Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்கள் ஏமாற்றம்:தேர்தல் பயிற்சி பெற்றவர்களுக்கு பணம் இல்லை; பணியிலும் குழப்பம்

          தேர்தல் பணிக்காக 3 நாள் பயிற்சிக்கு சென்ற ஆசிரியர்களுக்கு கலெக்டர்கள் உரிய பணம் வழங்கவில்லை. தேர்தல் பணிக்கான உத்தரவிலும் குழப்பம் இருந்ததால் பல இடங்களில் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட முடியவில்லை. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் பூத் அதிகாரி உள்ளிட்ட பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 
 
         முன்னதாக அவர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த வாரம் நடந்த 3 நாள் பயிற்சியில் பங்கேற்ற பல ஆசிரியர்களுக்கு உரிய பணம் வழங்கப்படவில்லை. இதுதவிர தேர்தலுக்கு முதல்நாள் இரவுதான் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு தேர்தல் பணிக்கான இடங்களை கண்டுபிடித்து செல்வதில் ஆசிரியர்கள் சிரமப்பட்டனர். கலெக்டர்கள் வழங்கிய உத்தரவில் பல குழப்பங்கள் இருந்ததால் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளுக்கு செல்ல முடியாமல் பல ஆசிரியர்கள் திரும்பினர். மேலும் தேர்தல் பணிக்கு செல்ல வேண்டிய ஆசிரியர்களுக்கு வாகன வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. வாக்குச் சாவடிகளில் அவர்கள் தங்குவதற்கு ஏற்ற இடவசதியும் செய்யப்படவில்லை.
 
          உணவும் பிரச்னைதான். இதேபோல தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்று ஆசிரியர்கள் ஆதங்கப்பட்டனர். மேலும் படிவம் 12பி மற்றும் 12 படிவம் ஆகியவற்றை பூர்த்தி செய்து கொடுத்த ஆசிரியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யவில்லை என்ற குறை உள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் இதுபோல் பாதிக்கப்பட்ட, அலைக்கழிக்கப்பட்ட ஆசிரியர்கள், கலெக்டர்களிடம் புகார் கொடுத்திருக்கின்றனர். இதன் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து பயிற்சிக்கான பணம் வழங்கவும், தபால் வாக்களிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.




1 Comments:

  1. எவ்வளவு தொல்லை வழங்க முடியுமோ அவ்வளவு வழங்கி ஆசிரியர்களை குறிப்பாக பெண் ஆசிரியர்களை தேவையில்லாமல் நூறு கிலோ மீட்டருக்கு அப்பால் பணி ஒதுக்கிய தேர்தல்ஆணையத்தின் நடவடிக்கை கேலிக்கூத்தானது.ஒரு ஆசிரியர் பணியாற்றும் தொகுதிக்குள் பணி வழங்கக்கூடாது என்பது மடத்தனத்தின் உச்சகட்டம்.அதே தொகுதிக்குள் நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகள் உள்ள பொழுது இவர்களால் என்ன தவறு செய்ய முடியும்.ஆசிரியர் சங்கங்கள் உடனடியாக நீதிமன்றத்தை நாடி வருங்காலங்களில் பணியாற்றும் தொகுதிக்குள்ளேயே பணிஒதுக்ககீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive