சிலியின் வடக்கு கடற்கரை பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அலகில் 8.2 ஆக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து கடற்கரை நகரமான இகிக்யூவில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.நிலநடுக்கம் ஏற்பட்ட 45 நிமிடங்களில் முதல் சுனாமி அலை தாக்கியதாக சிலி கடற்படை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி சிலி அரசு உத்தரவிட்டுள்ளது.சிலி மட்டுமில்லாமல் ஈக்வடார், கொலம்பியா, பனாமா, கோஸ்டா ரிகா மற்றும் நிகாராகாநாடுகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...