Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SSLC அறிவியல் விடைக்குறிப்பு - We Need Clarification.!


        பத்தாம் வகுப்பு அறிவியல் வினாத்தாளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு சார்பிலான பதில்களில் பால்சம் தாவரத்திற்கான பதில் தவறாக உள்ளது. இதனை கொண்டு திருத்தும் போது அரசு பள்ளி மாணவர்களின் சென்டம் உறுதியாக குறையும் . இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும். பால்சம் தாவர விதைகள் வெடித்து வெகு தொலைவில் விழுந்து பரவுகின்றன. சரியா தவறா என்று கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பதில்  தவறு. ஆனால்  அரசு பதிலில் சரி என்று கொடுக்கப்பட்டுள்ளது. 

      அது எவ்வாறு? ,    தொலைவில் விழுகிறது ஆனால் வெகு தொலைவில் இல்லை. ஏனெனில் அதில் புறவளரிகள் இல்லை என்று கொடுக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்காக இதனை செய்யவும்
நன்றி
சிவா.




10 Comments:

  1. marks given for both தவறு.and சரி. No need to worry.

    ReplyDelete
  2. Aarau thrappu pathil thavaru enil Athai matram seythu sariyana vitaikku oru mathyppen valangalam..

    ReplyDelete
  3. What about question number 49 in tamil medium? yetradha enbadhai yetrukolgiraya? tamil therindhavargal idharku vidai kooravum...

    ReplyDelete
  4. As per 2012 June key Q.No 21 is Incorrect. But this year key answer is Correct. how?.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. இது மடடுமல்ல இன்னும் பல வினாக்கள் அறிவியலில் உண்டு அதற்கெல்லாம் தமிழக அளவில் நம் ஆசிாியர்கள் ஒன்று கூடி சாியான பதில் எதுவென ஆராய்ந்து முடிவான சாியான விடையையும் விளக்கத்தையும் தோ்வுத்துறைக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இந்த ஆண்டிலாவது குழப்பம் இன்றி கற்பிக்க முயல்வோம்

    ReplyDelete
  7. இது ஒரு வினாத்தாள்.இதுக்கு ஒரு வெட்டி விவாதம். முதலில் வினாத்தாள் வடிவமைப்ப மாத்துங்க சார்...

    ReplyDelete
  8. வினாத்தாள் வடிவமைப்பு சரியில்லை, மாற்றவேண்டும் என கூறிவிடுவது எளிது வடிவேல் ஐயா. ஆனால் எவ்வாறு மாற்றினால் நன்றாக இருக்கும் என சிந்தித்து ஆலோசனை கூறுங்கள்! அது தான் சரியான முயற்சியாக இருக்கும்.

    நன்றி!
    -பாடசாலை.

    ReplyDelete

  9. அறிவியல் பாடத்திற்கான வினாத்தாள் 100 மதிப்பெண்களுக்கே உருவாக்கப்பட வேண்டும். ஒரு மாணவர் அறிவியல் பாடத்தில்பெறும் மதிப்பெண்ணை 75 க்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

    1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்
    (ஒவ்வொரு பாடத்திலிருந்தும் இரு வினா என 32 வினாக்கள்) 32*1=32
    2. பொருத்துக
    (தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் பகுதிகளில்
    ஒவ்வொரு பகுதியிலிருந்தும் இரு வினா என 08 வினாக்கள்) 08*1=08
    3. சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்
    (தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் பகுதிகளில்
    ஒவ்வொரு பகுதியிலிருந்தும் எட்டு வினாக்களில் ஐந்து வினாக்கள்
    என 20 வினாக்கள்) 20*2=40
    4. சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்
    (தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் பகுதிகளில்
    ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒரு வினா என 04 வினாக்கள்) 04*5=20

    மொத்தம் 100

    தேர்வெழுதும் அனைத்து மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற (அரசு விருப்பப்படி!!!!!!!) புத்தகத்திலுள்ள வினாக்கள் 50 (அல்லது 67) மதிப்பெண்களுக்கும் (2/3 வினாக்கள்), மீத்திறன் மாணவர்கள் தன் திறமையை வெளிப்படுத்தி தேர்ச்சி பெற (கல்வித்தரம் உயர விரும்பும் கல்வி ஆர்வலர்களின் விருப்பப்படி!!!!!!!) தயாரிக்கப்பட்ட வினாக்கள் 25 (அல்லது 33) மதிப்பெண்களுக்கும் (1/3 வினாக்கள்) அமையுமாறு வினாத்தாள் வடிவமைக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவரின் கல்வித்தரம் உயரும். மனப்பாடம் செய்து 100 க்கு 100 எடுப்பது தவிர்க்கப்படும். மாணவரின் அறிவியல் மனப்பான்மை, சிந்திக்கும் ஆற்றல், பயன்படுத்தும் திறன், சிக்கலைத் தீர்க்கும் தன்மை, . . . போன்றவை வளரும். இவ்வாறு அனைத்து பாட (தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல்) வினாத்தாள்கள் அமைக்கப்பட வேண்டும். மாணவர்கள் பிராய்லர் கோழிகளாக உருவாக்கப்படக்கூடாது.

    ReplyDelete
  10. பத்தாம் வகுப்பு அறிவியல் வினாத்தாளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு சார்பிலான KEY ANSWER ல் வினா எண் 21 ற்கான பதில் தவறாக உள்ளது. இதனை மதிப்புமிகு தேர்வுத்துறை இயக்குநர் அவ்ர்களிடம் இயக்கத்தின் சார்பில் தொலைபேசியில் தெரிவித்தேன். கலந்தாலோசித்து ஆவண செய்வதாக தெரிவித்தார். தற்போது இவ்வினாவிற்கு சரி தவறு என இரு வினாக்களுக்கும் மதிப்பெண் வழங்க உத்தரவிட்ட மதிப்புமிகு தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் அவர்களுக்கு TNGTF நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive