Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC:திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்கள் 1

      தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளிலபொதுத் தமிழ் பகுதியில் பகுதி ஆ.1.திருக்குறள் தொடர்பான செய்திகள்மேற்கோள்கள் தொடரைநிரப்புதல் பகுதியில் அன்பு, பண்பு, கேள்விஅறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத்துணைக் கோடல்,பொருள் செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல். போன்ற 19 அதிகாரம் மட்டும் இடம் பெற்றுள்ளன.

. திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்களை பார்ப்போம்.
"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம் மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்" மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள் இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.
இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவரது காலம் கி.மு.31 என்று கூறுவர். இதை தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. இவரது ஊர், பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள்
கிடைக்கப்பெறவில்லை. .

திருவள்ளுவர் செஞ்ஞாப்போதார், தெய்வப்புலவர், நாயனார், முதற்பாவலர்,
நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர், பொய்யில்புலவர் என பல சிறப்புப்
பெயர்களால் போற்றப்படுகிறார்.
திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறிஸ்து ஆண்டு (கிபி) + 31 =
திருவள்ளுவர் ஆண்டு. எ.கா: 2014 +31 = 2045 (கி.பி.2014-ஐ திருவள்ளுவர் ஆண்டு 2045
என்று கூறுவோம்)

* திரு+குறள்= திருக்குறள்

* திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும்.

* திருக்குறள் இரண்டு அடிகளாலான குறள் வெண்பாக்களால் ஆனது.

* திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812

* திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்

* திருக்குறளில் அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களாக 133 அதிகாரங்களையும்,
1330 குறள்களையும் கொண்டது.

* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380

* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

* திருக்குறள் தமிழ்ச் செய்யுள்களில் முதல் பாவாகிய வெண்பாவில் முதல்
வகையாகிய குறட்பாக்களால் ஆனது.

* திருக்குறள் முப்பால்களை கொண்டது. அவை அறத்துப்பால், பொருட்பால்,
காமத்துப்பால் ஆகியவை ஆகும்.

* அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள்,
காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன.

* திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள்: குறிப்பறிதல் -
(பொருட்பால் - அதிகாரம் 71) குறிப்பறிதல் - (காமத்துப்பால் - அதிகாரம் 110)

* திருக்குறளில் முப்பால்களிலும் 120-க்கும் மேற்பட்ட உவமைகள்
எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. திருக்குறளில் அனிச்ச மலர் 4 முறையும்,
யானை 8 முறையும், பாம்பு 3 முறையும் சுட்டப்பட்டுள்ளன.

* திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள

* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி

* திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங

* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்

* திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000

* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

* திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம்
பெறவில்லை

* திருக்குறளில் 46 குறள்களில் உயிரினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

* திருக்குறள் மாந்தர்கள் தம் அகவாழ்வில் சுமுகமாக கூடி வாழவும், புற
வாழ்வில் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான
அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.

* திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு
நூல்களின் திரட்டில்இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல்.

* திருக்குள் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும்
பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும்
விளக்குகிறது.

* திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் - அனிச்சம், குவளை

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி

* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்

* திருக்குறளில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில்
அமைந்துள்ளன.

* திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.

* திருக்குறளில் ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில்
எடுத்தாளப்பட்டுள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive