Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாள் சான்றிதழ் சரிபார்ப்பு இம்மாத இறுதியில்( ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி மே 2ம் தேதி வரை ) நடைபெறும்


            ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இந்த மாதஇறுதியில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
             ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்ணை இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.

               இதையடுத்து, முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 17 ஆயிரத்து 966 பேருக்கு கடந்த மாதம், தமிழகம் முழுவதும் ஐந்து மண்டலங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இந்நிலையில், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற, 24 ஆயிரத்து 561 பேருக்கு ஏப்ரல் 7ம் முதல் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தலாம் என டிஆர்பி ஏற்கனவே முடிவு செய்திருந்தது. வரும் ஏப்ரல் 24ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுவதாலும், மாவட்ட கல்வி அதிகாரிகள் பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாலும், இரண்டாம் தாள் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதியை இந்த மாத இறுதியில் நடத்துவதற்கு டிஆர்பி முடிவு செய்துள்ளதாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

              அதன்படி, இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி மே 2ம் தேதி வரை நடக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். முதல்தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் 5 மண்டலங்களில் நடைபெற்றது. ஆனால், 2ம் தாள் சான்றிதழ் சரிபார்ப்பை பொறுத்தவரையில், தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலும் நடத்துவது என டி.ஆர்.பி. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.




12 Comments:

  1. June la posting potruvangala ella innum 6 months aguma yaravathu sollugapaaaaa

    ReplyDelete
  2. kandippa junela posting than.don't worry be happy

    ReplyDelete
  3. Kandipa june la posting poduvanga.

    ReplyDelete
  4. Kandipa june la posting poduvanga.

    ReplyDelete
  5. my name sangeetha my weitage 74 paper 2 sc there s any chance to get job

    ReplyDelete
    Replies
    1. Conform job .be happy

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  6. காத்திருந்து காத்ததிருந்து காலங்கள் போகுதம்மா

    ReplyDelete
  7. காத்திருந்து காத்ததிருந்து காலங்கள் போகுதம்மா

    ReplyDelete
  8. Hai frds I m suriya. My weightage 76. Any chance to Get job. (Maths)

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive