2 தேர்வுக்கு, 10; பட்டப் படிப்புக்கு,15; பி.எட்., படிப்புக்கு, 15, என, 40 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், பிரச்னையில்லை. அதற்கான,'கிரேடு' முறைக்கு தான், தேர்வர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அதாவது, பிளஸ் 2 தேர்வுக்கு,நிர்ணயிக்கப்பட்ட, 15 மதிப்பெண்ணில், பிளஸ் 2 தேர்வில், 90 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றிருந்தால், 15;மதிப்பெண், 80ல் இருந்து, 90 சதவீதம் வரை பெற்றிருந்தால், 12; மதிப்பெண், 70ல் இருந்து, 80 சதவீதம் வரை, 9; மதிப்பெண், 60ல் இருந்து, 70 சதவீதம் வரை, 6; மதிப்பெண், 50ல் இருந்து, 60 சதவீதம் வரை, மூன்று மதிப்பெண்என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தகுதி தேர்விலும், 'கிரேடு'முறை கொண்டு வரப்பட்டது..கிரேடு  முறையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்குவதை எதிர்த்தும், தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண் பெறப்பட்டதோ அதன் அடிப்படையில், 'வெயிட்டேஜ்' நிர்ணயிக்கக் கோரியும், ,சென்னை ஐகோர்ட்டில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு:
 
           ஆசிரியர் தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்க, 'கிரேடு' முறையை கையாளுவதில், எந்த அறிவியல் பூர்வ பின்னணியும் இல்லை. இதனால், ஏராளமானமுரண்பாடுகள் தான் ஏற்படும். கிரேடு முறைப்படி, தகுதி தேர்வில், 60 சதவீத மதிப்பெண் பெறுபவருக்கும், 69 சதவீதம் பெறுபவருக்கும், ஒரே,'வெயிட்டேஜ்' மதிப்பெண் என, 42 வழங்கப்படுகிறது. அதேநேரத்தில், 69 சதவீதம் எடுத்தவருக்கு, 42 மதிப்பெண், 70 சதவீதம் எடுத்தவருக்கு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண், 48 என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, பெரிய  முரண்பாடு. எனவே, பிளஸ் 2, பட்டயப் படிப்பு, தகுதி தேர்வில் பெறும், ஒவ்வொரு சதவீத மதிப்பெண்ணுக்கும்,'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக, 0.15, 0.25, 0.60 என்ற அடிப்படையில் வழங்க வேண்டும். இதை பின்பற்றினால்,முரண்பாடு, பாகுபாடு வராது. இது, அறிவியல் பூர்வமானது. இதை, பரிந்துரையாக தான் அளிக்கிறேன். இதை பின்பற்றலாமா என்பதை அரசு தான் பரிசீலிக்க வேண்டும். அரசு கொண்டு வந்த, 'கிரேடு' முறை,தன்னிச்சையானது, பாரபட்சமானது. அது, ரத்து செய்யப்படுகிறது. நான் கூறியுள்ள முறையையோ அல்லது அறிவியல் பூர்வமான வேறு முறையையோ, அரசு பின்பற்ற வேண்டும். எனவே,'வெயிட்டேஜ்' மதிப்பெண்கள் வழங்குவதற்கு, ஏதாவது ஒரு அறிவியல் பூர்வமான முறையை, விரைவில்கொண்டு வர, அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதன்படி, ஆசிரியர்கள் தேர்வு நடக்க வேண்டும்.
இவ்வாறு, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.




21 Comments:

  1. this is a orrect judgement! thank u nagamuthu sir!! but jan la cv nanga already complete panitom, engaluku again cv veipangala, or enna pannuvanga nu therilaye!!

    ReplyDelete
    Replies
    1. Nagamutthukita phone poyu kellunga mr

      Delete
    2. Not conduct c.v. don't worry

      Delete
  2. good result

    ReplyDelete
  3. Ennudaya consalidate mark sheet la a-language.b-english.c-core subject. D-supportive subjects.e-value based subjects.f-open choices
    Crouse ipdi iruku, ithil ethai eduthu percentage ku calculate panrathu plx therinjavanga rply pannnunga

    ReplyDelete
  4. A to f ellathaium serthu than % calculate pananum

    ReplyDelete
  5. இதுதான் உண்மையான வெய்டேஜ் கணக்கிடும் முறை.இதில் தான் திறமைக்கேற்ப ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.ஏற்கனவே பேப்பர் 1 மற்றும் 2 தகுதி பெற்றவற்களுக்கு CV மட்டும் தான் முடிந்துள்ளது. இன்னும் செலக்க்ஷன் லிஸ்ட் வெளிவரவில்லை. எனவே அரசு இந்த முறையை வெய்டேஜ் கணக்கிடுவதற்கு எடுத்துக்கொள்ளும் என நம்புவோமாக. நீதியரசர் நாகமுத்து ஐயா அவர்களுக்கும் , இது சார்பாக வழக்கு தொடுத்தவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
    எல்லாம் நன்மைக்கே

    ReplyDelete
  6. Very good decision. We are expect this one thank u vry much

    ReplyDelete
  7. degree percentage calculation poduvathu eppadinu sollunga sir please

    ReplyDelete
  8. degree percentage calculation poduvathu eppadinu sollunga sir please

    ReplyDelete
  9. hi frds papar 1 my old wt-82% new wt 71.36% ku bc, female chance iruka

    ReplyDelete
  10. PAPER 1 73.97 bc vaipu ullatha?

    ReplyDelete
    Replies
    1. 71 ku mela iruntha conform.

      Delete
    2. Sir female dob 1981 eng nwei 61 chance irruka friends sollunga pls

      Delete
  11. hi frds my new wt 64.02, mbc, geo, any chanc? tell me sir

    ReplyDelete
  12. seniors can not get job for this judgement

    ReplyDelete
  13. hai my new wt 70.94 paper 1 sc chance for me any one tell

    ReplyDelete
  14. My new wtage 62 maths dob 1977 chance itukka?

    ReplyDelete
  15. My new wtage 62 maths dob 1977 chance itukka?

    ReplyDelete
  16. will the government consider the employment seniority also along with the new weightage? only then many will be benefitted because only few people who have completed their 12th in 80's would have got first class.even their degree marks are less when compared to the recently passouts will the government consider all these things?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive