Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC - VAO Nature of Works

            VAO கேள்வித்தாளில் தமிழில் கேட்கப் படும் 100 தமிழ் வினாக்களில் 20 வினாக்கள் குறைக்கப் பட்டு கிராம நிரவாகம் குறித்து 25 வினாக்கள் இடம் பெறுகின்றன.

கிராம நிர்வாகம்

            மாவட்ட வருவாய் நிர்வாகத்தின் செயல்பாட்டிற்கு அடிப்படையாகவும், உற்றத் துணையாகவும் கிராம நிர்வாக அமைப்பு இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் 14.11.1980-க்கு முன்னர் ஒரு வருவாய் கிராமத்திற்கு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிராமங்கள் அடங்கிய பகுதிக்கு ஒரு பகுதி நேர கிராம முனிசீப், கர்ணம் ஆகிய கிராம அலுவலர்களும் மற்றும் தலையாரி, வெட்டியான் ஆகிய பகுதி நேரப் பணியாளர்களும் பணியாற்றி வந்தார்கள். அதே கிராமத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த அவர்கள் அங்கேயே குடியிருந்து கிராம நிர்வாகப் பணிகளைச் செய்து வந்தார்கள்.


             நிர்வாகம் இவ்வாறு செயல்பட்டு வந்த சுழ்நிலையில் பெருகிவரும் மக்கள் தேவையை கருத்தில் கொண்டும் நிர்வாகத்தை மக்களுக்கு மேலும் பயனுள்ளதாக மாற்றும் எண்ணத்துடனும் 1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு பகுதி நேர கிராம அலுவலர்கள் ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர்களை நேரடி நியமனம் செய்து வருகிறது.

கிராம நிர்வாக அலுவலர் தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் பொறுப்பு கிராமத்தில் தங்கி பணிபுரிய வேண்டும். கிராமக் கணக்குகளை கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகக் கட்டடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும். பயிராய்வு ஒவ்வொரு மாதமும் செய்து அடங்கலில் உரிய குறிப்புகள் ஏற்படுத்தி அதற்குரிய மாதக் கணக்குகளையும் அந்தந்த மாதமே முடித்து சமர்ப்பிக்க வேண்டும். பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் என பொது மக்கள் கோரும் எல்லா சான்றுகளையும் சோதித்தறிந்து உரியவருக்கு தாமதமில்லாமலும், எவ்விதப் புகாருக்கு இடமில்லாமலும் வழங்கவேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் போது சரியான விவரங்களை வட்டாட்சியருக்கு அனுப்பி, வாக்காளர் பட்டியல் சரியாக இருக்க உறுதுணையாக இருக்க வேண்டும். கிராம நிர்வாக அமைப்பை பயனுள்ளதாக ஆக்க, கிராம நிர்வாக அலுவலர் நாட்குறிப்பு பராமரிக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு புதியதாக கட்டியிருக்கும் அலுவலகத்தில் கட்டாயமாக காலை 10 மணி முதல் 12.00 மணி வரை கிராம நிர்வாக அலுவலர் இருக்க வேண்டும்.

கிராம மற்றும் வருவாய் நிர்வாகத்தில் கிராம நிர்வாக அலுவலரின் பங்கு, பணிகள் மற்றும் கடமைகள்:

சட்டம் ஒழுங்கு பராமரித்தல், காவல்துறையினருக்கு உதவுவதில் கிராம நிர்வாக அலுவலரின் பணிகள் / பங்கு.

கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம எல்லைக்குட்பட்ட காவல் நிலையக் காவல்துறை அலுவலர்கள் ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து கிராமப் பொதுமக்கள் அமைதியுடனும் சட்டம் ஒழுங்கு பாதிப்புகளின்றி வாழ்வதற்கு பரஸ்பர ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்துகொள்வது மிகவும் அவசியமாகும். கிராம நிர்வாக அலுவலர் காவல்துறையினருக்கு கீழ்க்கண்ட நடவடிக்கைகளில் உதவி செய்ய சட்டப்படி கடமைப்பட்டவர்கள் ஆவர்.

1. காவல்துறையினர் கிராமத்தில் யாதொரு குற்றமும் நடவாதபடி தடுக்கும் போதும்,
2. குற்றங்களைக் கண்டுபிடிக்கும் போதும்,
3. மறியல், ஊர்வலங்கள், பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் சமூகக் கலவரங்கள், ஜாதி சண்டைகள் இவைகளின் போதும், வாரண்டுகளையும் மற்றும் சோதனை வாரண்டுகளையும் நிறைவேற்றும் போதும்,
4. ஜங்கம சொத்தை ஜப்தி செய்து ஏலம் போடுவதற்கான வாரண்டுகளை நிறைவேற்றும் போதும்,
5. பொது அமைதிக்கு எதிராக எழும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளின் போதும், கிராம நிர்வாக அலுவலர் காவல்துறையினருடன் இணைந்து உதவி செய்தல் வேண்டும்.

விபத்துகள்:
ஆகாய விமானம், ஹெலிகாப்டர் இறங்கிவிட்டாலோ அல்லது விழுந்து விட்டாலோ ரயில் விபத்து அல்லது சாலை விபத்துகள், கட்டடங்கள் இடிந்து விபத்துகள் மற்றும் வெடி விபத்துகள் மூலம் உயிர்ச்சேதம் ஏற்பட்டாலோ கிராம நிர்வாக அலுவலர் உடனடியாக செய்யவேண்டியது.

வட்டாட்சியருக்கு உடனே தகவல் தெரிவிப்பதுடன், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அலுவலர் ஆகியோருக்கு துரிதமாக தகவல் தெரிவிக்கவேண்டும்.
காயம் ஏற்பட்டவர்களை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யவேண்டும்.

ஆயுதம்:
கிராமத்தில் வெடிபொருட்கள் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டத்தின்கீழ் உரிமம் பெற்றவர்கள் தங்களுடைய உரிமங்களை புதுப்பித்து வருகிறார்களா என்பதைக் கண்காணிக்கவேண்டும். புதுப்பிக்காமலும் உரிமம் இல்லாமலும் ஆயுதங்கள் வைத்திருந்தால் விரைவாக வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பவேண்டும். சட்டத்திற்குப் புறம்பாக வெடிபொருட்கள் அல்லது வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது வெடிபொருட்களை உரிமம் பெற்ற இடங்களுக்கருகில் வெடி விபத்து ஏற்படுவதற்கான சூழ்நிலை  பின்னர் ஏற்பட வாய்ப்பிருந்தாலோ அதனை உடனடியாக வட்டாட்சியருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதரப் பணிகள்:
உரிமம் கொண்டாடப்படாத அசையும் சொத்துக்கள் பற்றி வட்டாட்சியருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்து, அதனை ஒப்படைத்தல்.

புதைக்கப்பட்ட உடல், சந்தேதகத்தின் அடிப்படையில் பரிசோதனைக்குத் தோண்டி எடுக்கும்போதும் வட்டாட்சியரோடு உடனிருந்து உதவுதல்.

தீ விபத்து பற்றி வட்டாட்சியருக்கும், கோட்டாட்சியருக்கும், காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

கொடிய காட்டு விலங்குகள் கிராமத்திற்குள் புகுந்துவிட்டால் வனத்துறை, வட்டாட்சியர் மற்றும் காவல்துறைக்கு தகவலளிக்கவேண்டும்.

மனித உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து உண்டாக்கும் சந்தேகத்திற்குரிய பொருட்கள் (நாட்டு வெடிகள், வெடிகுண்டுகள், ஆயுதங்கள்) பொது இடங்களில் காணப்பட்டால் உடனடியாக காவல்துறை மற்றும் வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பவேண்டும்.

பண்டிகைக்கால விழாக்கள் அல்லது வேறு நிகழ்ச்சிகளில் மக்கள் கூட்டம் நெரிசல்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் இருந்தால், காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தவும் சமரசத் தீர்வு காணவும், அமைதிக்குழுக் கூட்டத்திற்கு கிராமத்தில் கூட்டம் நடத்தவும் அதற்கான ஏற்பாடுகளுக்கு உயர் அலுவலர்களுக்கும், காவல்துறைக்கும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

கொலை, தற்கொலை, அசாதாரண மரணங்கள் நேரிடும்போது கிராம நிர்வாக அலுவலர் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்:
சம்பவத்தைத் தெரிவிக்கும் தகவலாளரிடம் எழுத்து மூலமான வாக்குமூலம் பெற்றுக்கொண்டு சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு பிரேதத்தின் தன்மை குறித்து காவல்துறையினருக்கு அறிக்கை அனுப்பியபின், காவல் போடவேண்டும். இவ்வாறு அனுப்பப்படும் அறிக்கையில் தகவலாளரின் பெயர், முகவரி, வாக்குமூலம், சம்பவம் நடைபெற்ற நாள், நேரம் முதலியவைகள் இருக்க வேண்டும்.

மரண விசரணையை கிராம நிர்வாக அலுவலர் மேற்கொள்ளக்கூடாது. காவல்துறையினர் குற்றவியல் செயல்  நடுவருக்குத் தகவல் தெரிவித்து அவர் குற்றவியல் நடவடிக்கை சட்டத்தின்கீழ் பிரேத விசாரணை மேற்கொள்ளும்போதும், குற்றவியல் செயல் நடுவர் விசரணையின்போது, கிராம நிர்வாக அலுவலர் உடனிருந்து ஏற்பாடுகளும், உதவிகளும் செய்தல் வேண்டும்.

கிராம எல்லைக்குள் அசம்பாவித மரணம், கொள்ளை, சந்தேக மரணம் போன்ற நிகழ்வுகளை வட்டாட்சியருக்கும் மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் எல்லைக்குட்பட்ட காவல் நிலையப் பொறுப்பு அலுவலருக்கும் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர் வட்டாட்சியருக்கும் காவல்துறையினருக்கும் தகவலறிக்கை அனுப்ப வேண்டிய சம்பவங்களாவன:
1.     சந்தேகத்திற்கிடமான அந்நியர் நடமாட்டம்
2.     கிரிமினல் குற்றம்
3.     தற்கொலை
4.     தற்செயலாக ஏற்படும் மரணம்
5.     தீப்பற்றிய சம்பவங்கள்
6.     கேடி ரிஜிஸ்டரில் உள்ள நபர்களின் நடமாட்டம்
7.     இனக்கலவரங்கள்
8.     தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் நடமாட்டம்
9.     கள்ளச்சாராயம் காய்ச்சுதல், போதைப் பொருள் விற்றல்
10.     கிராமத்தில் ஒருவர் இறந்ததினாலோ அல்லது வேறு பல காரணங்களாலோ பொது அமைதிக்கு ஏற்படும் இடையூறுகள்
11.     ஆயுதத்தினால் ஏற்படும் பிரச்சினைகள்
12.     அரசு பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் நோக்குடன் தெரிய வருகின்ற செயல்பாடுகள்
13.     ஆடு, மாடுகள் திருட்டு போன்றவைகள்
14.     சாலை மற்றும் இதர விபத்துகள்
15.     குழந்தைத் தொழில்
16.     ஆள்கடத்தல்கள்  எனத் தெரிகின்ற குற்றங்கள்
17.     கொத்தடிமை
18.     குழந்தைகள் திருடுதல்
19.     பொது இடங்களில் சூதாட்டம்
20.     கிணற்றில் மற்றும் குளங்களில் கேட்பாரின்றிக் கிடக்கும்  பிணங்கள்

இதர பொதுப் பணிகள்:
மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளில் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பது.

மின்சாரக் கருவிகள், மின்சாரக் கம்பிகள், மின்சாரக் கசிவுகள் போன்றவற்றினால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை அறிய வந்தால் மின்சாரத் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும்.

தேர்தல் பணிகளிலும் வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் போதும் முழு ஒத்துழைப்பு தருவது.

நிலவரி வசூலில் மற்றும் தனது அரசுப் பணியில் இடையூறு ஏற்பட்டால் வட்டாட்சியருக்கு தகவல் அளிக்க வேண்டும்.

எப்போதெல்லாம் புதையல் ஒன்று பணமாக ரூபாய் பத்துக்கும் அல்லது அதனின் மதிப்பு ரூபாய் பத்துக்கும் மேலாக கண்டெடுக்கப்பட்டது என்று தெரிந்தவுடன் அதைக் கைப்பற்றி வட்டாட்சியருக்கு உடனடி அறிக்கை செய்து, அதை ஒப்படைக்க வேண்டும். புதையல் குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்திய புதைபொருள் சட்டம் - 1878 கூறுகிறது

Thanks to Mr. Maniyarasan




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive