தேர்தல் குறித்த வகுப்பும், 10ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியும் ஒரே தேதிகளில் இடம்பெறுவதால் பட்டதாரி ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்;
கல்வித்துறையும், மாவட்ட நிர்வாகமும் கலந்தோசித்து தேதிகளில் மாற்றம்செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 10ம் தேதி முதல் 10ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி திருச்சி ரோடு அல்வெர்னியா மெட்ரிக் பள்ளியில் நடந்து வருகிறது; வரும் 19ம் தேதி விடைத்தாள்களை திருத்திமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம், லோக்சபா தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசு பணியாளர்களுக்கு தேர்தல் நடைமுறைகள் குறித்த வகுப்பு இன்றும், நாளையும் கோவை மாவட்டத்தில் நடக்கிறது.இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், பொள்ளாச்சியில் இன்றும், நாளையும் நடக்கும்தேர்தல் நடைமுறை குறித்த வகுப்பில் பங்கேற்க அறிவிக்கப்பட்டுள்ளது; பொள்ளாச்சியிலுள்ள ஆசிரியர்களுக்கு கோவையில் பயிற்சி நடக்கிறது. எனவே, எதில் பங்கேற்பது என்ற குழப்பம் ஆசிரியர்கள் மத்தியில் நிலவுகிறது.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:தேர்தல் நடைமுறைகள் குறித்து ஏப்., 15, 16 ஆகிய தேதிகளில் பொள்ளாச்சியில் நடக்கும் வகுப்பில் பங்கேற்க எங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, கோவையில் கடந்த 10ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இரு நிகழ்வுகளும் ஒரே தேதிகளில் நடப்பதால் எதில் பங்கேற்பது என்ற குழப்பம் உள்ளது.விடைத்தாள் திருத்த காலை 7.00 மணிக்கே வரவேண்டிய நிலையில், பொள்ளாச்சியில் 10.00 மணிக்கு நடக்கும் தேர்தல் வகுப்பில் எப்படி பங்கேற்க முடியும். பங்கேற்காத நிகழ்ச்சிக்கு எங்களுக்கு 'மெமோ' அனுப்பப்படும். இதனால், குழப்பத்தில் உள்ளோம். மாவட்ட நிர்வாகமும், கல்வித் துறை அதிகாரிகளும் கூடி இதற்கு ஓர் தீர்வு காணவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...