வீடு வீடாக பூத் சிலிப்புகளை விநியோகம்
செய்யும் பணி சனிக்கிழமையுடன் (ஏப். 19) நிறைவடைகிறது. சிலிப்புகள்
கிடைக்காதவர்கள், தேர்தல் அலுவலகங்களுக்குச் சென்று நேரில் பெற்றுக்
கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து,
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு
வாக்குச்சாவடி சீட்டுகள் வழங்கும் பணி கடந்த 11 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு வீடு வீடாகச் சென்று வாக்குச்சாவடி
சீட்டுகளை விநியோகிக்கும் பணியை தேர்தல் அலுவலர்கள் மேற்கொண்டனர்.
இந்த நிலையில், வாக்குச்சாவடி சீட்டுகளை
விநியோகிக்கும் பணி சனிக்கிழமையுடன் (ஏப். 19) நிறைவடைகிறது. இதன்பின்பு,
அவற்றை மண்டல அலுவலகங்களிலும் (மாநகராட்சிகள் என்றால்) தாசில்தார்
அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.
வாக்குச்சாவடி சீட்டுகளை வாக்குப் பதிவு
தொடங்கும் வரை பெற்றுக் கொள்ளாவிட்டாலும் வாக்குப் பதிவு மையங்களிலேயே
அவற்றை விநியோகிக்க தேர்தல் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, வாக்காளர்
பட்டியலில் பெயர் இருந்தால் போதும். வாக்குப் பதிவு தினத்தன்று
மையங்களுக்கு வெளியே தேர்தல் அலுவலர்களால் விநியோகம் செய்யப்படும் வாக்குச்
சாவடி சீட்டுகளை பெற்று வாக்களிக்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...